Home /News /lifestyle /

Time Management | டைம்டேபிள் போட்டு வாழ்பவரா நீங்கள்.? உங்கள் நேரத்தை உண்மையிலேயே மகிழ்ச்சியாக செலவழிக்கிறீர்களா.!

Time Management | டைம்டேபிள் போட்டு வாழ்பவரா நீங்கள்.? உங்கள் நேரத்தை உண்மையிலேயே மகிழ்ச்சியாக செலவழிக்கிறீர்களா.!

time management

time management

Time Management | ஒரு சில வேலைகளுக்கு திட்டமிடுவது அவசியம் தான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு டைம் டேபிள் போட்டு இந்த நேரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும், அப்போது தான் நிறைய நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அப்படி திட்டமிட்டு எல்லா வேலைகளையும் செய்பவர்களுக்கு உண்மையிலேயே அவர்கள் எதிர்பார்க்கும் ‘ஃப்ரீ டைம்’ சிறப்பானதாக, மகிழ்ச்சியானதாக இருக்கிறதா.?

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கையை, அன்றாட வேலைகளை தங்கள் வசதிக்கு ஏற்றவாறு செய்வார்கள். ஒரு சிலர், காலையில் எப்போது எழ வேண்டும் என்பது முதல் எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும், தூங்க செல்ல வேண்டும் என்பது வரை அனைத்தையும் அட்டவணை போட்டு அதை பின்பற்றுவார்கள். ஷாப்பிங் செல்வது, ஓய்வெடுப்படுதற்குக் கூட டைம் டேபிளை பின்பற்றுவார்கள். ஆனால் ஒரு சிலர் பெரும்பாலும் அட்டவணை எதையும் உருவாக்காமல், தங்கள் வசதிப்படி இஷ்டப்படி வாழ்வார்கள்.

ஒரு சில வேலைகளுக்கு திட்டமிடுவது அவசியம் தான். ஆனால் எல்லாவற்றுக்கும் ஒரு டைம் டேபிள் போட்டு இந்த நேரத்திற்குள் இதைச் செய்ய வேண்டும், அப்போது தான் நிறைய நேரம் கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். அப்படி திட்டமிட்டு எல்லா வேலைகளையும் செய்பவர்களுக்கு உண்மையிலேயே அவர்கள் எதிர்பார்க்கும் ‘ஃப்ரீ டைம்’ சிறப்பானதாக, மகிழ்ச்சியானதாக இருக்கிறதா.?

படிப்பது முதல் வீட்டு வேலை செய்வது, அலுவலக வேலை என்று எந்த வேலையாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்துக்குள் நாம் இந்த வேலையை முடித்து விட்டால் நமக்கு கிடைக்கும் ஃப்ரீ டைமை மிச்சமிருக்கும் நேரத்தில் பிடித்தவாறு செலவிடலாம் என்று அனைவருமே விரும்புவோம். ஆனால் அதற்கு அட்டவணை போட்டு வாழும் பொழுது நமக்கு கிடைக்கும் மிச்ச நேரத்தை பிடித்த விஷயத்தில் செலவிடுகிறோமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஒஹையோ ஸ்டேட் யூனிவர்சிட்டியின் பிஹேவியரல் ஆராய்ச்சியாளர் மற்றும் துணை பேராசிரியரான செலின் மால்கோக் இதைப் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டார்.



* மக்கள் நேரத்தை எந்த அளவுக்கு மதிப்பிடுகிறார்கள்
* அதிகமாக நேரம் இருப்பவர்கள் கூடுதல் நேரத்தில் என்ன செய்கிறார்கள்
* ப்ரீ டைமில் வேறு வேலை செய்கிறார்களா என ஆய்வில் கவனிக்கப்பட்டது.

Also Read : உங்கள் குழந்தைக்கு உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம் என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்..!

நம்மில் பெரும்பாலானவர்கள் பல விஷயங்களில் ஒரேமாதிரியான கண்ணோட்டத்தை கொண்டிருப்போம். அதில் முக்கியமானது நேரம் போதவில்லை என்று குற்றம் சாட்டுவது. எவ்வளவோ வேலை செய்கிறேன், எனக்கு நேரமே போதவில்லை. இதற்கு நேரம் இல்லை என்று எல்லாவற்றிற்கும் நேரத்தின் மீது குற்றம்சாட்டுபவர்கள் இருக்கிறார்கள். எனக்கு மட்டும் ஏன் நேரம் இல்லை, என்னால் ஏன் மற்றவர்களைப் போல விரைவாக வேலையை முடிக்க முடியவில்லை, வேலைகளை முடித்துவிட்டால் தான் ஓய்வாக இருக்க முடியும், எனக்கு எப்போது ஓய்வு எடுக்க முடியும் என்பதுபற்றி பலரும் ஒரே மாதிரியான கண்ணோட்டத்தில் தான் இருக்கிறோம், என்று அவர் தெரிவித்தார்.



நண்பர்களை சந்திப்பது, திரைப்படம் பார்ப்பது, வெளியில் செல்வது, பார்ட்டி உள்ளிட்ட எல்லாவற்றுக்குமே ஒரு முன்கூட்டியே திட்டமிட்டு, அட்டவணை உருவாக்கி ஏற்றார்போல அதை செயல்படுத்தலாம்; இவ்வாறு இருந்தால் தான் தங்களுக்கு பிடித்தவற்றைக் கூட செய்ய முடியும். இதே தான் நேர மேலாண்மை எப்படி இருக்க வேண்டும் என்று குறிப்புகள் கூறுகின்றன. ஆனால் இந்த விஷயம் துருக்கியில் மிகப்பெரிய பிரச்சனையாக உருவானது. துருக்கியில் இருப்பவர்களுக்கு, எதற்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு அட்டவணை போட்டு செயல்படுத்த வேண்டும் என்று ஒரு கண்ணோட்டம் இருக்கிறது!

Also Read : போலித்தனம், பிடிவாதம், நக்கல்.. Toxic பெண்களின் நட்பு, சுபாவம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.!

அதற்கு காரணம் நமக்குப் பிடித்த விஷயத்தை கூட ஒரு அட்டவணை போட்டு இந்த நேரத்தில் இதை செய்ய வேண்டும், இந்த நேரத்தில் எனக்கு பிடித்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று வரிசைப்படுத்தும் பொழுது அது நமக்கு பிடித்தவற்றை மகிழ்ச்சியாக செய்ய முடியாமல் அதை நம்முடைய வேலைகளில் ஒன்றாக மாறிவிடும். வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதுதற்கும் நண்பர்களோடு ஜாலியாக வெளியில் செல்வதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும் என்று அவர் தெரிவித்தார்.



இதனால் தான் எல்லாவற்றுக்கும் அட்டவணை போட்டு வேலை அதைப் பின்பற்றுபவர்கள் தங்களுக்கு பிடித்த விஷயத்தைக்கூட மகிழ்ச்சியாக செய்ய முடிவதில்லை. இவர்களுக்கு ஓய்வு நேரம் என்பது கிடையாது. இந்த நேரத்தில் ஓய்வெடுக்கப் போகிறேன் என்பதை இவர்களால் பின்பற்ற முடியாது. ஓய்வு நேரத்திலும் இவர்கள் வேறு ஏதேனும் ஒரு விஷயத்தில் தங்களை ஈடுபடுத்திக் கொள்வார்கள். எனவே அட்டவணை போட்டு அதன்படி வாழ்பவர்களுக்கு தங்களுடைய ஃப்ரீ டைம் நிறைய கிடைத்தால் கூட அந்த நேரத்தில் இவர்களால் மகிழ்ச்சியாக செலவிட முடியாது என்று இவரது ஆய்வு தெரிவிக்கின்றது.
Published by:Selvi M
First published:

Tags: Lifestyle, Time management

அடுத்த செய்தி