HOME»NEWS»LIFESTYLE»the biggest 6 mistakes you do while working from home skv ghta

Work From Home-இல் மறந்து கூட இந்த விஷயங்கள செய்யாதீங்க.. உங்கள் வேலைக்கே உலை வைக்கும் செயல்கள் என்னென்ன?

IT கம்பெனிகள் மட்டுமல்ல, பெரும்பாலான நிறுவனங்கள் ஒர்க் ப்ரம் ஹோம் (WFH) அதாவது வீட்டில் இருந்து வேலை பார்க்கும் வசதியை தங்கள் ஊழியர்களுக்கு கொடுத்து விட்டன. அந்தவகையில் ஒர்க் ப்ரம் ஹோமில் நீங்கள் மறந்தும் செய்யக் கூடாதவற்றை இதில் காணலாம்.

Work From Home-இல் மறந்து கூட இந்த விஷயங்கள செய்யாதீங்க.. உங்கள் வேலைக்கே உலை வைக்கும் செயல்கள் என்னென்ன?
work from home
  • Share this:

பலரும் வீட்டிலிருந்து வேலை செய்வதால் சரியான நேரத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை நீங்கள் செய்து முடிக்க வேண்டும் இல்லையென்றால் ஆபீஸிலிருந்து பலவித பிரச்சனைகள் ஏற்படும் அதோடு நீங்கள் சரியான நேரத்தில் உங்களுக்கு வழங்கப்பட்ட வேலையை முடித்து விட்டீர்கள் என்றால் உங்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும் சம்பள உயர்வுக்கும் இது ஒரு நல்ல வழி. அந்தவகையில் ஒர்க் ப்ரம் ஹோமில் நீங்கள் மறந்தும் செய்யக் கூடாதவற்றை இதில் காணலாம்.

வீட்டில் ஆபிஸ் செட்டப்பை அமைக்கவும்:

வீட்டில் இருந்து வேலை பார்க்கும்போது, நமக்கு அதிகளவில் கவனச்சிதறல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. வீட்டிலும் ஆபிஸ் போன்ற ஒரு செட் அப் செய்துகொள்வது மிக அவசியம். அலுவலக பணிகளில் இன்று என்னென்ன செய்ய வேண்டும் போன்ற குறிப்புகளை, மற்றவர்களுக்கு தொந்தரவு இல்லாத இடத்தில் வைத்து, அந்த குறிப்புகளுக்கேற்ப அன்றைய பணிகளை அன்றைய நாளிலேயே முடிக்க வேண்டும்.





பணிநேரங்களில், மற்றவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது, உங்கள் பணிகளில், உங்களை மனதளவில் ஒருமுகத்தன்மையுடன் ஈடுபட உதவும். மேலும் உங்கள் பெற்றோர், உடன்பிறப்புகள், மனைவி மற்றும் குழந்தைகளுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்கள் பணி இடத்தை கவனிக்காவிட்டால், உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதில் நாட்டம் வந்து பணியிலிருந்து திசை திருப்பப்படுவீர்கள். மேலும் உங்கள் பணித்திறனும் தடைபடும்.

படுத்துக்கொண்டோ அல்லது படுக்கையிலிருந்தோ வேலை செய்ய வேண்டாம்:

பலரும் இப்போது வீட்டில் இருந்து வேலை செய்வதால் அவர்களின் வசதிக்கேற்ப குப்புறப்படுத்தோ, மார்பின்மீதோ அல்லது வயிற்றின் மீதோ லேப்டாப்பை வைத்துக்கொண்டு வேலை செய்வது ஆபத்தை ஏற்படுத்தும். நீங்கள் அமர்ந்துகொண்டே வேலைபார்ப்பதை விட படுத்துக்கொண்டு வேலை பார்த்தால் நிச்சயம் உங்கள் உடலில் பாதிப்புகள் ஏற்படும் அதுமட்டுமல்லாது வேலையில் சரியான கவனம் செலுத்த முடியாது தூக்கம் வருவதற்கான வாய்ப்பும் அதிகம் அப்படி தூக்கம் வந்தால் நிச்சயம் ஆபீஸிலிருந்து தொல்லைகள் வரும்.

உங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்:

மாதிரி படம்


வீட்டில் இருந்து வேலை பார்ப்பதாலும், நமக்கு சில நன்மைகள் உள்ளன. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, நாம் நமது திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். உதாரணமாக பெயின்டிங், ட்ராயிங் கம்யுனிகேசன் திறன் உள்ளிட்டவைகளை வளர்த்துக் கொள்ளலாம். மேலும் டெக்னிகல் ஆப்ஸ்களை கற்றறிந்து, அதன்மூலம், நமது வேலைகளை துரிதமாக முடித்துக் கொள்ள முடியும்.

ஆபிஸ் நண்பர்களை தொடர்புகொள்ள மறந்துவிடாதீர்கள்:

மற்றவர்களுடன் தொடர்பு இன்றி, தனியாக அமர்ந்து வேலை செய்வது, நம்மை உடலளவில் இல்லாமல் மனதளவிலும் தனிமைப்படுத்தி விடும். வீட்டில் இருந்து வேலை பார்ப்பதால், சக பணியாளர்களிடையேயான தொடர்பு இல்லாமல் இருந்தால், நாம் எல்லாவற்றில் இருந்தும் மற்றவர்களிடமிருந்து புறக்கணிக்கப்படுவது போன்ற எண்ணம் நம் மனதில் தோன்றும். நீங்கள் டீம் மேனேஜராக இருந்தால், SMSகள், ஆடியோ, வீடியோ அழைப்புகளின் மூலம், உங்கள் ஊழியர்களை அவ்வப்போது தொடர்பு கொண்டு, அசைன்மென்ட், புராஜெக்ட்டின் நிலை, ஊழியர்களின் பணிச் சூழல் மற்றும் ஊழியர்கள் எதிர்கொள்ளும் இன்னல்கள் உள்ளிட்டவைகளை தெரிந்து கொள்ள வேண்டும். இத்தகைய வழிமுறைகள், உங்களுக்கும், உங்களது ஊழியர்களுக்குமான உறவு மேம்படுவதோடு மட்டுமல்லாது, பணித்திறனும் அதிகரிக்கும்.

உடல்நலம் முக்கியம்:



வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள், தனியாக ஒரு அறையினை ஒதுக்கிக் கொள்ள வேண்டும். அலுவலக வேலைகளை துவக்குவதற்கு முன்பாகவே, சிறிய மற்றும் எளிய வகையிலான உடற்பயிற்சிகளை செய்ய மறக்க வேண்டாம். பணியின் இடையே, அவ்வப்போது ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு நடந்து செல்வதை மறந்துவிட வேண்டாம். வீட்டில் இருந்து வேலை பார்க்கும்போது, முதுகுவலி, கை, கால் மணிக்கட்டு வலியால் அதிகம் அவதிப்பட வாய்ப்பு உண்டு.

வீட்டில் இருந்து பணிபுரிபவர்கள், சிலநேரம் மதிய உணவை கூட மறந்துவிடுவார்கள். பணி அழுத்தம் எந்தளவிற்கு இருந்தாலும், நமது உடலை நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த வேலை இல்லை என்றால், வேறு வேலையை கூட நாம் பார்த்துக் கொண்டு விடலாம். ஆனால், நம் உடல்நலம் குன்றிவிட்டால், ஒன்றும் செய்ய முடியாது என்ற யதார்த்தத்தை நாம் உணர்ந்து செயல்படுதல் மிக அவசியம்.

லுங்கி/பைஜாமாக்களை அணியவேண்டாம்:

பணிகளில் சிறந்து விளங்குபவர்கள், அலுவலகங்களில் மட்டுமல்லாது, வீட்டில் இருந்து பணியாற்றும்போது, லுங்கி/பைஜாமா போன்ற உடைகளை அணிய மாட்டார்கள். ஃபார்மல் உடைகளை அணிவதன் மூலமே, நாம் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்வுடன் இருக்க முடியும். நாம் பணிகளை துவக்குவதற்கு முன் நமது மனம் மற்றும் மனநிலையை சரியான அளவிற்கு வைத்திருக்க வேண்டும். இந்த வழிமுறையை கையாள்வது சற்று கடினம் தான் என்றாலும், முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை என்பதை உணருங்கள்.



என்னதான் ஒர்க் ப்ரம் ஹோம் பல வசதிகளை தந்தாலும் நாம் அதை முறையாக பயன்படுத்த வேண்டும். மேற்சொன்னவற்றை நீங்கள் மறந்தும் உங்கள் அலுவலக நேரத்தில் செய்யக் கூடாது. இல்லை என்றால் உங்கள் அலுவலக நேரம் முற்றிலும் வேறுபட்டதாகி வேலைக்கே உலை வைக்கவும் வாய்ப்புள்ளது.
Published by:Sankaravadivoo G
First published: