முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / Mission Paani | விழித்துக்கொள்ள நேரம் வந்துவிட்டது..! தண்ணீர் பற்றாக்குறை முன்னெச்சரிக்கை அறிகுறிகளை இனியாவது கவனிப்போம்..!

Mission Paani | விழித்துக்கொள்ள நேரம் வந்துவிட்டது..! தண்ணீர் பற்றாக்குறை முன்னெச்சரிக்கை அறிகுறிகளை இனியாவது கவனிப்போம்..!

மிஷன் பானி

மிஷன் பானி

இந்தியாவின் மிகப்பெரும் மக்கள் தொகைக்கு இந்த பருநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் சேமிப்பின்மை ஆகிய இரு விஷயங்களும் வறுமைக்கான மிகப்பெரும் காரணங்களாக இருக்கின்றன.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

தண்ணீர் பற்றாக்குறைகளையும், நெருக்கடி அவலங்களையும் பற்றி விளக்க பல உண்மைகள், புள்ளி விவரங்கள் இருக்கின்றன. அதேசமயம் அவை அனைத்திற்கும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக நாகரீகமும் ஒரு காரணங்களாக சொல்லப்படுகின்றன.

பல வருடங்களாக இந்த வளர்ச்சியை கண்கானித்து வருகிறோம். சில நேரங்களில் இயற்கை பேரிடர்களை சந்திந்துள்ளோம். அல்லது, பருவகால ஏற்ற இறக்கங்களை சந்திக்கிறோம். இந்த நிகழ்வுகள் அனைத்தும் நீர்வளங்கள் குறைந்து வருவதற்கான அறிகுறிகள் என்பதை மறந்துவிடக் கூடாது. இந்த அறிகுறிகள் நமக்கான எச்சரிக்கை மணி என்பதை புரிந்துகொள்ள வேண்டும். 

பொருளாதார நெருக்கடி :  தண்ணீர் பற்றாக்குறை என்பது சிறு பகுதியாக இருக்கும் கட்டமைப்புக் குறைபாடுகளால் நிகழ்வதில்லை. அதனால்தான் தண்ணீர் நிரம்பியிருக்கும்  இடங்களில் வசிப்பவர்களுக்கும் தண்ணீரைப் பெறுவதில் சிக்கல் ஏற்படுகிறது. தண்ணீரை முறையாக சேமித்து வைக்கவும், அவற்றை சரியான முறையில் பராமரிக்கவும் முயற்சிகளை முன்னெடுக்காததுதான் முக்கிய காரணம். அதனால்தான் தண்ணீர் திருட்டு  அதிகரிக்கிறது. நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது. இந்த அக்கறையின்மையால் தண்ணீர் பற்றாக்குறை அதிகரிக்கிறது.

பருவ மாற்றத்தின் தீவிரம் : வானிலை மாற்றங்கள் பருவ மாற்றங்களையும் பாதிக்கின்றன. ஆனால் இதை ஆழமாக கவனித்தால் சுற்றுச்சூழல் சமநிலையின்மையால் ஏற்படும் பாதிப்புதான் என்பது புரியும். இதற்கு முக்கியக் காரணம் வளர்ந்து வரும் கட்டிட கோபுரங்கள்தான். இதனால் நிலத்தில் இயற்கையாக உருவாகும் தண்ணீர் விரிந்து பரவுவதற்கு இடமின்றி தடைபடுகிறது. நிலத்தடி நீர் இல்லாமல் போகிறது. இதனால் மழை பெய்யும் சாத்தியக் கூறுகளும் குறைகின்றன. பருவநிலையில் மாற்றம் உண்டாகிறது.

இந்தியாவின் மிகப்பெரும் மக்கள் தொகைக்கு இந்த பருநிலை மாற்றம் மற்றும் தண்ணீர் சேமிப்பின்மை ஆகிய இரு விஷயங்களும் வறுமைக்கான மிகப்பெரும் காரணங்களாக இருக்கின்றன. அதாவது இந்தப் பெருங்கூட்டமானது பொருளாதார உற்பத்தி திறனை விடுத்து தண்ணீரைத் தேடி அலைவதிலேயே நேரம் செலவழிக்கின்றனர். அப்படி ஒருவேளை தண்ணீர் கிடைத்துவிட்டாலும் அது சுத்தமான குடிநீராக இருப்பதில்லை. இதனால் எண்ணற்ற நோய்கள் உருவாகின்றன.

இதோடு மக்களிடம் நிலவும் சுகாதாரமின்மை, ஆரோக்கியமின்மை சேர்ந்து நிலைமையை இன்னும் மோசமாக்கிவிடுகின்றன. இப்படி தண்ணீர் பற்றாக்குறை, பருவ மாற்றம், தொழில் வளர்ச்சி இல்லாமை , நோய்கள் என மக்களை வறுமையிலும், பட்டியினியின் பிடியிலும் தள்ளுகிறது. இப்படித்தான் இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையதாக இருக்கின்றன.

இந்திய மக்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் விழித்துக்கொள்ள இதுவே சரியான நேரம். பாதிக்கப்படும் மக்களுக்காக தண்ணீரைப் பாதுகாக்கும் முயற்சிகளை செய்ய வேண்டும். சுகாதார முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும். இந்த அறிகுறிகளை நாம் கவனிப்பதே தண்ணீர் பற்றாக்குறையை தடுப்பதற்கான முதல் படியாக இருக்கும். இதனால் அதிகம் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வை மீட்டுத் தரமுடியும்.

சி.என்.என் நியூஸ் 18 மற்றும் ஹார்பிக் இந்தியா முன்முயற்சியான மிஷன் பானி, நீர் பற்றாக்குறை மற்றும் சுகாதாரம் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் செயல்படுகிறது, ஒவ்வொரு இந்திய குடிமகனும் தண்ணீர் மற்றும் சுகாதாரம் இரண்டையும் சம அளவில் பெறுவதற்கு இந்தக் குழு  உறுதிசெய்கிறது. நீங்களும் இந்த மைல்கல் உருமாற்றத்தின் ஒரு பகுதியாக இருங்கள். மேலும் தண்ணீரை சேமிக்கவும் சுகாதாரத்தை மேம்படுத்தவும் உறுதிமொழி எடுங்கள். மேலும் விவரங்களுக்கு Www.news18.com/mission-paani ஐ பார்வையிடவும். 

First published:

Tags: Mission Paani, Water Crisis