திருமணத்திற்கு என்ன மேக்அப் பொருத்தமாக இருக்கும்? சொல்கிறார் செலிபிரிட்டி மேக்அப் ஆர்டிஸ்ட் சோனிக் சர்வாட்

இது நீங்கள் அதிகமாக நீர் அருந்துவது , சுத்தமான உணவை உண்பது என்பதில் மட்டும் முடிந்துவிடவில்லை. அதேபோல் வெளிப்புறக் காரணிகளாளும் உங்கள் சருமம் பாதிப்படையும்.

Sivaranjani E
Updated: January 17, 2019, 1:22 PM IST
திருமணத்திற்கு என்ன மேக்அப் பொருத்தமாக இருக்கும்? சொல்கிறார் செலிபிரிட்டி மேக்அப் ஆர்டிஸ்ட் சோனிக் சர்வாட்
இது நீங்கள் அதிகமாக நீர் அருந்துவது , சுத்தமான உணவை உண்பது என்பதில் மட்டும் முடிந்துவிடவில்லை. அதேபோல் வெளிப்புறக் காரணிகளாளும் உங்கள் சருமம் பாதிப்படையும்.
Sivaranjani E
Updated: January 17, 2019, 1:22 PM IST
மாக் பிராண்ட் நிறுவனத்தின் முதன்மை மேக்அப் ஆர்டிஸ்டாக சோனிக் சர்வாட் இருக்கிறார். இவர் பாலிவுட் பிரபலங்கள் பலருக்கும் மேக்அப் செய்கிறார். அதுமட்டுமன்றி பல பெண்கள் தங்களின் கனவு நாளான திருமணத்திற்கு இவரின் மேக்அப்பையே விரும்புகின்றனர். உலக அளவில் பிரபலமான இந்திய மேக்அப் ஆர்டிஸ்ட் சோனிக் சர்வாட்டிடம் நிகழ்த்திய உரையாடல்களிலிருந்து சில உங்களுக்காக…



நீங்கள் பல பிரபலங்களுக்கும் மேக் அப் செய்திருக்கிறீர்கள். அவர்களுடனான சுவாரஸ்ய அனுபவங்கள் மற்றும் சவால்களை பகிர்ந்து கொள்ள முடியுமா?

என்னைப் பொருத்தவரை எந்த மாதிரியான சவால்கள் நிறைந்த சருமத்தையும் அழகாகக் காட்டக் கூடியதுதான் நல்ல மேக்அப் ஆர்டிஸ்டின் தகுதி. அனுபவம் நிறைந்தவராக  இருந்தால் அவர்களுக்கான தேவை என்ன என்பதை பார்க்கும்போதே கணிக்க முடியும். இதனால் எந்தமாதியான செலிபிரிட்டிகளையும் சமாளிக்க முடியும். உதாரணமாக நான் 13 வருடங்களாக மேக் நிறுனத்தோடு இணைந்து பணியாற்றி வருகிறேன். தினமும் என் வாழ்கையில் வெவ்வேறு வகையான மனிதர்கள் வெவ்வேறு வகையான சருமம் கொண்டோரை எதிர்கொள்கிறேன். அதுவே எனக்கான தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அனுபவங்கள் மூலமாக அளித்திருக்கிறது. பிரபலங்களாக இருந்தாலும் அனுபவித்து மேக்அப் செய்வேன். ஏனெனில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையான ஸ்டைல் கொண்ட பர்சனாலிட்டியாக இருக்கின்றனர். அவர்களுக்கான தேவையறிந்து பணியாற்றுவதை மிகவும் விரும்பிச் செய்கிறேன். அதற்காக சவால்களே இல்லை என்று சொல்ல மாட்டேன். ஏதேனும் வித்யாசமான தோற்றம், அல்லது அவர்கள் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்திற்கான தோற்றம் என முதல் முயற்சியின் போதுதான் சற்று கடினமாக இருக்கும். அந்த சவாலைக் கூட சரியான பயிற்சி இருந்தால் பெரிதாகத் தெரியாது. எளிதாக சமாளித்துவிடலாம்.

உங்கள் பார்வையில் பெண்களின் அழகு என்பது என்ன ? அவர்களுடைய தனித்துவ ஆளுமைக்கு மேக்அப் எந்த அளவிற்கு உதவுகிறது?

என்னைப் பொருத்தவரை அழகு என்பது தைரியம் மற்றும் தன்னம்பிக்கை. அவர்களை அழகுப் பதுமையாகவும், ஆளுமைக்கான தன்னம்பிக்கையுடனும் பிரதிபளிக்க மேக்அப்பே அச்சானியாக இருக்கிறது. எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் அழகியல்தான் முக்கிய முதல் பொருள்.  ஆனால் அது ஒவ்வொருவருக்கும் வேறுபட்ட வடிவமாக இருக்கிறது. என்னுடைய வேலை மேக்அப் போடுவது மட்டுமே அல்ல. அவர்களுக்குள் இருக்கும் தன்னம்பிக்கையை வெளிக்கொணர்வதுதில்தான் என்னுடைய வேலை முழுமை அடைகிறது.  அது திரைப்படங்களுக்கான மேக்அப், ரெட் கார்பெட் என எந்த மாதிரியான மேக்அப்பாகவும் இருக்கலாம். எந்த மேக்அப்பும் உங்களை அழகாகக் காட்டும். ஆனால் சிறந்த மேக்அப்தான் உங்களுக்கான தன்னம்பிகையை ஏற்படுத்தும். அதை நான் பெரிதாக நம்புகிறேன்.

Loading...
அழகை வெளிப்படுத்த முகத்தில் எந்த அம்சம் முக்கியமானது? முழுமையான அழகிற்கு எந்த அம்சத்தை மிகைப்படுத்திக் காட்ட வேண்டும்?

அதை சரியாகக் கணித்துச் சொல்ல முடியாது. ஒவ்வொருவருடைய முகத்திலும் ஏதேனும் ஒரு அம்சம்  கூடுதல் அழகாக இருக்கும். அது கண்கள், உதடு, மூக்கு என எதுவாகவும் இருக்கலாம். அப்படி அவர்களுக்கானத் தனித்துவத்தைக் கண்டறிந்து மிகைப்படுத்தினாலே மேக்அப்பில் பாதி வேலை முடிந்துவிட்டதென்று அர்த்தம். இருப்பினும், பொதுவாகச் சொல்லவேண்டுமெனில் கண்கள் அல்லது உதட்டை மிகைப்படுத்திக் காட்டலாம். அல்லது இரண்டையும் மிகைப்படுத்தலாம். என்னைப் பொருத்தவரை முகத்தின் சருமத்தைதான் கவனிப்பேன். ஏனெனில் சிறந்த சருமம் சிறந்த மேக்அப்பிற்கான அடித்தளம்.

வட்டம் அல்லது நீள்வட்ட முகத்திற்கு எந்த மாதிரியான மேக்அப் பொருத்தமானது?

வட்டம் , நீள்வட்டம் என தனியாக எந்த விதிமுறைகளும் இல்லை. நீள்வட்டம் சற்றுக் கடினமானது. ஆனால் சிறந்த வடிவம். ஏனெனில் அந்த வடிவத்திற்கு எந்த வகையான மேக்அப்பும் பொருத்தமாக இருக்கும். வட்ட முகமாக இருந்தால் அதிகமாக காண்டூர் செய்ய வேண்டும். அப்போதுதான் அதன் அழகியல் வெளிப்படும். வட்ட முகத்திற்கு  மேக்அப் போடுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.



காம்பினேஷன் சருமத்திற்கு எந்த வகையான் ஃபவுண்டேஷன் ஏற்றது?

ஒவ்வொரு வகையான சருமத்திற்கும் வெவ்வேறு வகையான ஃபவுண்டேஷன் தேவைப்படுகிறது. காம்பினேஷன் சருமத்தில் T-Zone பகுதி அதிகமாக எண்ணெய் வடியும் பகுதியாக இருக்கும். அவர்களுக்கு மாட் தன்மைக் கொண்ட பவுண்டேஷன் பொருத்தமானது. சற்று பவுடர் அப்ளே செய்தால் மேக்அப் நன்றாக செட் ஆகி எண்ணெய் வடிவது தடுக்கப்படும். இதனால் மேக்அப்பும் அதிக நேரம் நீடித்திருக்கும். அதேபோல் கன்னம் போன்ற எண்ணெய் வடியாத மற்றப் பகுதிகளில் அதே மாட் பவுண்டேஷன் அப்ளை செய்யலாம். ஆனால் பவுடர் போடுவதைத் தவிர்க்கவும்.

வேலைக்குச் செல்லும் பெண்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய மேக்அப் பொருட்கள் எவை ?

வேலைக்குச் செல்லும் பெண்கள், எந்த மாதிரியான வேலை செய்கிறார்கள் என்பது முக்கியம். பின்  எந்த மாதிரியான ஆடைகளை அணிகின்றனர். மற்றவர்களுக்கு எவ்வாறாக தன்னை பிரதிபளிக்க விரும்புகிறார்கள் என்பன போன்ற விஷயங்களைப் பொருத்துதான் மேக்அப்பும் அமையும். பின் அதற்கு ஏற்ப மேக்அப் செய்வது பொருத்தமாக இருக்கும். அவ்வாறு மேக்அப் செய்யும் பட்சத்தில் கட்டாயமாக சிறந்த ஃபவுண்டேஷன், மஸ்காரா, காஜல் பென்சில், ப்ளஷ் மற்றும் லிப் கலர் போன்றவை வைத்திருக்க வேண்டும். நீங்கள் அதிகமாக வெளியே வேலைக்குச் செல்லும் நபராக இருந்தாலும் இந்தப் பொருட்களை எடுத்துச் செல்லுங்கள்.



பளபளப்பான சருமத்திற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பதும் முக்கியக் பங்கு வகிக்கிறதா?

நிச்சயமாக உண்மைதான். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் பொலிவான சருமத்திற்கு அவசியம். நீங்கள் சிறந்த உணவை தினமும் எடுத்துக் கொள்கிறீர்கள் என்றால் அதன் பலன் சருமத்தில்தான் வெளிப்படும். இது நீங்கள் அதிகமாக நீர் அருந்துவது , சுத்தமான உணவை உண்பது என்பதில் மட்டும் முடிந்துவிடவில்லை. அதேபோல் வெளிப்புறக் காரணிகளாளும் உங்கள் சருமம் பாதிப்படையும். உதராணமாக் காற்று மாசுபாடு, சூரியனின் புற ஊதாக் கதிர்கள் என பலக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் இவற்றை எல்லாம் வெறும் க்ரீம்களைக் கொண்டு சரிசெய்திட முடியாது. ஊட்டச்சத்து நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு உடலை ஆரோக்கியமானதாக வைத்துக் கொள்வதிலும் முக்கியப் பங்கு இருக்கிறது.

உடனடி மேக்அப்பிற்குத் போதுமான பொருட்கள் எவை?

சிறந்த ஃபவுண்டேஷன், ஐ லைனர், உங்கள் பர்சனாலிட்டிக்கு ஏற்ற பளீர் லிப்ஸ்டிக் ஷேட் ஆகியவையே போதுமானது. அல்லது பவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக் மட்டுமே போதும். இந்த இரண்டு பொருட்களை சரியாகப் பயன்படுத்துவதற்கான  ட்ரிக்ஸுகள் தெரிந்தாலே அசத்தலாம். அதுவே உங்கள் முழுமையான அழகிற்கான சீக்ரெட்



மேக்கின் தனித்துவம் என்ன?

ஒருவரை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் மேக்கின் தனித்துவம். எந்த வயது கொண்டோராக இருந்தாலும், எந்த வகையான சருமம் கொண்டோராக இருந்தாலும், அவர்களுக்கு ஏற்ற பிரதேயகமான மேக்அப் பொருட்கள் மேக்கில் கிடைக்கும். அதிகமான மேக்அப், குறைவான மேக்அப், மேக்அப்பே தெரியாத மேக்அப் என வெவ்வேறான விருப்பங்கள் கொண்ட அனைவருக்கும் பாலின வேறுபாடுகளின்றி எண்ணற்ற சாய்ஸஸ் மேக் பிராண்டில் விரிந்து கிடக்கின்றன.

திருமணமாகப்போகும் பெண்களுக்கு நீங்கள் கூற விரும்புவது?

திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்களுக்கு நான் முக்கியமாகப் பரிந்துரைக்கும் விஷயம் அவர்கள் தங்களின் சருமத்தைப் பாதுகாப்பதுதான். அது மிகவும் முக்கியமும் கூட. நீங்கள் சரியாகப் பாதுகாக்காவிடில் மேக் அப் அதிக நேரம் ஸ்டே ஆகாமல் இருக்கும். எனவே ஒரு மாதத்திற்கு முன்னரோ அல்லது குறைந்தது ஒரு வாரத்திற்கு முன்னரே உங்கள் சருமப் பாதுகாப்பிற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பியுங்கள். அப்போதுதான் உங்கள் சருமம் நல்ல கண்டிஷனில் இருக்கும். மேக் அப்பும் சிறப்பாக இருக்கும். அடுத்ததாக நீங்கள் மேக் அப் ஆர்டிஸ்ட் தேர்வு செய்யும் முன் அவரின் அனுபவங்களைத் தெரிந்து கொண்டு அவரின் புரொஃபைலை தெரிந்து கொள்வது அவசியம். பிறகு அவர் நீஙக்ள் எந்த மாதிரியான தோற்றத்தைப் பெற விரும்புகிறீர்கள் என்பதை உறுதி செய்து அதில் அவர் கைத் தேர்ந்தவரா என்பதையும் உறுதி செய்து கொள்ளுஙக்ள் . அதேபோல் உங்களுக்கு எந்த மாதிரியான தோற்றம் வேண்டும் என்பதையும் தெளிவாகக் கூற வேண்டும். கட்டாயமாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு முன்னரே ட்ரையல் மேக் அப் செய்து கொள்வது நல்லது.

Also see:

First published: January 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626