டிக் காய்ச்சல் என்பது நாய்களிடையே மிகவும் பொதுவான தொற்று நோயாகும். ஒட்டுண்ணிகள் செல்லப்பிராணியில் ரோமங்களில் எளிதாக ஒட்டிக்கொள்கின்றன. அதன் பின்னர் நாயின் தோலில் ஒட்டிக்கொண்டு, ரத்தத்தை உறிஞ்சும் வேலையை செய்கின்றன. இதன் விளைவாக, ஒட்டுண்ணிகள் நேரடியாக செல்லப்பிராணிகளுக்கு நோய்களை உருவாக்குகின்றன.
டிக் காய்ச்சல் நாய்களுக்கு மிகவும் தீங்கு விளைவிக்க கூடியது. நாய்களுக்கு உண்ணி தொற்று ஏற்பட்டுளதை கண்டறிதல் மற்றும் சிகிச்சை தாமதமாகிவிட்டால், முக்கிய உறுப்புகளின் செயல்பாட்டை அது பாதிக்கலாம். டிக் காய்ச்சலை அடையாளம் காண்பது கடினமாக இருப்பதால், பிரச்சனை மேலும் அதிகரிக்கிறது. பல சமயங்களில் இது சாதாரண காய்ச்சலாக தவறாக கருதப்படுகிறது.
எனவே, செல்லப்பிராணியை வளர்ப்பவர்கள் நாய்களில் டிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளைக் மிகுந்த எச்சரிக்கையுடன் கவனிக்க வேண்டும். பொதுவாக, உண்ணி கடித்த பிறகு, டிக் காய்ச்சலின் அறிகுறிகள் சுமார் 7 முதல் 21 நாட்களுக்குப் பிறகு கூட தோன்றலாம்.
டிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு ஆரம்ப கட்டத்தில், வழக்கமான நடவடிக்கைகள் குறைந்ததாகவும் மற்றும் சோர்வாகவும் காணப்படும். சில நேரங்களில் அதன் நிறம் வெளிர் நிறமாக கூட தோன்றலாம். தீவிர நிலைகளில், உண்ணிகள் நாய்க்கு அதிக காய்ச்சலை உருவாக்குகிறது மற்றும் மலத்தில் ரத்தக்கசிவு போன்ற அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது.
டிக் காய்ச்சலுக்கான 14 அறிகுறிகள்:
- 103.5க்கு மேல் காய்ச்சல்
- பசியின்மை
- சோம்பல்
- எப்போதாவது வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு
- மூட்டுகளில் விறைப்பு தன்மை
- மூட்டு வீக்கம்
- வீங்கிய நிணநீர் முனைகள்
- இருமல்
- மூச்சு விடுவதில் சிரமம்
- நாசி வெளியேற்றம்
- வயிற்று வலி
- நரம்பியல் பிரச்சினைகள் அல்லது எலும்பு மஜ்ஜை செயலிழப்பு
- மூக்கில் இருந்து ரத்தம் வருவது
- ரத்தம் உறையும் நேரம் குறைவது
செல்லப்பிராணியை வளர்ப்பவர்களும் டிக் காய்ச்சலின் சிக்கலான மற்றும் சிக்கலற்ற நிலைமைகளைப் பற்றி அறிந்திருக்க வேண்டும். சிக்கலற்ற வகை மனச்சோர்வு, பசியின்மை, வெளிறிய ஈறுகள் மற்றும் சிறுநீர் டார்க் நிறத்தில் இருப்பது ஆகியவற்றால் வகைப்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில் உண்ணி தொற்று நாய்களுக்கு மஞ்சள் காமாலையை உருவாக்கலாம். அப்போது நாய்களின் ஈறுகள் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்திற்கு மாறி இருக்கும். சிக்கலான நிகழ்வுகளில், கடுமையான சிறுநீரக செயலிழப்பு, சுவாச பிரச்சனைகள், கால்கள் வீக்கம் மற்றும் நரம்பியல் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது உள்ளன. இந்த தீவிர நிலைகளில் சிகிச்சை தாமதிக்கப்பட்டால், உங்கள் செல்லப்பிராணி அதிர்ச்சி, வாந்தி ஏற்பட்டு, மரணத்தை தழுவவும் வாய்ப்புள்ளது.
வாய், வயிறு மற்றும் கண் இமைகளில் உள்ள ஊதா-சிவப்பு புள்ளிகளும் டிக் காய்ச்சலைக் குறிக்கின்றன. பல நாய்கள் மாறுபட்ட மன நிலை, மோசமான சமநிலை மற்றும் முதுகெலும்பு உணர்திறன் ஆகியவற்றையும் அறிகுறிகளாக காட்டும் என விலங்குகள் நல மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
ALSO READ | ‘மங்கி பாக்ஸ்’ தொற்றால் யாருக்கெல்லாம் ஆபத்து..? இவங்க எல்லோரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்..!
நாய்களில் டிக் காய்ச்சலைக் கண்டறிவதற்கான அறிகுறிகளை பார்த்தால், சரியான நேரத்தில் மற்றும் சரியான சிகிச்சையை அளிக்க வேண்டியது முக்கியமாகும். ஆரம்ப கட்டத்தில் காய்ச்சலைக் கண்டறிந்து உடனடியாக சிகிச்சை அளித்தால், சில சிக்கலுடன் உங்கள் செல்லப்பிராணியை டிக் காய்ச்சலில் இருந்து மீட்டெடுக்க முடியும். சரியான நோயறிதல் இல்லாமல் உண்ணி சிகிச்சையை குணப்படுத்த முடியாது என்பதால், வீட்டில் டிக் காய்ச்சலுக்கு சிகிச்சையளிப்பதில்லை தவிர்ப்பதோடு, கால்நடை மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது கட்டாயமாகும்.
காய்ச்சல் வந்த பிறகு சிகிச்சை அளிப்பதை விட, டிக் காய்ச்சலைத் தடுக்க தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பது நல்லது. செல்லப்பிராணியை வளர்ப்பவர்கள் கால்நடை மருத்துவர்/மருத்துவமனையின் மேற்பார்வையின் கீழ் வழக்கமான எக்டோபராசைட் கட்டுப்பாட்டிற்குச் செல்ல வேண்டும், மேலும் வருடாந்திர ரிவ்யூ மற்றும் பரிசோதனையும் முக்கியமாகும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.