ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கொரோனா குணமடைந்த பின் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்க இந்த நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை சாப்பிடுங்கள்..!

கொரோனா குணமடைந்த பின் ஏற்படும் பக்கவிளைவுகளை தவிர்க்க இந்த நோய் எதிர்ப்பு சக்தி உணவுகளை சாப்பிடுங்கள்..!

கொரோனா குணமடைந்த பின் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு இந்த விஷயங்களை பின்பற்றுவது அவசியம்.

கொரோனா குணமடைந்த பின் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு இந்த விஷயங்களை பின்பற்றுவது அவசியம்.

கொரோனா குணமடைந்த பின் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு இந்த விஷயங்களை பின்பற்றுவது அவசியம்.

  • 2 minute read
  • Last Updated :

கொரோனா குணமடைந்த பின்பும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிப்பது அவசியம். ஏனெனில் சிலருக்கு கொரோனா குணமடைந்த பின்புதான் பக்கவிளைவுகள் உண்டாகின்றன. எனவே கொரோனா குணமடைந்த பின் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துவதற்கு இந்த விஷயங்களை பின்பற்றுவது அவசியம்.

பலர் இந்த கொரோனா நேரத்தில் ஆயுர்வேதத்தை பின்பற்றத் தொடங்கியுள்ளனர். அலோபதியை காட்டிலும் ஆயுர்வேதத்தை வீட்டில் இருக்கும் உணவுப் பொருட்கள் மூலமாகவே பின்பற்றிக்கொள்ளலாம். அதோடு உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்பது அவர்களுடைய எண்ணமாக இருக்கிறது. அந்த வகையில் ஆயுர்வேத நிபுணர் மருத்துவர் தீக்சா பவ்சார் இன்ஸ்டாகிராமில் கொரோனாவிற்குப் பின்பற்ற வேண்டிய விஷயங்கள். உணவு முறைகளைப் பற்றி பகிருந்துள்ளார்.

கொரோனா குணமடைந்து வந்ததும் நீங்கள் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் என்னென்ன..?

வீட்டிற்கு வந்ததும் வீட்டில் சமைத்த ஃபிரெஷான உணவுகளை மட்டுமே சாப்பிட வேண்டும்.

சமைக்காத உணவுகள், எளிதில் செரிமானிக்காத உணவுகளை தவிர்க்கவும்.

இனிப்பு அதிகம் உள்ள பழங்களை தவிர்க்கவும். பழங்களை 4 மணிக்குள் சாப்பிட வேண்டும். அதற்கு மேல் சாப்பிட்டால் செரிமானிக்க கடினமாக இருக்கும்.

அதிகபட்சம் எளிதில் செரிமானிக்கக் கூடிய, குழைந்த உணவுகளாக சாப்பிட வேண்டும். உதாரணத்திற்கு கிச்சடி, கஞ்சி போன்ற உணவுகளாக இருக்கலாம்.

அதிகமாக தண்ணீர் குடியுங்கள். நீர் அளவு குறையாமல் பார்த்துக்கொள்ளவும்.

தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள். மெதுவான நடைப்பயிற்சி, ஸ்ட்ரெட்சஸ், யோகா போன்றவை செய்யலாம். கடினமான பயிற்சிகளை தவிர்க்கவும்.

மனதை பயமின்றி ரிலாக்ஸாகவும், மகிழ்ச்சியாகவும் வைத்துக்கொள்ளுங்கள். கொரோனா செய்திகள், கவலை தரும் செய்திகளை பார்க்காதீர்கள். நெகடிவ் விஷயங்களை தவிருங்கள்.


கொரோனா குணமடைந்த பின் சாப்பிட வேண்டிய உணவுகள் :

முளைக்கட்டிய பயறு வகைகள், பயறு சூப் குடிக்கலாம்.

நீர் உணவு : ஜூஸ், எனரிஜி தரும் பானங்கள் குடிக்கலாம்.

பழங்கள் : துவர்க்கும், புளிக்கும் பழங்களான நெல்லிக்காய், அன்னாசி, எலுமிச்சை, கிவி பழம், பெர்ரி பழங்கள் சாப்பிடலாம். அவை வைட்டமின் சி நிறைந்த பழங்களாகும்.

மாவு : மாவு வகைகளில் கடலை மாவு, கேழ்வரகு மாவு. பார்லி , கம்பு மாவு ஆகியவை சாப்பிடலாம். இவற்றை தோசையாகவும் கரைத்து சுட்டு சாப்பிடுங்கள்.

காய்கறி : முருங்கைக்கீரை, வெந்தயக் கீரை , பூண்டு, பசலைக்கீரை, தக்காளி, சுரைக்காய், புடலங்காய் , தக்காளி, பருவகால காய்கறிகள் போன்றவை நன்கு சாப்பிடுங்கள்.

மூலிகை டீ : எலுமிச்சை டீ, பட்டை டீ, சீரகம், சோம்பு டீ, இஞ்சி டீ. மிண்ட் டீ போன்ற மூலிகை டீ வகைகளை முயற்சி செய்யுங்கள்.

மசாலா : இஞ்சி, மஞ்சள், மிளகு, ஏலக்காய், சீரகம், தனியா, கிராம்பு போன்றவை சாப்பிடலாம்.

Vitamin D : கொரோனா பாதிப்பிலிருந்து பாதுகாக்கும் வைட்டமின் டி-யை பெற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.!

தவிர்க்க வேண்டியவை : பச்சை உணவுகள், இனிப்பு, எண்ணெய் உணவு, கார உணவு, குளிர்ச்சியான உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, மைதா, பிரெட், பீட்சா, குக்கீஸ், ஹோட்டல் உணவு , மீந்துபோன உணவுகள் போன்றவற்றை நீங்கள் கட்டாயம் தவிர்ப்பது நல்லது.

First published: