சாம்பார் என்றாலே அது பருப்பில் தான் செய்ய முடியும். ஆனால் இந்த தக்காளி சாம்பார் செய்ய பருப்பு அவசியமில்லை. கிட்டத்தட்ட இதுவும் சட்னி போல தான். ரோட்டுக்கடையில் இட்லி, பொங்கலுடன் இந்த சட்னி அதிகம் பரிமாறப்படும். சற்று காரம் தூக்கலாக , தக்காளி புளிப்புடன் டேஸ்டில் சூப்பராக இருக்கும். ரெட் கலரில் இருக்கும் இந்த சட்னிக்கு பெயர் தான் தக்காளி சாம்பார். இட்லி, தோசை, சப்பாத்தி, பொங்கல், உப்புமா என அனைத்து வகையான பிரேக் ஃபாஸ்ட் உணவுகளுக்கும் இந்த சட்னி செட் ஆகும்.
இதன் செய்முறையை தான் இப்போது பார்க்க போகிறோம். இந்த ரெசிபி வீடியோ அபூர்வாஸ் நளபகம் என்ற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ளது. பதிவை பார்த்துவிட்டு இன்னிகே இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாருங்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். அதே நேரம், குழந்தைகளுக்கு செய்யும் போது காரத்தை மட்டும் குறைத்து கொள்ளுங்கள். வெயிலுக்கு அதிக காரம் நல்லதுக்கு இல்லை.
தேங்காய் இல்லாமல் கூட இப்படியொரு சூப்பரான சட்னி செய்யலாம்.. உங்களுக்கு தெரியுமா?
தேவையான பொருட்கள்:
தக்காளி, வெங்காயம்,பச்சை மிளகாய், பூண்டு, மிளகாய் தூள், சாம்பார் பொடி, கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை
செய்முறை:
1. முதலில் 7 அல்லது 8 தக்காளி , வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு ஆகியற்றை நறுக்கி கொள்ள வேண்டும்.
2. பின்பு அதை குக்கரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்ற வேண்டும்.
3. அதனுடன் உப்பு, மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து 8 - 9 விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.
4. வெந்தமும் அதில் சிறிதளவு தண்னீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
5. கொதிக்கும் போதே கொத்தமல்லியை சிறிதளவு தூவ வேண்டும்.
6. இப்போது கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கொட்டினால் சூப்பரான டேஸ்டியான தக்காளி சாம்பார் தயார்.
மிளகு குழம்பு ஒருமுறை இந்த ஸ்டைலில் செய்து பாருங்கள். வேற லெவல் டேஸ்ட்!
இந்த சட்னியை 2 நாட்கள் வரை கைப்படாமல் வைத்து சாப்பிடலாம், அரைத்த உடனே ஃபிரிட்ஜில் வைத்து விட வேண்டும். தேவைப்படும் போது சிறிதளவு எடுத்து சூடுப்படுத்தி சாப்பிடலாம். ஆனால் அதை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டாம். பெரியவர்கள் சாப்பிடலாம்.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.