• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பணிசுமைக்கு நடுவே கிடைக்கும் குட்டி தூக்கம் - WFH-க்கு நன்றி சொல்லும் ஊழியர்கள்!

பணிசுமைக்கு நடுவே கிடைக்கும் குட்டி தூக்கம் - WFH-க்கு நன்றி சொல்லும் ஊழியர்கள்!

மாதிரி படம்

மாதிரி படம்

பெரும்பாலானோர் படுக்கையில் உட்கார்ந்தபடி அல்லது படுத்தபடியே தான் வேலை செய்வர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
வேலை வேலை என தூங்க கூட நேரமின்றி பலரும் அலுவலகத்திற்கு ஓடிக்கொண்டிருந்த ஓட்டத்தை ஒரு வருடத்திற்கும் மேலாக சற்றே தடு நிறுத்தி வைத்துள்ளது கோவிட்-19 தொற்று. கணினியை அடிப்படையாக கொண்டு வேலை பார்க்கும் பெரும்பாலானோர் தற்போது அலுவலகம் செல்லாமல் வீட்டிலிருந்தபடியே வேலை பார்த்து வருகின்றனர். வீட்டிலிருந்து வேலை பார்ப்பதில் சில சிரமங்கள் இருந்தாலும் பலரும் தொற்று நோய்க்கு நன்றி சொல்கின்றனர். ஏனென்றால் விடுமுறை நாளில் மட்டுமே அனுபவிக்க கூடிய மதிய நேர குட்டி தூக்கத்தை வேலைகளின் நடுவே தினமும் தந்துள்ள காரணத்திற்காக.

வீட்டில் இருந்து வேலை செய்தாலும் கூட சில நாட்களில் நீண்ட நேர ஆன்லைன் மீட்டிங் மற்றும் குரூப் கால் உள்ளிட்டவை குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடித்து ரெஸ்ட் எடுக்க விடாது. இந்நிலையில் பெரும்பாலானோர் படுக்கையில் உட்கார்ந்தபடி அல்லது படுத்தபடியே தான் வேலை செய்வர். இப்படி வீட்டிலிருந்து வேலை செய்யும் போது 20 நிமிடங்கள் முதல் 1 மணி நேரம் வரை ஊழியர்கள் குட்டி தூக்கம் போடுவது அவர்களின் எனர்ஜி லெவலை அதிகரிக்க செய்யும் எளிய வழியாக இருப்பதாக நிபுணர்களை கூறுகின்றனர். நாப்பிங் என்றழைக்கப்படும் குட்டி தூக்கமானது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், சோர்வை குறைப்பதற்கும், நினைவு திறனை மேம்படுத்தவும் உதவும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது.

இப்போது இங்கே ஒரு பெரிய கேள்வி உங்களுக்கு எழலாம். யார் தான் வேலை நேரத்தின் போது தூங்க விடுவார்கள். நிறுவன முதலாளி அல்லது மேலாளர் கண்டுபிடிக்காமல் தான் குட்டி தூக்கம் போடுவது எப்படி என்று கூறுகிறார் மனிதவளத்துறையில் பணிபுரியும் காஜல் சர்மா. என்னைப் பொறுத்த வரை, பிற்பகல் 3 மணி என்பது குட்டி தூக்கம் தூங்க மிகவும் பொருத்தமான நேரம். ஏனென்றால் என் முதலாளி அந்த நேரத்தில் குறைந்த சுறுசுறுப்புடனே காணப்படுவார். குறிப்பாக மதியம் 3 மணியில் இருந்து சுமார் 1 மணி நேரம் என்னிடம் அவர் எந்த வேலையும் வாங்குவதில்லை. இதை வைத்து பார்த்தால் அவரும் கூட குட்டி தூக்கம் போடுகிறார் என்பது போல எனக்கு வலுவாக தோன்றுகிறது.

WFH-ன் போது நீங்களும் உங்கள் வேலை நேரத்தின் இடையில் பிரேக் எடுக்க அல்லது சிறிது நேரம் தூங்க விரும்பினால் உங்கள் முதலாளி அல்லது மேனேஜருக்கு நீங்கள் தேவைப்படும் நேரம் என்ன என்பதை கவனித்து அதன் மூலம் ரெஸ்ட் எடுப்பதற்கான நேரத்தை ஃபிக்ஸ் செய்யுங்கள். உங்கள் பாஸ் உங்களை அழைக்கும் நேரம் உள்ளிட்ட பிற தேவையான தகவல்களை நீங்கள் வரிசைப்படுத்தி நேரத்தை கணித்து வைத்து கொள்வது உங்களை டென்ஷனின்றி நிம்மதியாக தூங்க செய்யும் என்கிறார் இவர்.

Also read... நாள் முழுவதும் மவுசை பிடித்து மணிக்கட்டு வலிக்கிறதா..? காரணங்களும்..சிகிச்சை முறைகளும்..!

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது படுக்கையில் உட்கார்ந்து நீங்கள் வேலை செய்தாலும் கூட, தூக்கம் என்று வரும் போது அப்படியே மெத்தையில் படுப்பதற்கு பதில் சோபா அல்லது வேறு ஏதாவது படுப்பதற்கு வசதியான இடத்தில தூங்குவது அருமையான யோசனை என்று பலர் பரிந்துரைக்கின்றனர். இவ்வாறு செய்வது உங்களை ஆழ்ந்த உறக்கத்திற்கு கொண்டு செல்லாமல், லேசான உறக்கத்தில் வைத்திருக்க உதவும் என்று காரணம் சொல்கின்றனர். குறிப்பாக தூக்கம் களைந்து விட போகிறதென்று அவசரப்பட்டு மொபைலை சைலண்ட் மோடில் வைத்து விடாதீர்கள். அப்படி செய்வது வேலைக்கே மிக பெரிய சிக்கலை ஏற்படுத்தி விடும் என்றும் எச்சரிக்கின்றனர்.

அதே போல உணவு இடைவேளையின் பொது கூட உங்களால் சிறிது நேரம் தூங்க முடியும். உதாரணமாக 30 முதல் 40 நிமிடங்கள் லஞ்ச்பிரேக் என்றால், 15 நிமிடங்களுக்குள் சாப்பிட்டுவிட்டு மீதமுள்ள நேரத்தில் கூட நீங்கள் குட்டி தூக்கம் போட்டு எழுந்து உற்சாகமுடன் வேலைகளை தொடரலாம். அன்றைய வேலைகளை இரண்டாக பிரித்து கொண்டு மதியத்திற்குள் ஒரு பாதி வேலையையும், முடிந்தால் முக்கால்வாசி வேலைகளையும் குட்டி தூக்கம் தூங்கி எழுந்த பின் மீதி வேலைகளையும் முடித்து விட்டால் குற்றவுணர்ச்சி இல்லாமல் இருக்கலாம் என்றும் சிலர் யோசனை கூறி உள்ளனர்.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: