HOME»NEWS»LIFESTYLE»suicide can be prevented talk to others says dr jain mg

Suicide Prevention | தற்கொலைகள் தடுக்கப்படக்கூடியவையே.. மருத்துவரின் விளக்கம் என்ன?

தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு மனிதனைத் தள்ளும் நிலை, மன அழுத்தம், மனநல பிரச்சனைகள் ஆகியவை அதிகம் விவாதிக்கப்பட வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியமாகிறது.

Suicide Prevention | தற்கொலைகள் தடுக்கப்படக்கூடியவையே.. மருத்துவரின் விளக்கம் என்ன?
தற்கொலை தடுப்பு
  • Share this:

ஒவ்வொரு முறை தற்கொலை செய்தி ஒன்றை கேள்விப்படும்போதும், அவர்களுக்கு அஞ்சலி தெரிவிப்பதும், பரிதாபப்பட்டு நகர்வதும் தொடர்கிறது. தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு ஒரு மனிதனைத் தள்ளும் நிலை, மன அழுத்தம், மனநல பிரச்சனைகள் ஆகியவை அதிகம் விவாதிக்கப்பட வேண்டும், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்பது அவசியமாகிறது.

தற்கொலைக்கான காரணங்கள் என்பது மிகவும் சிக்கலானது. சமூக, பொருளாதார, உடல்நல, கலாச்சார, அரசியல், மத, தனிப்பட்ட வாழ்க்கை ரீதியான பல வகைகளில் இந்த காரணங்கள் உள்ளன. இதையும் கடந்து சில சமயங்களில், இதற்கான காரணத்தை கொஞ்சமும் தெளிவுபெற முடியாத நிலையும் கூட ஏற்படுவதுண்டு என மருத்துவர் ஜெயின் தெரிவிக்கிறார்.

மேலும், ”வாழ்வில் பலருக்கு இந்த தற்கொலை எண்ணம் நொடிப்பொழுதில் கடந்துபோவதுண்டு. இது சிலருக்கு எண்ணமாக மட்டுமே கடந்து விடலாம். சிலர், இதை முயற்சித்து தோல்வியடைந்திருக்கலாம். அல்லது, சிலர் முயன்று உயிரை மாய்த்துக்கொள்கின்றனர். இதுபோன்ற நிலையில், ஆதரவும் இல்லாது போகும்போது இந்த தற்கொலை எண்ணம் மேலும் வலுவடைகிறது” என்கிறார்.



தற்கொலைக்கான காரணங்கள் எவ்வளவு சொல்லப்பட்டாலும், இதை தடுப்பதற்கான வழிகளும் அதே அளவில் உள்ளன. தற்கொலை அபாயத்துக்கான வழிகளையும், பரிமாணங்களையும் ஆய்வு செய்வது அவசியமாகிறது. அறிகுறிகள் தெரியும்போது உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள். அறிகுறிகள் தெரியும் நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு உதவியைப் பெறுமாறு ஆலோசனை கொடுங்கள்.

பேச முயற்சிப்பவர்களுக்கு செவி கொடுங்கள். நல்ல ஆதரவளிப்பவராக இருங்கள்” என கூறுகிறார் மருத்துவர் ஜெயின்.

-------------------------------------------------------------------------------------------

மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற, கீழ்காணும் எண்களுக்கு அழைக்கவும்.

மாநில உதவி மையம்: 104

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
Published by:Gunavathy
First published: