கர்ப்பிணிகளுக்காக இலவச யோகா பயிற்சி : அறுவை சிகிச்சையை தவிர்க்க அறிமுகம்..!

கர்ப்பிணிகளுக்காக இலவச யோகா பயிற்சி : அறுவை சிகிச்சையை தவிர்க்க அறிமுகம்..!

கர்ப்பிணிகளுக்கு யோகா

அதோடு கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் பிக்மி (pick me) என்ற செயலி அறிமுகம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் அறுவை சிகிச்சையின்றி சுகப்பிரசவம் பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படும் எனவும் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் இன்று மருத்துவ தினம் கொண்டாடப்படுகிறது முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் அவர்களின் 133-வது பிறந்த தினமான இன்று மருத்துவ தினமாக தமிழகம் முழுதும் கொண்டாடப்படுகிறது. அதனடிப்படையில் சென்னை திருவல்லிக்கேணி அரசு கஸ்தூரிபா தாய்சேய் நல மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இன்று கொண்டாடப்படும் மருத்துவமனை தினத்தை முன்னிட்டு 9 கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது. அதேபோல் சிறப்பு சிகிச்சை முகம், உறுப்புதானம், இரத்த தான முகாம் உள்ளிட்டவையும் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பீலா ராஜேஷ் கூறும்போது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்று முதல் கர்ப்பிணி பெண்களுக்கான சிறப்பு யோகா பயிற்சி தொடங்கப்பட்டு உள்ளதாகவும், இதன் மூலம் அறுவை சிகிச்சையின்றி சுகப்பிரசவம் பெறுவதற்கான அதிக வாய்ப்புகள் ஏற்படும் எனவும் தெரிவித்தார்.அதுமட்டுமின்றி கர்ப்பிணி பெண்களுக்கு உதவும் வகையில் பிக்மி (pick me) என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதன் மூலமாக அவர்களின் அனைத்து செயல்பாடுகளையும் கண்காணிக்கப்படும், ஊசி, தேவையான மருந்துகள் வழங்கப்படுகிறதா உள்ளிட்ட அனைத்தையும் மருத்துவர்கள் கண்காணிப்பதாக தெரிவித்தார். அதேபோல் இந்த ஐடியை வைத்து பிரசவத்திற்கு பின்பு எளிதில் குழந்தை பிறப்புச் சான்றிதழ்களும் பெற்றுக்கொள்ள முடியும் என்று கூறிய அவர், இந்த திட்டத்தினை தனியார் மருத்துவமனைகளிலும் இணைத்து வருவதாகவும் கூறினார்.

மேலும் தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை இல்லை என தெரிவித்த அவர், ஊதிய உயர்வு தொடர்பாக அரசு மருத்துவர்கள் நடத்திவரும் போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இது குறித்து ஒரு நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
Published by:Sivaranjani E
First published: