பிரிஸ்டோல் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் மனப்பதட்டத்தால் பாதிக்கப்படும் இளைஞர்கள் மதுவிற்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம் என தெரிவித்துள்ளது.
குறிப்பாக 18 வயதிலிருந்து மனப்பதட்டத்தால் பாதிக்கப்படும் இளைஞர்கள் மூன்று ஆண்டுகள் கழித்து அதாவது 21 வயதில் மது அருந்துவதை வாடிக்கையாக்கிக் கொள்வதாக கண்டுபிடித்துள்ளது. அதிகமாக மதுவுக்கு அடிமையாகியிருக்கும் ஆண்களின் பிரச்சனையும் மனப்பதட்டமே இருக்கும். மதுவைத் தொடர்ந்து சிகரெட் பழக்கம், கஞ்சா போன்ற பழக்கங்களும் தொடர்வதாக அறிவித்துள்ளது.
எனவே சிறு வயது முதலே அவர்களின் மனப்பதட்டத்தைக் கண்டறிந்து அதற்குரிய சிகிச்சைகளை அளித்தாலே எதிர்காலத்தில் அவர்கள் மதுவுக்கு அடிமையாவதைத் தடுக்கலாம் என்று ஆய்வின் தலைவர் மேடி டையர் கூறியுள்ளார். மேலும் இதுபோன்ற மனப்பதட்டங்கள் உறவுகளில் உள்ள சிக்கல்களால்தான் வரும் என்று தீர்மானிக்க முடியாது என்கிறார்.
இதில் மனப்பதட்டத்தால் பாதிக்கப்பட்ட மற்றும் மதுவுக்கு அடிமையாகியிருக்கும் இளைஞர்கள் என 2,000 பேரிடம் ஆய்வு நடத்தியுள்ளது.
இறுதியாக மதுப் பழக்கத்திற்கு அடிமையாகுதல் என்பது மனநலன் பாதிப்பையும் உணர்த்துவதாக தெரிவித்துள்ளது. எனவே மனப்பதட்டத்தைச் சரிசெய்தாலே மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம் என்ற யோசனையையும் தெரிவித்துள்ளது. இது மது மற்றும் மனநலத்திற்கான போராட்டமாகக் கருதுகின்றனர் ஆய்வாளர்கள்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க. லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.
Published by:Sivaranjani E
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.