முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / பார்பெல் டெட்லிஃப்ட் முதல் கிக் பாக்ஸிங் வரை.! ராஷ்மிகாவின் வேற லெவல் ஃபிட்னஸ் பயிற்சிகள்..

பார்பெல் டெட்லிஃப்ட் முதல் கிக் பாக்ஸிங் வரை.! ராஷ்மிகாவின் வேற லெவல் ஃபிட்னஸ் பயிற்சிகள்..

ராஷ்மிகா மந்தனா

ராஷ்மிகா மந்தனா

நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு மிட் நைட்டில் வொர்க் அவுட் செய்வது மிகவும் பிடிக்குமாம்..

  • Last Updated :

முன்பெல்லாம் திரையுலகில் இருக்கும் நடிகர்கள் தான் ஜிம்மிற்கு சென்று உடலை ஃபிட்டாக வைத்திருப்பதில் கவனம் செலுத்துவார்கள். நடிகைகள் லேசான உடற்பயிற்சிகள் செய்வதோடு சரி, டயட்டை மெயின்டெயின் செய்து உடலை ஃபிட்டாக வைத்திருப்பார்கள்.

ஆனால் சமீப ஆண்டுகளாக நடிகர்களுக்கு சமமாக நடிகைகளும் ரசிகர்கள் மத்தியில் ஒர்க்கவுட் செய்ய வேண்டும் என்ற உந்துதலை ஏற்படுத்தும் வகையில் வெறித்தனமாக ஜிம்மில் கடும் பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். நடிகை சமந்தா இதற்கு நல்ல ஒரு உதாரணம். சோஷியல் மீடியாக்களில் சில நாட்களுக்கு முன் சமந்தா வெறித்தனமாக ஜிம்மில் வொர்கவுட்களை செய்யும் வீடியோ வைரலானது. இந்நிலையில் மற்றொரு தென்னிந்திய நடிகையான ராஷ்மிகா மந்தனாவும் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க பல்வேறு வொர்கவுட்களை ஜிம்மில் மேற்கொண்டு வருகிறார்.

தனது சோஷியல் மீடியாக்களில் இந்த தீவிர வொர்க்கவுட் வீடியோக்களை ஷேர் செய்து ரசிகர்களிடையே உடற்பயிற்சிகள் மீதான ஆர்வத்தை அதிகரித்து வருகிறார். நடிகை ராஷ்மிகா மந்தனா ஜிம்மில் செய்த சில தீவிர ஒர்கவுட்களின் பட்டியலை இங்கே பார்க்கலாம்..

பார்பெல் டெட்லிஃப்ட்டில் (barbell deadlift) அசத்திய ராஷ்மிகா..


டெட்லிஃப்ட் என்பது ஒரு வெயிட் ட்ரெயினிங் ஆகும் இதில் லோட் செய்யப்பட்ட பார்பெல் அல்லது பார் தரையில் இருந்து தரையில் செங்குத்தாக இடுப்பு நிலைக்குத் தூக்கப்படுகிறது. முக்கிய மூன்று பவர் லிஃப்டிங் பயிற்சிகளில் ஸ்குவாட், பெஞ்ச் பிரஸ் மற்றும் பார்பெல் டெட்லிஃப்ட் ஆகியவை அடங்கும். இவ்வகை உடற்பயிற்சி மற்ற உடற்பயிற்சிகளை விட அதிகம் தசைகளை வேலை செய்ய வைக்கிறது மற்றும் ஸ்டெபிளிட்டியை மேம்படுத்துகிறது. மேற்காணும் வீடியோவில் அவர் ஜிம்மில் ஒரு சக்தி வாய்ந்த டெட்லிஃப்டை தூக்குவதை காணலாம்.

also read : கோடைகால சுற்றுலாவுக்கு எப்படி உடை அணியலாம் என்பதில் குழப்பமா? பூஜா ஹெக்டே ஸ்டைலிங் டிப்ஸ் இதோ..

ராஷ்மிகாவின் புஷ்-அப்ஸ்..


புஷ்அப்ஸ் உங்கள் உடலையும் தசைகளையும் வலுப்படுத்த ஒரு சிறந்த வழி. இந்த  வொர்க் கவுட் வளர்சிதை மாற்றத்தைத் தூண்டுகிறது. இதன் காரணமாக ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது மற்றும் எடை இழப்பிற்கு பெரிதும் உதவுகிறது. இந்த வீடியோவில் ராஷ்மிகா தரையில் சுமார் 30-வினாடி அப்படியே புஷ் அப் நிலையில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. இந்த சேலஞ்சின் மூலம் பார்பவர்களிடையே தீவிர உடற்பயிற்சி ஊக்கத்தை ஏற்படுத்துகிறார்.

சிங்கிள்-ஆர்ம் டம்பள்ஸ் பயிற்சி:


வித்தியாசமான பல பயிற்சிகளை செய்து ரசிகர்களை மோட்டிவேட் செய்யும் ராஷ்மிகாவின் இந்த இன்ஸ்டா வீடியோ, அவர் சிங்கிள்-ஆர்ம் டம்பள்ஸ் பயிற்சியை அதாவது ஒரு கையை வைத்து கொண்டு டம்பள்ஸ் அடிப்பதை காட்டுகிறது. நல்ல எடை கொண்ட டம்பள்ஸை கொண்டு இடது கையால் தரையிலிருந்து தூக்கி தலைக்கு மேலே கொண்டு சென்று மீண்டும் கீழே இறக்கி தனது திறமையை நிரூபிக்கிறார். சிங்கிள் டம்பள்ஸ் ஸ்னாட்ச் சுறுசுறுப்பை மேம்படுத்தும் மற்றும் தோள்கள், தொடை எலும்புகள் மற்றும் கீழ் முதுகு உள்ளிட்ட உடலின் பல்வேறு பாகங்களை வலுப்படுத்தும்.

also read : குழந்தை பெற்ற பிறகும் குறையாத அழகு! மாடர்ன் உடையில் மயக்கும் காஜல் அகர்வால்..

க்ளீன் & ப்ரஸ் ஃபுல் பாடி ஒர்கவுட்:


ராஷ்மிகா இந்த வீடியோவில் டெட்லிஃப்ட் மற்றும் ஓவர்ஹெட் பிரஸ்ஸை இணைத்து முழு உடலையும் பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வதைக் காணலாம். இந்த க்ளீன் & ப்ரஸ் ஃபுல் பாடி ஒர்கவுட் 8 வெவ்வேறு தசை குழுக்களை பயிற்சியில் ஈடுபடுத்துகிறது. தொடை எலும்புகள், இடுப்பு, மேல் பாதி தோள்கள், மார்பு, முதுகு மற்றும் கைகள் உட்பட உடலில் உள்ள ஒவ்வொரு தசையையும் வேலை செய்ய வைக்கிறது இந்த ஒர்கவுட்.

also read : உடலில் கால்சியம் பற்றாக்குறை இருப்பதற்கான அறிகுறிகள் இவை!

ராஷ்மிகாவின் கிக் பாக்ஸிங் ட்ரெயினிங்:


ராஷ்மிகாவின் இந்த கிக் பாக்ஸிங் வீடியோவில் அவர் மிகவும் ஆக்ரோஷமாக தனது வொர்க்கவுட் வெறியை வெளிப்படுத்துவதைக் காணலாம். கிக் பாக்ஸிங் என்பது பன்ஞ்சிங், கிக்கிங் மற்றும் ஃபுட்வொர்க்ஸை உள்ளடக்கிய உடற்பயிற்சியின் ஒரு வடிவமாகும். இது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை குறைக்க, சகிப்புத்தன்மையை உருவாக்க மற்றும் நிறைய கலோரிகளை எரிக்க உதவுகிறது.

First published:

Tags: Actress Rashmika Mandanna, Workout