நோய்த்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செக்லிஸ்ட்: இதிலெல்லாம் கவனம்..!

ஆன்லைன்

வீட்டிலேயே சமைப்பது நோய்த்தொற்று காலத்தில், உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நீங்கள் செய்துகொள்ளும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.

 • Share this:
  வீட்டில் இருந்தாகவேண்டிய சூழ்நிலையில், மக்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட், க்ரோசரி தளங்கள் என அனைத்து ஆன்லைன் வர்த்தகத் தளங்களையும் அதிகமாக சார்ந்திருக்க தொடங்கியிருக்கிறார்கள்.  நோய்த்தொற்றுக் காலத்தில் ஆன்லைன் ஷாப்பிங் செக்லிஸ்ட் இது..

  கொரோனா பாதிப்பும், அதுகுறித்தான வதந்திகளும் விழிப்புணர்வும் அதைவிட அதிகமாக பரவி வருகிறது. பெருநிறுவனங்கள், கேளிக்கை பகுதிகளும், மதுக்கூடங்களும் மூடப்பட்டுவிட்டன. வீட்டிலிருந்து அலுவலக வேலை, போக்குவரத்து கட்டுப்பாடு என மக்கள் பத்திரமாக வீட்டுக்குள் பாதுகாப்பாக இருப்பதையே அரசும், மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள். இதனால் மக்கள் அமேசான், ஃப்ளிப்கார்ட், க்ரோசரி தளங்கள் என அனைத்து ஆன்லைன் வர்த்தகத் தளங்களையும் அதிகமாக சார்ந்திருக்க தொடங்கியிருக்கிறார்கள்.

  சரி, ஆன்லைன் டெலிவரியின்போது நமக்கும், டெலிவரி செய்பவருக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

  1. டெலிவரி எக்சியூக்ட்டிவ் காகிதத்திலோ அல்லது அவரது ஜேட்ஜெட் அல்லது ஃபோனிலோ நமது கையொப்பத்தைப் பெறுவார். பலரும் பயன்படுத்தும் அந்த கேட்ஜெட்டுகள் தொற்றுக்கான அதிகமான சாத்தியங்களைக் கொண்டிருப்பதால், உடனடியாக கை கழுவுதல், சானிட்டைசர் பயன்படுத்துவது அவசியம். நாட்பட்ட உடல் பாதிப்பு இருப்பவர்கள், வயதானவர்கள் N-95 முகக்கவசங்களை அணிந்து கொரியர்களையோ, டெலிவரிகளையோ பெறலாம்.

  2. பலரும் வீட்டுக்குள் இருக்கும்போதும், நமக்காக சுயநலம் பாராமல் உழைப்பவர்கள் மருத்துவர்களும், தூய்மைப் பணியாளர்களும்தான். இப்போது அந்தப் பட்டியலில் டெலிவரி செய்யும் பணியாளர்களும் சேர்ந்திருக்கிறார்கள். உங்களுக்கு உடல்நலம் சரியில்லை என்றாலோ, சோர்வாக இருந்தாலோ, டெலிவரி செய்பவரை கனிவுடன் நடத்தி, டெலிவரி பொருளை கதவுக்கு பின்புறமாக வைக்கச் சொல்லலாம்.

  முடிந்த அளவு ஆன்லைன் உணவு டெலிவரியைத் தவிருங்கள். வீட்டிலேயே சமைப்பது நோய்த்தொற்று காலத்தில், உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் நீங்கள் செய்துகொள்ளும் மிகப்பெரிய உதவியாக இருக்கும்.
  Published by:Gunavathy
  First published: