முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / ​நீண்ட ஆயுளுக்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள்… அறிவியல் ரீதியாக நிரூபணம்..!

​நீண்ட ஆயுளுக்கு இந்த உணவுகளை சாப்பிடுங்கள்… அறிவியல் ரீதியாக நிரூபணம்..!

ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியான உணவுகள் நாள்பட்ட நோயின் அபாயத்தில் இருந்து நம்மை பெருமளவில் காக்கும் என்கின்றனர்.

ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியான உணவுகள் நாள்பட்ட நோயின் அபாயத்தில் இருந்து நம்மை பெருமளவில் காக்கும் என்கின்றனர்.

ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியான உணவுகள் நாள்பட்ட நோயின் அபாயத்தில் இருந்து நம்மை பெருமளவில் காக்கும் என்கின்றனர்.

 • 1-MIN READ
 • Last Updated :

  ஆயுட்காலத்தை நீட்டிக்க உதவும் ஏராளமான சத்தான உணவுகள் உள்ளன. சத்தான, ஆரோக்கியம் நிறைந்த உணவை உட்கொள்வது நீண்ட ஆயுளோடு வாழ உதவும் என பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டவற்றை இங்கே பார்க்கலாம்.

  ஓட்ஸ்:

  பலருக்குப் பிடித்த சுலபமான காலை உணவுகளுள் ஒன்று ஓட்ஸ். ஓட்மீல் உணவு நீண்ட ஆயுளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டது. ஆறு வாரங்களுக்கு ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலம் இதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஒரு நாளைக்கு 100 கிராம் ஓட்ஸ் சாப்பிடுபவர்களுக்கு எல்டிஎல் கெட்ட கொழுப்பு மற்றும் உடல் எடை குறைந்தது கண்டறியப்பட்டுள்ளது.

  ப்ளூபெரீஸ்:

  நீண்ட ஆயுளுக்கு ஓட்மீலில் சில ப்ளூபெரிகளைச் சேர்த்து சாப்பிடுங்கள். அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுகள் நீண்ட ஆயுளுக்கு எவ்வாறு உதவும் என்பதை ஆய்வு செய்தது. ப்ளூபெரி ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் நிறைந்த பழங்களுள் ஒன்றாகும். “ஜர்னல் ஆஃப் அக்ரிகல்ச்சர் அண்ட் ஃபுட் கெமிஸ்ட்ரி” ஆய்வின் படி, இந்த ஆரோக்கியமான பழத்தை அடிக்கடி சாப்பிடுவது உங்கள் வாழ்க்கையின் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

  Must Read | பெண்ணுறுப்பு குறித்த 3 கட்டுக்கதைகளும்… உண்மைகளும்…

  கீரைகள்:

  சில கீரை வகைகள் ஊட்டச்சத்து அடர்த்தியான உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஊட்டச்சத்து குறித்த ஆய்வில், கீரைகள் எப்படி சிறந்த ஊட்டச்சத்து அடர்த்தியான உணவுகளில் ஒன்றாகும் என்பது குறித்து மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஊட்டச்சத்துக்கள் அடர்த்தியான உணவுகள் நாள்பட்ட நோயின் அபாயத்தில் இருந்து நம்மை பெருமளவில் காக்கும் என்கின்றனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  முழு தானியங்கள்:

  கார்போஹைட்ரேட்டுகள் நீண்ட ஆயுளை வழங்குமா? பதில், ஆம். சமீபத்திய ஆய்வு ஒன்றில், முழு தானியங்களை உட்கொள்வது எவ்வாறு நீண்ட ஆயுளுக்கு வழிவகுக்கும் என்பதை கூறியுள்ளது. இந்த ஆய்வில், அமெரிக்கர்களுக்கான தற்போதைய உணவு வழிகாட்டுதல்களின்படி, ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று இரண்டு வேளை முழு தானியங்களைச் சாப்பிடுவது இன்னும் ஆரோக்கியமான அளவு என்று கண்டறிந்துள்ளனர்.

  First published: