நடிகர் டைகர் ஷிராஃப் கட்டுமஸ்தான உடல் - சீக்ரெட்டை வெளியிட்ட ட்ரெயினர்!

நடிகர் டைகர் ஷிராஃப் கட்டுமஸ்தான உடல் - சீக்ரெட்டை வெளியிட்ட ட்ரெயினர்!

நடிகர் டைகர் ஷிராஃப்

ஜாக்கி ஷெராஃபின் மகனான டைகர் ஷிராஃப் பாலிவுட் திரையுலகில் பாடகராகவும், ஆக்சன் படங்களின் கிங்காகவும் இருந்து வருகிறார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகராக இருக்கும் டைகர் ஷிராஃப் -ன் பிட்னஸ் சீக்ரெட்டை அவரது நீண்ட நாள் ட்ரெயினர் தற்போது வெளியிட்டுள்ளார்.

ஜாக்கி ஷெராஃபின் மகனான டைகர் ஷிராஃப் பாலிவுட் திரையுலகில் பாடகராகவும், ஆக்சன் படங்களின் கிங்காகவும் இருந்து வருகிறார். அவரது நடிப்பு மற்றும் பாடும் திறமைக்கு இருக்கும் ரசிகர்களைவிட கட்டுமஸ்தான உடலை விரும்புவர்கள் அதிகம். அந்தளவுக்கு உடலை பிட்னஸாக வைத்திருப்பார். டைகர் ஷிராப்பின் படங்களிலும் சண்டைக் காட்சிகள் ஒவ்வொன்றும் அனல் பறக்கும் வகையில் இருக்கும்.

கடந்த ஓராண்டாக நாடு முழுவதும் பரவி வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜிம்கள் இயங்கவில்லை. இருந்தபோதும், டைகர் ஷிராஃபின் பிட்னஸ் லெவல் வேற லெவலில் இருக்கிறது. இதுகுறித்து டைகர் ஷிராஃபிற்கு நீண்டநாள் ஜிம் ட்ரெயினராக உள்ள ராஜேந்திர தோல் (Rajendra Dhole) மனம் திறந்து பேசியுள்ளார். மும்பையில் வசித்து வரும் டைகர் ஷிராஃப், கொரோனா காலத்தில் வொர்க் அவுட் செய்வதை ஒரு நாளும் நிறுத்தவில்லை எனத் தெரிவித்துள்ளார். வாரத்தின் 7 நாட்களையும் ஷிராஃப் உடற்பயிற்சிக்காக பயன்படுத்துவதாகவும் ராஜேந்திர தோல் தெரிவித்துள்ளார். 
View this post on Instagram

 

A post shared by Tiger Shroff (@tigerjackieshroff)


லாக்டவுன் அமலுக்கு வந்த பிறகு பெரிய ஜிம்கள் மூடப்பட்டதை சுட்டிக்காட்டிய ராஜேந்திர தோல், அதற்காக தன்னுடைய வீட்டிலேயே மினி ஜிம் ஒன்றை டைகர் ஷிராஃப் அமைத்துள்ள ரகசியத்தை உடைத்துள்ளார். அந்த மினி ஜிம்மில் குறைந்த அளவிலான கருவிகள் இருந்தாலும், அத்தியவசியமான கருவிகளைக் கொண்டு ஷிராஃப் பயிற்சியை தொடர்ந்து வருவதாக ட்ரெயினர் ராஜெந்திரா கூறியுள்ளார்.

Also read... கொழுப்பை வேகமாக எரிக்க விரும்பும் ஆண்கள் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் - ஆய்வில் தகவல்!

உடற்பயிற்சி செய்வதுடன் கட்டுக்கோப்பான டையட்டையும் ஷிராப் தொடர்ந்து கடைபிடித்துவருவதாகவும், அதுவே அவரது கட்டுமஸ்தான உடல் அமைப்புக்கு பின் இருக்கும் சீக்ரெட்ஸ் என தெரிவித்துள்ளார். தற்போதைய பாலிவுட் சினிமாவில் சண்டைக் காட்சிகளையும், நடனத்தை மிகவும் அசால்ட்டாக செய்யக் கூடிய நடிகராக இருக்கிறார் ஷிராஃப். மேலும், முன்னணி பாடகராகவும் வலம் வரும் அவர், பல திரைப் படங்களையும் கைவசம் வைத்துள்ளார். ஹீரோபான்டி 2 (Heropanti 2), பாஹி 4 (Baaghi 4), கணபத் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

அனைத்து படங்களில் ஆக்சன் பேக் படங்களாக இருக்கும் என கூறப்படுகிறது. அவரது கட்டுமஸ்தான உடல் அமைப்பு மற்ற நடிகர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்கிறது. இயக்குநர் ராகேஷ் கிருஷ்ண ஜோஷியின் இயகத்தில் உருவாகும் ஹீரோபாண்டி 2 படத்தில் ஷிராஃபுக்கு ஜோடியாக கீர்த்தி சனான் நடிக்கிறார். பிரபல இயக்குநர் அகமத்கான் இயகத்தில் பாஹி 4 திரைப்படம் உருவாகிறது. விகாஷ் பாகி இயக்கத்தில் உருவாகும் கணபத் திரைபடம் அடுத்த ஆண்டு திரைக்கு வர உள்ளது. இந்த படங்கள் அனைத்திலும் டைகர் ஷிராப் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.'உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: