ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு முக்கியம்...

குழந்தைகளின் வளர்ப்பில் பெற்றோரின் பங்கு முக்கியம்...

பெற்றோர்கள்

பெற்றோர்கள்

உலக அளவில் பெற்றோர்களின் தியாகத்தை ஐ.நா அங்கீகரித்துள்ளதுடன், குடும்ப நட்பு பணியிடக் கொள்கைகளையும் நடைமுறையில் அறிமுகப்படுத்துமாறு அனைத்து நிறுவன முதலாளிகளையும் வலியுறுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளோடு உட்கார்ந்து பேச வேண்டும். விளையாட வேண்டும். குடும்பத்தோடு உட்கார்ந்து பேச வேண்டும். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். பெற்றோர்கள் பிஸியாகி விடுவதால் நிறைய குழந்தைகள் கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட், பாக்கு போன்ற போதை வஸ்துகளுக்கு ஆளாகிறார்கள். மனதில் உள்ள பிரச்னையை வெளியில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.

குழந்தைகளை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பெற்றோருக்கு முதன்மை பொறுப்பு உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆளுமையின் முழுமையான இணக்கமான வளர்ச்சிக்கு, அவர்கள் ஒரு குடும்ப சூழலிலும், மகிழ்ச்சி, அன்பு மற்றும் புரிதல் கொண்ட சூழ்நிலையிலும் வளர வேண்டும் என்பது நோக்கமாக இருந்தது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் உலகெங்கிலும் பெற்றோர்களின் பொறுப்புகளை அதிகரித்துள்ளது. இதுகுறித்து ஐ.நா. குறிப்பிட்டுள்ளதாவது, குடும்பத்தின் தொகுப்பாளர்களாகவும், நமது சமூகங்களின் அஸ்திவாரமாகவும் இருப்பதால், வீடுகளில் இருந்து பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் மீது கவனிப்பை செலுத்துவதற்கும் தங்கள் குடும்பங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பதும் பெற்றோரின் பொறுப்பாக உள்ளது.

அதே நேரத்தில், பெற்றோர்களும் தங்கள் சொந்த வேலை பொறுப்புகளைத் தொடர வேண்டும். அவர்கள் தொடர்ந்து தங்கள் குழந்தைகளுக்கு நிதி சார்ந்த விஷயங்கள், மனம், உணர்ச்சி மற்றும் பல அத்தியாவசிய ஆதரவை வழங்குகிறார்கள். கூடுதல் வேலை, மற்றும் பொறுப்பு இருந்தபோதிலும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பதை உறுதி செய்கிறார்கள்.

மேலும் படிக்க... ஜூன் மாதத்தில் குழந்தைகளுக்கு காதணி விழா நடத்த நல்ல தேதி மற்றும் நல்ல நேரம் தெரிய வேண்டுமா?

உலக அளவில் பெற்றோர்களின் தியாகத்தை ஐ.நா அங்கீகரித்துள்ளதுடன், குடும்ப நட்பு பணியிடக் கொள்கைகளையும் நடைமுறையில் அறிமுகப்படுத்துமாறு அனைத்து நிறுவன முதலாளிகளையும் வலியுறுத்தியுள்ளது. இத்தகைய முற்போக்கான நடைமுறைகள் மூலம், நிறுவனங்கள் மற்றும் தொழிசாலைகள் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், அதே நேரத்தில் தங்கள் ஊழியர்களுக்கு முறையான ஆதரவை வழங்கவும் முடியும் என்று ஐ.நா நம்புவதாக தெரிவித்துள்ளது.

குழந்தைகளிடையே பல எதிர்மறையான விளைவுகளை குறைக்க உழைக்கும் குடும்பங்களை ஆதரிப்பது எவ்வளவு அவசியம் என்பதை இந்த தொற்றுநோய் நமக்கு விளக்கியுள்ளது என ஐ.நா.சபை குறிப்பிட்டுள்ளது.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Published by:Vaijayanthi S
First published:

Tags: Child, Parents