சன்னி லியோன் என்ற பெயரின் அர்த்தம் மாறியிருப்பதன் காரணம் அவருடைய விடா முயற்சிகளும், தன்னம்பிக்கையும்தான். ஆனால் அதற்குப் பின்னால் மறைந்திருக்கும் அவருடைய அவமானங்களும், நிராகரிப்புகளும் சொல்லப்படாத உண்மைகள். அப்படி அவர் எங்கும் சொல்லாத சில விஷயங்களை மகளிர் தினத்தில் மனம் விட்டு பேசியிருக்கிறார்.
மோஜி இந்தியா என்னும் ஆப் பெண்கள் தினத்தையொட்டி #Unfiltered to express your real self! என்னும் பிரச்சாரத்தை தனது ஆப்பில் நடத்தி வருகிறது. அதில் 39 வயதான சன்னி லியோனும் கலந்துகொண்டுள்ளார்.
இந்த பிரச்சாரத்தின் சாரம் பெண்கள் மறைக்கப்படாத உங்களுடைய நிஜ வாழ்க்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான். அப்படி சன்னி லியோனும் ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.
அந்த வீடியோவில் வித விதமான ஆடைகளை அணிந்து அவருடைய அனுபவங்களை எழுத்தாக விவரித்துள்ளார். அதில் ”நான் சுயம்பாக உருவான பெண், 21 வயதில் மின்னஞ்சல்களை வெறுத்தேன், தீர்மானத்துடன் பேசும், காம வார்த்தைகள் அடங்கிய கருத்துக்களை வெறுத்தேன். என் நடனங்களை கிண்டல் செய்தனர், புறம் பேசினர், துறையிலிருந்து எனக்கு எந்த ஆஃபர் மற்றும் சப்போர்ட் கிடைக்கவில்லை, விருது நிகழ்ச்சிகளில் நிராகரிக்கப்பட்டேன்” இப்படியான வாக்கியங்களை வீடியோவில் பதிவிட்டுள்ளார்.
இறுதியாக ”இன்று நான் என் கனவு வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வருகிறேன். பல பிளாக்பஸ்டர் ஹிட்டுகளை கொடுத்து வருகிறேன். பேபி டால், முக்கியமாக நான் அழகான குடும்பத்தை உருவாக்கியிருக்கிறேன்.காஸ்மெடிக்ஸ், அழகு சாதனபெருட்களை சொந்தமாக நடத்தி வரும் வெறிகரமான பெண் தொழிலதிபர். இன்று நான் யாராக இருக்கிறேனோ அதை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பாசிடிவான கருத்துக்களுடன் பகிரப்பட்டு வருகிறது.