Home /News /lifestyle /

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சமாளிக்க மற்றும் குறைக்க உதவும் சில எளிய டிப்ஸ்!

முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை சமாளிக்க மற்றும் குறைக்க உதவும் சில எளிய டிப்ஸ்!

முகத்தில் அதிக மெலனின் உற்பத்தியால் ஏற்படும் கரும்புள்ளிகள்

முகத்தில் அதிக மெலனின் உற்பத்தியால் ஏற்படும் கரும்புள்ளிகள்

Skin Pigmentation : அதிகப்படியான மெலனின் உற்பத்தியின் விளைவால் சருமத்தில் ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும் கருந்திட்டுகள் ஏற்படுகின்றன. அவற்றை இவை செய்வது மூலம் கட்டுபடுத்தலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    பலருக்கும் ஏற்படும் பொதுவான சரும பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கிறது கரும்புள்ளிகள் (Skin Pigmentation). இதை ஹைப்பர் பிக்மென்டேஷன் என்றும் குறிப்பிடுகிறார்கள். தோலில் ஏற்படும் கருமையான திட்டுகளை விவரிக்கப் பயன்படும் மருத்துவச் சொல் ஹைப்பர் பிக்மென்டேஷன்.

    அதிகப்படியான மெலனின் உற்பத்தியின் விளைவால் சருமத்தில் ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும் கருந்திட்டுகள் ஏற்படுகின்றன. முகப்பரு தழும்புகள், சூரிய ஒளி, ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் சில மருந்துகளால் ஹைப்பர் பிக்மென்டேஷன் பிரச்சனை ஏற்படலாம். . சீரற்ற தோல் நிறம், வறண்ட மற்றும் டல்லான சருமத்திற்குக் காரணமான பிக்மென்டேஷனை சரி செய்ய எளிய ஹேக்ஸ்களை இங்கே பார்க்கலாம்.

    சன்ஸ்கிரீன்:

    ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைப்பதிலும், வராமல் தடுப்பதிலும் சன்ஸ்கிரீன் முக்கிய பங்கு வகிக்கிறது. கடுமையான வெயிலிலிருந்து சருமத்தைப் பாதுகாப்பதில் சன்ஸ்கிரீன்கள் மிகவும் பயனுள்ளவை. நிபுணர்களின் அறிவுரைப்படி வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு சுமார் 15 - 20 நிமிடங்களுக்கு முன் சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். மேலும் 4-5 மணி நேரத்திற்கும் ஒருமுறை சன்ஸ்கிரீனை பயன்படுத்தலாம். மேலும் சன்ஸ்கிரீனை முகத்திற்கு மட்டுமல்ல வெயிலில் வெளிப்படும் பிற உடல் பகுதியின் சருமத்திலும் பயன்படுத்தலாம்.

    கெமிக்கல் எக்ஸ்ஃபோலியன்ட்:

    கெமிக்கல் எக்ஸ்ஃபோலியண்ட்ஸ் என்பது இறந்த சரும செல்களை அகற்றும் ஆசிட்ஸ் ஆகும். மேலும் புதிய மற்றும் ஆரோக்கிய சருமத்தை வழங்குகின்றன. இவை பிக்மென்டேஷனை குறைக்கப் பெரிதும் உதவுகின்றன. வயதாகும் அறிகுறிகளையும் குறைத்து ஃப்ரீ ரேடிக்கல் சேதத்திலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது. தவிர கெமிக்கல் எக்ஸ்ஃபோலியன்ட் முகப்பரு வடுக்கள், டல்லான சருமம், கரும்புள்ளிகள் போன்றவற்றையும் சரி செய்ய உதவுகிறது. கிளைகோலிக் ஆசிட் மற்றும் லாக்டிக் ஆசிட் போன்றவற்றுடன் கூடிய கெமிக்கல் எக்ஸ்ஃபோலியன்ட், மேல் அடுக்கை அகற்றி செல்களை புதுப்பித்துத் தோல் வளர்ச்சியை அதிகரிக்கிறது.

    Also Read : தினமும் முந்திரி பருப்பு சாப்பிடுவதால் கிடைக்கும் 6 அருமையான நன்மைகள்!

    மாய்ஸ்சரைசர்:

    ஈரப்பதம் மற்றும் ஊட்டமான சருமம் பல சரும பிரச்சனைகளிலிருந்து நம்மைப் பாதுகாக்கும். நாள்தோறும் மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது சருமத்தின் ஒட்டுமொத்த பிரகாசம் மேம்படுவதோடு சூரிய ஒளியால் ஏற்படும் சேதம் மற்றும் ஹைப்பர் பிக்மென்டேஷனை தடுக்கும். கிளிசரின், ஹைலூரோனிக் ஆசிட் மற்றும் பிற மாய்ஸ்சரைசர் ஏஜென்ட்ஸ் உள்ள மாய்ஸ்சரைசரை பயன்படுத்துவது நல்லது.

    ரெட்டினோல் கிரீம்:

    பளபளப்பான சருமத்திற்கும், ஹைப்பர் பிக்மென்டேஷனை குறைக்கவும் ரெட்டினோலை மேற்பூச்சாக பயன்படுத்துவது சிறந்த பலன்களை கொடுக்கும். தினசரி அடிப்படையில் <2% ரெட்டினோல் கொண்ட சீரம்ஸ் மற்றும் நைட் க்ரீம்களை பயன்படுத்துவது சருமத்தில் உள்ள கருந்திட்டுகளை வெகுவாக குறைக்கிறது. அதே போல இரவு நேரங்களில் ரெட்டினோல் அடிப்படையிலான தயாரிப்பை பயன்படுத்தி விட்டு, அடுத்த நாள் சன்ஸ்கிரீனை பயன்படுத்தினால் குறிப்பிடத்தக்கப் பலன்களைப் பெறலாம்.

    ஸ்கின் பிரைட்னிங் பொருட்கள்:

    வைட்டமின் சி அடங்கிய டே க்ரீம்ஸ் அல்லது லோஷன்களை பயன்படுத்துவது சருமத்தைப் பிரகாசமாக்குவதோடு பிக்மென்டேஷன்களை அகற்றுவதில் பயனுள்ளதாக இருக்கும். licorice extracts கொண்ட தயாரிப்புகளைத் தவிர கோஜிக் ஆசிட் அல்லது AHA அடிப்படையிலான தயாரிப்புகள் பிக்மென்டேஷன்கள் மீது அற்புதமாக வேலை செய்து சருமத்தைப் பொலிவாக்குகின்றன.

    தோல் பராமரிப்பு பொருட்களில் கவனம்:

    குறிப்பாக ஸ்கின் பிக்மென்டேஷன் உள்ளவர்களுக்குத் தோல் பராமரிப்பு பொருட்கள் சில நேரங்களில் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக் கூடும். எனவே ஒரு தோல் பராமரிப்பு தயாரிப்பைப் பயன்படுத்தும் முன் அதில் சேர்க்கப்பட்டிருக்கும் பொருட்களைக் கவனமாகப் பார்க்கவும். பயன்படுத்தும் முன் பேட்ச் டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.

     
    Published by:Janvi
    First published:

    Tags: Dark Circles, Moisturizer, Skin Care

    அடுத்த செய்தி