குறைந்துபோன இந்தியர்களின் மகிழ்ச்சி... ஐநா வெளியிட்ட பட்டியல்...!

International Day of Happiness | இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியான சூழலில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Web Desk | news18
Updated: March 21, 2019, 7:08 PM IST
குறைந்துபோன இந்தியர்களின் மகிழ்ச்சி... ஐநா வெளியிட்ட பட்டியல்...!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: March 21, 2019, 7:08 PM IST
ஐநா வெளியிட்ட மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தைவிட பின் தங்கியுள்ளது.

சர்வதேச மகிழ்ச்சி தினமான மார்ச் 20-ம் தேதி அன்று மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலை ஐ.நா வெளியிட்டு வருகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

போர் சூழல், சமூக அமைதி, அரசின் மீதான மக்களின் நம்பிக்கை, வருமானம், வறுமை, தொழில்நுட்ப பயன்பாடு உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு இந்த பட்டியல் தயாரிக்கப்படுகிறது. 156 நாடுகளை ஆய்வு செய்து எடுக்கப்பட்ட இந்த ஆண்டுக்கான பட்டியலில் இந்தியா 140-வது இடத்தில் உள்ளது.


கடந்த ஆண்டு பட்டியலில் 133-வது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பின்னுக்கு தள்ளப்பட்டுள்ளது. பின்லாந்து தொடர்ந்து இரண்டாவது முறையாக பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டென்மார்க், நார்வே, ஐஸ்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகள் பட்டியலில் அடுத்த வரிசையான இடத்தை பிடித்துள்ளது.

பாகிஸ்தான் 67-வது இடத்தையும், வங்காளதேசம் 125-வது இடத்திலும், சீனா 93-வது இடத்திலும் உள்ளது. இந்தியர்களை விட பாகிஸ்தானியர்கள் மகிழ்ச்சியான சூழலில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டியலில் தெற்கு சூடான் நாடு கடைசி இடத்தை (156) பிடித்துள்ளது. மத்திய ஆப்ரிக்க குடியரசு (155), ஆப்கானிஸ்தான் (154), தான்ஸானியா (153)ம் ரூவாண்டா (152) ஆகிய நாடுகள் பட்டியலில் பின் தங்கியுள்ளது.

Loading...
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.

Also See... 
First published: March 21, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...