Work From Home : வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கான டிப்ஸ்!

work from home

கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவ தொடங்கியதையடுத்து வீட்டில் இருந்து வேலை பார்ப்பது மீண்டும் அதிகரித்துள்ளது

  • Share this:
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து , உலகெங்கிலும் உள்ள பெரும்பான்மையான நிறுவனங்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய ஊழியர்களை அறிவுறுத்தினர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், நம்மில் பலர் கொரோனா பரவல் விதிமுறைகளை பின்பற்றி மீண்டும் அலுவலகத்திற்கு செல்லத் தொடங்கினோம். ஆனால் தற்போது கொரோனா வைரசின் இரண்டாவது அலை நாடு முழுவதும் பரவ தொடங்கியதையடுத்து வீட்டில் இருந்து வேலை பார்ப்பது மீண்டும் அதிகரித்துள்ளது. வீட்டில் இருந்து வேலை செய்வது பாதுகாப்பாகவும், மிகவும் திருப்திகரமாகவும் இருக்கும். மேலும் உங்கள் குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவது, உங்கள் அன்றாட பயணத்தில் நீங்கள் செலவழிக்கும் நேரத்தை மிச்சப்படுத்துவது மற்றும் வசதியாக பணிபுரிவது என இதில் கூடுதல் நன்மை இருக்கிறது, ஆனால் அதே நேரத்தில் அது சவாலாகவும் இருக்கலாம். ஏனெனில் நம்மில் சிலர் வேலையில் மூழ்கிவிடுவதால், உணவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை, இதனால் நமது ஆரோக்கியம் பாதிக்கும் சூழ்நிலை உருவாகிறது. எனவே வீட்டிலிருந்து வேலை செய்யும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.,

1. உங்கள் உணவை சரியான நேரத்தில் சாப்பிடுங்கள்

தற்போது கொரோனா ஊரடங்கால் கடைகள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே திறந்திருக்கும் என்பதால், நீங்கள் அத்தியாவசியப் பொருட்கள் மட்டுமல்லாது, ஆரோக்கியமான உணவு பொருட்களையும் சேமித்து வைப்பது முக்கியம். மேலும் உங்கள் உணவைத் திட்டமிடுவது மட்டுமல்லாமல், சரியான நேரத்தில் சாப்பிடுவதும் அவசியம். குறைந்தது ஒரு வாரத்திற்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு குறித்து பட்டியலிட்டு சரியான நேரத்தில் சாப்பிடுங்கள். வேலை, மீட்டிங் என சாப்பாட்டை தவிர்ப்பது உங்கள் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதை கருத்தில் வைத்து கொள்ளுங்கள்.

2. உங்கள் பணியிடத்தை மேம்படுத்துங்கள்

நம்மில் பெரும்பாலோர் இப்போது வீட்டில் எங்காவது ஒரு விருப்பமான இடத்தில் அமர்ந்து வேலை செய்கிறோம். அது உங்கள் அறையின் படுக்கையாக கூட இருக்கலாம். ஆனால் இது தவறானது. நீங்கள் வேலை செய்ய என ஒரு தனிப்பட்ட இடத்தை தயார் செய்வது உங்கள் வேலையை மேலும் எளிதாக்கும். அதாவது வீட்டு அமைப்பிலிருந்து உங்கள் அலுவலக பாணிக்கு இடத்தை மாற்றவும். இந்த இடத்தை அழகாக்க நீங்கள் ஒரு சில வீட்டு தாவரங்களை நடலாம். உங்கள் பணியிடன் சலிப்பாக இருக்க கூடாது என்பதை கவனத்தில் வைத்து கொள்ளுங்கள்.

3.  உங்கள் வேலைகளை திட்டமிடுங்கள் :

உங்கள் வேலைகளை திட்டமிடுவது நீங்கள் சிறப்பாக பணியாற்ற உதவும். நீங்கள் செய்ய வேண்டியவற்றை திட்டமிடும் பழக்கத்தை இழக்காதீர்கள், அதுவே ஆண்டு முழுவதும் தொடரும். வீட்டில் இருந்து வேலை செய்யும் பலரும் இதனை சரியாக செய்ய தவறி விடுகின்றனர். ஆனால் நீங்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் போது உங்கள் நாளைத் திட்டமிடுவது மிக முக்கியமானது. நம்மில் அதிக கவனம் செலுத்தி வேலை செய்தவர்கள் கூட வீட்டில் இருந்து வேலை செய்யும் போது சூழலை கொஞ்சம் சவாலாகக் காணலாம். ஏனெனில் வீட்டில் இருக்கும் போது அதிக கவனச்சிதறல் ஏற்படுகிறது. எனவே உங்கள் நாளை சரியாக திட்டமிடுவது அவசியம். அந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய விஷயங்களின் பட்டியலிட்டு கொள்ளுங்கள். நீங்கள் ஒரு பணியை முடிக்கும்போது அவற்றை சரிபார்க்க மறக்காதீர்கள், ஏனென்றால் அதுதான் உங்களை சிறப்பாக பணியாற்ற உதவும்.

4. ஓய்வு அவசியம் :

வீட்டிலிருந்து வேலை செய்வதால் விடுமுறை கேட்க தயங்க வேண்டாம்.  கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்து வேலை செய்யும் நம்மில் பெரும்பாலோர் விடுப்பு எடுப்பதை புறக்கணித்துள்ளோம். உலகளாவிய தொற்றுநோய்களின் போது ஒரு நாள் விடுமுறை எடுப்பது முன்னுரிமை போல் தெரியவில்லை. குறிப்பாக ஊரடங்கு காரணமாக வேலை செய்வதே மேல் என தோன்றுகிறது. ஆனால் நீங்கள் ஓய்வு இல்லாமல் வேலை செய்வது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும். பொதுவாக வேலை செய்யும் நாட்களில் கூட குறிப்பிட்ட மணி நேரங்களுக்கு ஒரு முறை ஓய்வு அவசியம். பயணம் செய்வது பாதுகாப்பானது அல்ல என்று நம்மில் பலர் நினைத்துக்கொண்டிருக்கலாம், எனவே விடுப்பு எடுக்க கூடாது என எந்த அர்த்தமும் இல்லை. எனவே நீங்கள் விடுப்பு எடுத்து ஓய்வு எடுத்து கொள்ளுங்கள்.

5. வீடியோ அழைப்புகளை வரைமுறைப்படுத்தவும் :

வீட்டிலிருந்து வேலை செய்வது சில ஊழியர்களுக்குத் தேவைப்படும் ஒரு சலுகையாக இருக்கும்போது, அடிக்கடி ஆன்லைன் சந்திப்புகள் சிக்கலை ஏற்படுத்துகிறது. இது தகவல்தொடர்பு சோர்வு எனப்படும் புதிய அழுத்தத்தை உருவாக்குகிறது. தகவல் தொடர்பு மற்றும் கான்பரன்சிங் தளங்களின் வரிசையுடன், வீடியோ அழைப்புகளும் தற்போது இணைந்துள்ளது. ஊழியர்கள் தொடர்ந்து தங்கள் நண்பர்கள், மேல் அதிகாரிகள், வாடிக்கையாளர்கள் மற்றும் பலருடன் பேச வேண்டிய நிலை உள்ளது. இந்த தகவல்தொடர்பு சுமை ஊழியர்களின் நாள் முடிவில் ஊழியர்களை சோர்வாக்குகிறது. எனவே தினமும் உங்கள் வீடியோ அழைப்புகளை வரைமுறைப்படுத்துங்கள்.
First published: