• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • Eco-friendly தயாரிப்புகளை வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..

Eco-friendly தயாரிப்புகளை வாங்கும் முன் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்..

காட்சி படம்

காட்சி படம்

எக்கோ ஃபிரெண்ட்லி பொருட்களை வாங்குவதற்கு முன்பு இதை தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள்...

  • Share this:
வளர்ச்சி மாற்றங்களை தொடர்ந்து சந்தித்து வரும் இன்றைய உலகில் வாழும் பலர், சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் நிலையான வாழ்விற்கு தேவையான நல்ல மற்றும் புத்திசாலித்தனமான பல முடிவுகளை எடுத்து அதனை செயல்படுத்தி வருகின்றனர். பிளாஸ்டிக் பயன்பாடு மற்றும் எரிபொருள் வாகன பயன்பாடு உள்ளிட்டவற்றை தவிர்த்து சுற்றுசூழலுக்கு உகந்த வகையில் பசுமை வழியில் சிலர் மாற முடிவு செய்கின்றனர்.

எக்கோ ஃபிரெண்ட்லி (eco-friendly) வாழ்வை நோக்கி நீங்களும் மாற முடிவு செய்துள்ளீர்கள் என்றால் அதை சார்ந்து நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் இந்த உலகிற்கு மற்றும் எதிர்கால சந்ததியருக்கு உதவ போகிறது என்பதை மனதில் கொள்ளுங்கள்.

எனினும் நீங்கள் எக்கோ ஃபிரெண்ட்லி தயாரிப்புகளை பயன்படுத்த முடிவு செய்த பிறகு, குறிப்பிட்ட தயாரிப்புகள் உண்மையிலேயே சுற்றுச்சூழலுக்கு உகந்ததா என்பதை கண்டறிவது எளிது அல்ல. நீங்கள் வாங்கும் பொருட்களின் முழு வாழ்க்கை சுழற்சி மற்றும் அப்பொருள் அதன் ஒவ்வொரு கட்டத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என பலவற்றையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். உங்கள் ஷாப்பிங்கில் சிறந்த மற்றும் எக்கோ ஃபிரெண்ட்லி தயாரிப்புகள் இருக்க வேண்டும் என்று விரும்பினால் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களை கீழே பார்க்கலாம்.

மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் :

கழிவுகளை குறைக்க உதவும் மிக சிறந்த வழி கழிவுகளை உருவாக்காமல் இருப்பதே. எனவே நீங்கள் வாங்கும் எக்கோ ஃபிரெண்ட்லி பொருட்கள் மற்றும் பேக்கேஜிங்கில் மீண்டும் பயன்படுத்தக்கூடிய அல்லது மறுசுழற்சி செய்ய கூடியவற்றை கவனிக்க வேண்டும். பொருட்களின் பயன்பாடு மற்றும் அது எவ்வாறு தயாரிக்கப்படுகிறது என்பதையும் முதலில் பார்க்க வேண்டும். Compostable materials கொண்ட தயாரிப்புகள் enduring material-களைப் போலவே இருக்கும்.

also read : அதிகமாக ஆரஞ்சு சாப்பிடுவது பக்கவிளைவுகளை ஏற்படுத்துமா? மருத்துவர்கள் கூறும் விளக்கம்..

ஏனெனில் இரண்டுமே பாதுகாப்பாக பூமிக்கு திரும்ப செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டவை. என்றாலும் compostable material-கள் பூமியோடு மட்க சில சிறப்பு உரமாக்கல் நிலைமைகள் தேவைப்படுகின்றன. எனவே compostable material-களை விட enduring material-கள் பயனப்டுத்தப்பட்ட எக்கோ ஃபிரெண்ட்லி தயாரிப்புகள் சிறந்தவை.

பேக்கேஜிங்கில் கவனம் :

மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் தயாரிக்கப்பட்ட பேக்கேஜிங்கில் பல பொருட்கள் விற்கப்படுகின்றன. எனவே உங்களால் முடிகிற போதெல்லாம் அத்தகைய தயாரிப்புகளை வாங்கலாம். இத்தகைய எக்கோ ஃபிரெண்ட்லி பேக்கேஜிங் கார்பன் தடயங்களை குறைப்பதோடு, திறமையான உற்பத்தி செயல்முறைகள் அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே பேப்பர், கார்ட்போர்ட், வுட் காட்டன் போன்ற மக்கும் பேக்கேஜிங் கொண்ட பொருட்களை தேர்வு செய்ய முயற்சிக்கவும்.

also read : உங்கள் குழந்தைகளை உறுதியானவர்களாக மாற்ற சில எளிய வழிகள்..

சான்றிதழ் :

எக்கோ ஃபிரெண்ட்லி பொருட்கள் தொடர்புடைய மற்றும் தரப்படுத்தப்பட்ட நிர்வாக அமைப்புகளிடமிருந்து அங்கீகாரம் பெற்ற சான்றிதழை கொண்டிருத்தல் அவசியம். சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை வாங்குவது முற்றிலும் புதிய அனுபவமாக இருக்கும். இருப்பினும் எக்கோ ஃபிரெண்ட்லி ஷாப்பிங்கிற்காக நீங்கள் சிறிது நேரம் ஒதுக்குவது, நிலையான வாழ்க்கை முறைக்கான உங்கள் பயணத்திற்கு நல்ல தொடக்கமாக இருக்கும்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: