HOME»NEWS»LIFESTYLE»these 4 zodiac signs are most likely be cleanliness freaks esr ghta

எனக்கு சுத்தம்தான் முக்கியம் என பேசும் இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரியுமா..? 

இது அப்செசிவ்-கம்பல்ஸிவ் டிஸார்ட்டர் (Obsessive-Compulsive Disorder (OCD)) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள அறிகுறிகளாகும்.

எனக்கு சுத்தம்தான் முக்கியம் என பேசும் இந்த ராசிக்காரர்களைப் பற்றி தெரியுமா..? 
மாதிரி படம்
  • Share this:

அழுக்கைச் சுற்றியுள்ள பயம், ஒழுங்கான மற்றும் சமச்சீர் முறையில் உங்களை சுற்றியுள்ள விஷயங்களை ஒழுங்குபடுத்துதல், அமைதியான மேற்பார்வை, அசிங்கமான ஆடைகளை பட்டியலிட்டு நீக்குதல் ஆகியவை நீங்கள் அப்செசிவ்-கம்பல்ஸிவ் டிஸார்ட்டர் (Obsessive-Compulsive Disorder (OCD)) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ள அறிகுறிகளாகும். இது நம்மில் மிகச் சிறந்தவர்களுக்கு மட்டும் ஏற்படும் ஒரு கோளாறு.

நம் ஜோதிடத்தில் ஒவ்வொரு ஸ்தானமும் நமக்கு ஒவ்வொரு விஷயங்களை உணர்த்தும். இதை நாம் எளிமையாக புரிந்து கொள்ள நமது முன்னோர்கள் நமக்கு பல விஷயங்களை வழங்கி விட்டுச் சென்றிருக்கிறார்கள். அதன்படி ஒவ்வொரு ராசியின் 6ம் வீடு கடன் - உடல்நலம் - மன வலி - உடல் வலி போன்ற விஷயங்களை நமக்குச் சொல்வதோடு சுத்தத்தையும் வலியுறுத்துகிறது.

இந்த கோளாறால் அவதிப்படுபவர்கள் அசிங்கமான மற்றும் ஒழுங்கமைக்கப்படாத விஷயங்களில் அதிகம் கவலை மற்றும் மன அழுத்தத்தை கொண்டிருப்பார்கள். மேலும் இது மிகவும் பொதுவான கோளாறுகளில் ஒன்றாகும், இந்த நபர்கள் கிளீன் பிரீக்ஸ் (Cleanliness Freaks) என்று அழைக்கப்படுகிறார்கள், இவர்களை சார்ந்த பொருட்களை அல்லது விஷயங்களை நேர்த்தியாக அல்லது தங்கள் ரூமை ஒழுங்கான முறையில் மாற்ற முயல்வார்கள். இரைச்சலாகவோ, ஒழுங்கமைக்கப்படாமலோ அல்லது மோசமாக இருக்கும் ஒரு அசுத்தமான சூழலில் இவர்களால் வாழ முடிவதில்லை.



கர்ப்பகாலத்தில் யோகா செய்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா..?

சுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் ராசிக்காரர்கள் குறித்து இங்கு காண்போம்...

கன்னி ராசிக்காரர்கள் (Virgo) :

கன்னி ராசிக்காரர்கள் (Virgo) மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் நேர்த்தியான ராசி அடையாளமாக இருப்பார்கள். ஒரு கன்னி ராசியினருடன் வாழ்வது அல்லது அவர்களுடன் ஒரு அறையைப் பகிர்வது உண்மையில் சவாலானது, ஏனெனில் அவர்கள் தாங்கள் இருக்கும் ரூமை நேர்த்தியாகவும், அவர்களின் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்திருக்கவும் தொடர்ந்து உங்களுக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் எல்லாவற்றிற்கும் மிகவும் முறையான மற்றும் துல்லியமான அணுகுமுறையைக் கொண்டிருப்பார்கள். இதனால் நீங்கள் எரிச்சலடையலாம், ஏன் சில நேரங்களில் உங்கள் இருவருக்கும் சண்டை கூட வரலாம்.



ரிஷப ராசிகாரர்கள் (Taurus) :

ரிஷப ராசிக்காரர்களும் (Taurus) மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டவர்கள். இவர்களால் அழுக்கு நிறைந்த ஒரு சூழலில் வாழவே முடியாது. இவர்கள் எப்போதும் தங்கள் இருப்பிடத்தை சுகாதாரமான மற்றும் அடிக்கடி சுத்தம் செய்ய விரும்புவார்கள். சுத்தத்திற்கு பிடிவாதமாகவும் நெகிழ்வாகவும் இருப்பது அவர்களின் வலுவான குணநலன்களில் ஒன்றாகும்.

மகர ராசிக்காரர்கள் (Capricorn):-

மகர ராசிக்காரர்கள் (Capricorn) மிகவும் நுணுக்கமானவர்கள். இவர்களின் அணுகுமுறையில் பலவும் ஒழுங்கமைக்கப்பட்டவையாகத்தான் இருக்கும். எல்லாவற்றையும் இந்த மகர ராசிக்காரர்கள் (Capricorn) திட்டமிட வேண்டும் என்று விரும்புகிறார்கள், இவர்கள் முற்றிலும் அவசியமான குறைந்தபட்ச விஷயங்களைக் கொண்ட ஒரு குறைந்தபட்ச வாழ்க்கை முறையையும் விரும்புகிறார்கள். எனவே, மகர ராசிக்காரர்கள் ஒரு சுத்தமான மற்றும் முறையான வாழ்க்கை முறையை பின்பற்ற விரும்புகிறார்கள்.



சிம்ம ராசியினர் (Leo) :

சிம்ம ராசிக்காரர்கள் (Leo) தங்களை சுற்றியுள்ள அனைவரையும் ஒரே வரிசையில் ஒழுங்கமைக்க விரும்புகிறார்கள், மேலும் தங்கள் ரூம்களை அழுக்கு துணிகளைக் குவித்து பார்க்க இவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் எல்லாவற்றையும் அதனதன் சொந்தமான இடத்தில் வைக்க அயராது பாடுபடுவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் மிகவும் குறிப்பானவர்கள், எனவே, வேறு யாராவது இவர்களது அறைக்குள் அசுத்தம் செய்ய நினைத்தால் நிலைமை வேறாக மாறிவிடும். இவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் ஒவ்வொரு குணாதிசயம் இருக்கும். சிலர் அதிகமாகப் பலருடன் பழக வேண்டும் என்று நினைப்பார்கள். சிலர் அமைதியாக யாருடனும் பழகாமல் இருப்பார்கள். சிலரோ தங்களை சுற்றி இருக்கும் பொருட்களை சுத்தமாக வைத்திருக்க நினைப்பார்கள். அந்த வகையில் மேலே குறிப்பிட்ட ராசியினர் அவர்களுக்கான குணாதிசயத்துடன் இருப்பார்கள். அந்தவகையில் நீங்கள் மேற்சொன்ன ராசிக்கார்களிடம் ஜாக்கிரதையாக இருப்பது நலம் தரும்.
Published by:Sivaranjani E
First published: