பொதுவாக நம்மில் பலர் அலுவக வேலைகளை முடித்து விட்டு சமூக வலைதளங்களில் நேரத்தை வீணடிப்போம். குறிப்பாக காலை 9 மணிக்கு வேலையை தொடங்கி 6 மணிக்கு லாக் அவுட் செய்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். 6 மணிக்கு பிறகு என்ன செய்வதென்று தெரியாமல் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் பலமணி நேரங்கள் செலவு செய்து வருகின்றனர். இப்படி வெட்டியாக பொழுதை போக்காமல் சிறந்த முறையில் உங்களுக்கு பயன்படும் வகையில் மாலை 6 மணிக்கு பிறகு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
வாசிப்பு :
'காலம் பொன் போன்றது' என்று சொல்வார்கள். ஆம், இது நூற்றுக்கு நுறு உண்மை. நமக்கு கிடைக்கும் காலத்தை வீணடித்து விட்டால் அதை திரும்ப பெற முடியாது என்பதை உணருங்கள். நம்மை சுற்றி உள்ளவை டிஜிட்டல் மையமாக மாற தொடங்கியதில் இருந்தே புத்தகங்களை பற்றி நாம் நினைத்து கூட பார்ப்பதில்லை. எப்போதும் டிஜிட்டல் உலகில் மூழ்கி இருக்காமல் நல்ல புத்தங்களை வாசிக்க தொடங்குகள். தினமும் 1 மணி நேரமாவது புத்தக வாசிப்பிற்காக செலவிடுவது உங்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உதவும். இன்றுள்ள பெரிய அறிஞர்கள் பலரும் புத்தக வாசிப்பு பழக்கத்தை கொண்டவர்கள். எனவே தினமும் 10 பக்கங்களாவது வாசிக்க பழங்குங்கள்.
பிடித்ததை செய்யுங்கள் :
மாலை நேரத்தில் வேலையை முடித்த பிறகு உங்களுக்கு பிடித்தவற்றை செய்ய தொடங்குங்கள். உதாரணமாக உங்களுக்கு வரைய பிடிக்கிறது என்றால் வரையுங்கள் அல்லது சமையல் பிடிக்கிறது என்றால் புதுவித ரெசிபிகளை சமைக்க கற்று கொள்ளுங்கள். இதனால் உங்களின் திறன் மேம்படுவதோடு உங்களுக்கு பிடித்ததை செய்த மனநிறைவும் கிடைக்கும்.
நடனம் அல்லது உடற்பயிற்சி
காலையில் இருந்து மாலை வரை ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை செய்வதனால் உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. எனவே மாலை நேரத்தில் உங்களுக்கு பிடித்த உடற்பயிற்சிகளை செய்து வரலாம். அல்லது நடனமாட செய்யலாம். இதனால் உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியம் கிடைக்கும்.
நண்பர்கள் :
மாலை நேரத்தை சிறப்பாக செலவிட நண்பர்களுடன் மனம்திறந்து பேசுங்கள். மேலும் நண்பர்கள் அல்லது குடும்பத்தினருடன் வெளியில் சென்று சிறப்பாக நேரத்தை செலவிடலாம். வெளியில் செல்ல முடியவிலை என்றால் 5-10 நிமிடங்கள் போனில் ஜாலியாக அரட்டை அடித்து பேசி பழங்குங்கள். இவ்வாறு செய்வதனால் உங்களின் வேலையில் இருந்த மன அழுத்தம் மற்றும் கசப்பான அனுபவங்கள் பறந்து போகும்.
வகுப்புகள் :
நமக்கான திறன்களை வளர்த்து கொள்ள நாம் தான் முயற்சிக்க வேண்டும். அந்த வகையில் மாலை நேரத்தில் வேலை செய்து முடித்த பிறகு உங்களுக்கு பிடித்த வகுப்புகளில் சேர்ந்து படியுங்கள். அதாவது புதிதாக ஒரு மொழியை கற்று கொள்ளுங்கள், அல்லது உங்கள் துறைக்கு ஏற்றவாறு புதியவற்றை ஆன்லைன் மூலம் கற்று வாருங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Healthy Life, Work From Home