பாதுகாப்பான உடலுறவை மேற்கொள்ள காண்டம் (condom) முக்கி பங்கு வகுக்கிறது. தேவையற்ற கர்ப்பம் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளை (STIs) தடுக்க பல முறைகள் உள்ளன. அதில், ஆணுறைகள் மிகவும் பிரபலமான மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் முறையாகும்.
ஆணுறைகளை ஆண்கள் வெளிப்புறமாகவும், பெண்கள் பிறப்புறுப்பில் உள்புறமாகவும் பயன்படுத்துவார்கள். ஆணுறைகள் லேடெக்ஸ் (Latex) என்ற பொருளை கொண்டு தயாரிக்கின்றனர். நீங்கள் ஆணுறையைப் பயன்படுத்துவதற்கு முன், சில விஷயங்களை சரிபார்க்க வேண்டும். அந்த விஷயங்கள் என்னென்ன என்பதை இங்கே பார்க்கலாம்:
காலாவதி தேதியைச் சரிபார்க்கவும் : ஆணுறையை பயன்படுத்துவதற்கு முன், அது காலாவதியாகிவிட்டதா என்பதைச் சரிபார்க்க வேண்டும். அது காலாவதியானால் அதைப் பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால், காலாவதியான ஆணுறையை பயன்படுத்தும் போது உடலுறவின் ஏற்படும் உராய்வால் ஆணுறை கிழிந்து விடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
பேக்கிங் சரியாக உள்ளதா? : காலாவதி தேதியை போலவே, பேக்கேஜிங் -யையும் சரிபார்க்கவும். ஆணுறையின் கவர் ஏதாவது சேதப்பட்டிருந்தால் அதை உபயோகிக்க வேண்டாம். அதாவது, ஆணுறை கவர் ஏற்கனவே திறந்திருந்தாலோ, கிழிந்திருந்தாலோ அல்லது துளைகள் இருந்தாலோ பயன்படுத்த வேண்டாம். மேலும், அவற்றை சரியான இடம் மற்றும் விதத்தில் பராமரிக்கவில்லை என்றால், ஆணுறை பாதிக்கும். எனவே, அவற்றை குளிர்ந்த, உலர்ந்த இடத்தில், தீவிர வெப்பநிலை, ஈரப்பதம் அல்லது உராய்வு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கவும்.
CE குறியீட்டை சரிபார்க்கவும் : உங்களிடம் உள்ள ஆணுறை கவரில் CE குறியீடு உள்ளதா என்பதை சரிபார்க்கவும். CE குறியீடு இருந்தால், அது பயன்படுத்த பாதுகாப்பான ஆணுறைகள் என்பதை குறிக்கிறது. இந்த குறியீடு ஆணுறை அட்டையின் பின்புறத்தில் காணப்படும்.
BSI கைட்மார்கை சரிபார்க்கவும் : நீங்கள் உபயோகிக்க இருக்கும் ஆணுறையின் அட்டையில் BSI கைட்மார்க் ( BSI kitemark ) உள்ளதா எனச் சரிபார்க்கவும். இந்த குறியீடு, ஆணுறைகள் முறையாக சோதனை செய்யப்பட்டதை குறிக்கிறது. இந்த கைட்மார்க் என்பது உற்பத்தியாளரின் தரம் மற்றும் உற்பத்தி தரநிலைகள் தொடர்ந்து சோதிக்கப்பட்டு பயன்படுத்த பாதுகாப்பானவை என்பதாகும்.
புதிய ஆணுறைகளை பயன்படுத்தவும் : ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் புதிய ஆணுறை பயன்படுத்த மறக்காதீர்கள். ஒரு முறை பயன்படுத்திய ஆணுறையை மீண்டும் பயன்படுத்த வேண்டாம். அல்லது ஏற்கனவே திறக்கப்பட்ட ஆணுறைகளை பயன்படுத்த வேண்டாம்.
Also Read : பாலியல் உறவு குறித்து நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய இந்திய சட்டங்கள்..!
கவனமாக ஆணுறை கவரை திறக்கவும் : ஆணுறை உறையைத் திறக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். ஆணுறை ரேப்பரை கிழிப்பதற்கு முன், ஆணுறையை ஒரு பக்கமாக பக்கவாட்டிற்கு தள்ளவும். இப்படி செய்யவதால், ஆணுறை சேதமடைவதை தவிர்க்கலாம். அதுமட்டும் அல்லாமல், உங்கள் நகங்களும் ஆணுறையை சேதப்படுத்தலாம். எனவே, கவரை திறக்க பற்கள் மற்றும் நகங்களை பயன்படுத்த வேண்டாம்.
சரியான வழியில் செலுத்தவும் : ஆணுறையை உங்கள் உறுப்பில் சரியான வழியில் அணிவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆணுறையை தவறாக அணிந்தால், அதை கழற்றிப் போடுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஆணுறையை வேறு திசையில் திருப்ப வேண்டாம். ஏனெனில் அதில் விந்தணுக்கள் இருக்கலாம். இல்லையெனில், புதிய ஆணுறை பயன்படுத்தலாம்.
சரியான அளவைப் பயன்படுத்தவும் : ஆணுறைகள் பல அளவுகளில் கிடைக்கின்றன. பெரிய ஆணுறையை பயன்படுத்துவதால், உடலுறவின் போது அது எளிமையாக அவிழும். அதே சமயம் சிறியதாக இருக்கும் ஆணுறை மிகவும் இறுக்கமாகவும் சங்கடமாகவும் உணரலாம். இறுக்கமாக இருந்தால் அது அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே சரியான அளவை தேர்வு செய்ய வேண்டியது அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Condom, Sexual Wellness