ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

தீபாவளி வந்தாச்சு.. இந்த விஷயங்களில் கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே!

தீபாவளி வந்தாச்சு.. இந்த விஷயங்களில் கொஞ்சம் உஷாரா இருங்க மக்களே!

தீபாவளி

தீபாவளி

மூன்று நாட்கள், நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால் நகரங்களில் இருந்து கிராம பகுதிகளுக்கு வரும் மக்கள் அருகில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஓடைகளில் குதூகலமாக குளிப்பது வழக்கம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai |

தீபாவளி மாதம் என்றாலே மழையும் சாரலும் சேர்ந்தே வரும். பாட்டாசு வெடிக்கும் நேரம் மழை வந்து விட கூடாது என்று வேண்டிக் கொள்ளும் விளையாட்டுகள் எல்லாம் 90ஸ் கிட்ஷ்களுக்கு நினைவுக்கு வரும்.

அதுவும் காலநிலை மாற்றத்தால் சாரல் வரும் ஐப்பசி காலத்தில் அடை மழையே பொழிந்து வருகிறது. இந்த மாதம் தொடங்கி தினசரி தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பொழிந்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அதிக மழை பொழிவதால் அந்த மலையில் தோன்றும் நதிகளில் எல்லாம் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆங்காங்கே வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

தீபாவளி இந்த வருடம் திங்கள் வருவதால் சனி , ஞாயிறு, திங்கள் என்று 3 நாட்கள் வரிசையாக விடுமுறை வருகிறது. சில பள்ளி கல்லூரிகளுக்கு செவ்வாய் அன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் எல்லோரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.

தீபாவளி 2022: மாசுபாட்டிற்கு பசுமை பட்டாசுகள் தான் புதிய மாற்றா? அவற்றை எப்படி அடையாளம் காண்பது?

சென்னையில் இருந்து லட்சக்கணக்கானோர் இந்த விடுமுறைக்காக தங்கள் சொந்த ஊர்களுக்கு ரயில், பேருந்து, சொந்த வாகனம் என்று பயணித்துள்ளனர். இதனால் சென்னையின் எல்லையில் உள்ள சுங்கச்சாவடிகளில் வண்டிகளின் அணிவகுப்பு அலைமோதியது.

இந்நிலையில் மூன்று நாட்கள், நான்கு நாட்கள் விடுமுறை இருப்பதால் நகரங்களில் இருந்து கிராம பகுதிகளுக்கு வரும் மக்கள் அருகில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஓடைகளில் குதூகலமாக குளிப்பது வழக்கம்.

சரவெடிகளை தவிர்க்க வேண்டும் : மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்!

ஆனால் இந்த முறை பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால், ஏரி மற்றும் அணைகளில் நீரின் அளவு அதிகரிப்பதால் எப்போது திறந்து விடப்படும் என்று சொல்ல முடியாத நிலை உள்ளது. அதீத மழையால் வெள்ளம், சுழல் போன்ற அபாயங்கள் இருப்பதால் மக்கள் நீர்நிலைகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.

அதே போல் பட்டாசு வெடிக்கும் போது பக்கத்தில் ஒரு வாளியில் தண்ணீர் வைத்துக் கொள்ளுங்கள். திடீரென்று தீ விபத்து ஏற்பட்டால் தண்ணீர் ஊற்ற வசதியாக இருக்கும். தீக்காயங்கள் ஏற்பட்டாலும் உடனடியாக முதலுதவிக்கு பயன்படும்.

அதே போல் கம்பி மத்தாப்புகள் வெடித்து முடித்ததும் நீர் வாளியில் போட்டுவிட்டால் குழந்தைகள் காலில் பட்டு சுட்டுக்கொள்ளாமல் இருப்பர். தீக்காயங்கள்  தீபாவளியைக் கொண்டாடுங்கள்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Deepavali, Diwali, Diwali festival, Fire crackers, Flood