’நோ ஷேவ் நவம்பர்’ ஆண்களுக்கு மட்டுமல்ல.. பெண்களுக்கும் தான்! வைரலாகும் வீடியோ

பாலின பேதத்தை உடைக்கும் விதமான வீடியோ யூடியூப் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது.

’நோ ஷேவ் நவம்பர்’ ஆண்களுக்கு மட்டுமல்ல.. பெண்களுக்கும் தான்! வைரலாகும் வீடியோ
’நோ ஷேவ் நவம்பர்’
  • News18
  • Last Updated: November 6, 2019, 4:24 PM IST
  • Share this:
’நோ ஷேவ் நவம்பர்’ என்பது ஆண்கள் இந்த நவம்பர் மாதம் முழுவதும் ஷேவ் செய்யாமல் கத்தரிக்கோல், ஷேவர் கருவிகளுக்கு ஓய்வு அளிப்பதாகும். அதாவது அந்த மாதம் முழுவதும் தலை முடி, தாடி, மீசை எதையுமே வெட்டாமல் அப்படியே விடுவார்கள்.

இதன் நோக்கம் நவம்பர் மாதம் முடி வெட்ட செலவழிக்கும் பணத்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கி உதவ வேண்டும் என்பதே..! இந்த நோ ஷேவ் நவம்பர் பிரச்சாரம் உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் பில்லி என்ற ரேசர் பிராண்ட் விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஆண்கள் மட்டும் தான் நோ ஷேவ் நவம்பரை கொண்டாட வேண்டுமா பெண்களும் கொண்டலாம் என்று பாலின பேதத்தை உடைக்கும் விதமான வீடியோவை வெளியிட்டுள்ளது.


பாலின பேதத்தை உடைத்த பெருமை... பார்பர் ஷாப் நடத்தி வரும் சகோதரிகள்...!

அதாவது பெண்களுக்கும் மீசை, தாடி வளர்கிறது. முகத்தில் முடி வளர்கிறது. அதை இந்த சமூகம் என்ன நினைக்குமோ என்ற அச்சத்திலேயே வலிகள் நிறைந்த வழிகளை மேற்கொள்கின்றனர். இனியும் அப்படி செய்யத் தேவையில்லை. அது அசிங்கத்திற்குரிய விஷயமல்ல. தைரியமாக வளருங்கள். நீங்களும் நோ ஷேவ் நவம்பர் பிரச்சாரத்தில் இணையுங்கள் என்று கூறுகிறது.

இந்த வீடியோ யூடியூப் மட்டுமன்றி சமூக வலைதளங்களிலும் வைரலாகப் பரவி வருகிறது. பாலின பேதத்தை உடைக்கும் இது போன்ற வீடியோக்கள் மேலும் அதிகரிக்க வேண்டும் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 6, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்