சிறுவர்கள் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தர். அப்போது அந்த வழியாக மருள் நீக்கிக்யார் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்த சிறுவர்கள். கூடிப் பேசி, அவரிடம் கதை கேட்பது என முடிவெடுத்தனர்.
சிறுவர்கள் மருள் நீக்கியாரை அழைத்து கதை சொல்லுமாறு கேட்டனர். சிறுவர்களின் ஆர்வத்தை பார்த்த மருள் நீக்கியார், "என்ன மாதிரியான கதை வேணும்?" என்று கேட்டார். "எதுனாலும் சாரி" என்று சிறுவர்கள் கூறினார்கள்.
பின்னர் மருள் நீக்கியார் கதை சொல்லத் தொடங்கினார். சிறுவர்கள் சுற்றி அமர்ந்து கொண்டனர்.
"ஒரு ஊரில் நீச்சல் வீராங்கனை ஒருவர் இருந்தார். அவருக்கு குளத்து நீச்சல், ஆற்று நீச்சல், கடல் நீச்சல் என பல்வேறு பட்ட இடங்களில் நீச்சல் அடிக்கத் தெரியும். பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களையும் பரிசுகளையும் வாங்கிக் குவித்தவர்.
ஒருநாள் உங்களைப் போன்ற சிறுவர்கள் ஆற்றங்கரையில் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் கால் வழுக்கி தண்ணீரில் விழுந்துவிட்டான். அப்போது அந்த வழியாக வந்துகொண்டிருந்த நீச்சல் வீராங்கனைக்கு, அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
“இதை கவனித்த ஒரு முதியவர், அந்த பெண்ணிடம், நீங்கள்தான் நீச்சல் வீராங்கனையாச்சே சிறுவனை காப்பாற்றுங்கள்” என்று கேட்டுக் கொண்டார். நான் அதற்கான உடையை அணிந்திருக்கவில்ல என்று கூறி தயங்கிய வீராங்கைணை பின்னர் ஆற்றில் குதித்து, சிறுவனை காப்பாற்ற முயன்றார். நீண்ட நேர முயற்சித்து சிறுவனை கரைக்கு இழுத்து வந்தாள். ஆனால் அவன் இறந்தவிட்டான்.
இப்படித்தான் திறமைசாலிகள் பலர் நம்மை சுற்றி வாழ்ந்து வருகின்றனர். தான் கற்ற கலையை, தனித்திறனை உரிய நேரத்தில் பயன்படுத்துவதில்லை. நம்மிடம் இருக்கும் திறமையை உரிய நேரத்தில் பயன்படுத்த வேண்டும். வாழ்க்கையில் பயன்படுத்தப்படாத படிப்பும், அறிவும் இப்படித்தான் துன்பத்தைத் தருவதாக அமைந்துவிடும். நீங்கள் எல்லோரும் அடுத்தவர்களுக்கு ஏற்படும் துன்பத்தை தன்னுடைய துன்பமாக எண்ணி, செயல்பட வேண்டும். உரிய நேரத்தில் உதவி புரிய வேண்டும்” என்றார்
மருள் நீக்கியார்.
Read More: பிள்ளைகளுக்கு வாழ்க்கையை கற்றுக்கொடுங்கள்... அடிதாங்கும் கல்தான் சிற்பமாகிறது!
அப்போது ஒரு சிறுவன் “போன வாரம் ஒரு பாட்டி திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அப்போ, அங்க வந்தவங்க பலபேர் அந்த பாட்டிய செல்போனில் வீடியோ எடுத்தாங்க. ஆனா யாருமே அவுங்கள ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டுப்போகல. அப்போ அந்த வழியா வந்த அக்கா ஒருத்தங்கதான் அந்த பாட்டிய ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டுப்போனாங்க. நான் கூட வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருந்தேன். நான் கூட அந்த பாட்டிக்கு உதவி செய்யல, நானும் வேறு யாராவது செய்வாங்கனுதான் பார்த்தேனே தவிர நான் எதுவும் செய்யல. அப்படி இருந்தது தப்புதான” என்று வருத்தத்துடன் கூறினான் சிறுவன்.
Must Read : மனைவியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவர் ஒரே நாளில் மாறிய கதை!
இதைக் கேட்டு சிறுவனின் முதுகில் தட்டுக் கொடுத்து சிரித்துக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டார் மருள் நீக்கியார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.