நாளை தமிழகம் முழுவதும் போகிப் பண்டிகை கொண்டாடப்படும். பழையன கழிந்து புதியனவற்றை வரவேற்கவே இந்த போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதாவது வீட்டில் உள்ள பழைய பொருட்களை எல்லாம் எரித்து வீட்டை சுத்தம் செய்து அதன் பின் தைத் திருநாளை வரவேற்பார்கள்.
சிலர் இதை மனதில் உள்ள பழைய எண்ணங்கள், கெட்ட விஷயங்களையும் அந்த தீயில் எரியும் பொருட்களைப் போல் எரித்துவிட்டு புதிய வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்ற மனநிலையிலும் போகியைக் கொண்டாடுவார்கள். இப்படி போகி ஒவ்வொருவரின் மனநிலைக்கு ஏற்ப கொண்டாடப்படுகிறது.
ஆனால் இதனால் காற்று மாசுப்பாடு அதிகரிப்பதையும் நாம் கவனத்தில் கொள்வது அவசியம். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பாதிப்பில்லா போகியைத்தான் விரும்புகிறது. இதனால் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நிகழ்ச்சிகளையும், அறிவிப்புகளையும் வெளியிடும். அந்த வகையில் இந்த வருடமும் சென்னை மற்றும் அனைத்து மாவட்ட தலைமை இடங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஏற்பாடு செய்துள்ளது.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கையில் போகிப்பண்டிகையின் போது சென்னை மாநகரத்தில் சுற்றுச்சூழல் காற்று தரத்தினை கண்காணிப்பு செய்யும் பொருட்டு போகியின் முந்தைய நாள் மற்றும் போகிப்பண்டிகையின் போதும் 14 இடங்களில் 24 மணி நேரமும் காற்றுத் தரத்தினை கண்காணிக்க காற்று மாதிரி சேகரிப்பு செய்து ஆய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காற்றின் தர அளவும் வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
அதோடு போகிப்பண்டிகையின் போது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும் டியூப்கள், காகிதம், இரசாயணம் கலந்த பொருட்கள் போன்ற பொருட்களை எரிக்கின்றனர். இதுபோன்ற பொருட்களை எரிப்பதால் காற்று கடுமையாக மாசடைகிறது. அதோடு அடர்ந்த புகை மற்றும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற பாதிப்புகளும் உள்ளாகின்றன. இவை பொது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
அதுமட்டுமன்றி விமானங்களின் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது. சூழ்ந்து கொள்ளும் புகைகளால் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாவதோடு விபத்துகளும் ஏற்படுகின்றன. எனவேதான் இவற்றையெல்லாம் தவிர்க்க 18 ஆண்டுகளாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது. இதனால் கடந்த வருடம் வரை ரப்பர் , பிளாஸ்டிக், டயர் எரிப்பு போன்றவை குறைந்துள்ளது. அதேபோல் இந்த ஆண்டும் மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.
உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Bhogi, Pollution contorl board