ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களை பெற்றோர்கள் ஏன் அலட்சியம் செய்ய கூடாது தெரியுமா?

குழந்தைகளின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்களை பெற்றோர்கள் ஏன் அலட்சியம் செய்ய கூடாது தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நடத்தையை உன்னிப்பாகக் கண்காணிப்பது முக்கியம். ஆரம்பகால குழந்தைப் பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு தகுந்த கவனிப்பும் ஆதரவும் இருப்பது அவசியம்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  உலகிலேயே மிக கடினமான அதே சமயம் அழகான சிறந்த ஒரு டாஸ்க் குழந்தை வளர்ப்பாகும். பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளுக்கு எல்லா விஷயங்களிலும் சிறந்ததை அளிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள்.

  ஆனால் எப்போதும் குழந்தைகளை பாதுகாத்து கொண்டே இருப்பதை பெற்றோர்கள் தவிர்க்க நிபுணர்கள் அறிவுறுத்தும் அதே நேரம், குழந்தையின் நடத்தைகளில் ஏற்படும் மாற்றங்களை பெற்றோர்கள் கவனிக்காமல் விட்டுவிட கூடாது என்பது நிபுணர்களின் எச்சரிக்கையாக உள்ளது. ஏனென்றால் உங்கள் குழந்தையின் நடத்தையில் ஏற்படும் திடீர் மாற்றங்கள் அவர்களுக்கு இருக்கும் மனநலப் பிரச்சனைகளின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

  மன ஆரோக்கியம் என்பது ஒருவர் என்ன நினைக்கிறார், எவ்வாறு தனது உணர்வுகளை ஒழுங்குபடுத்துகிறார், பிறரிடம் எவ்வாறு நடந்து கொள்கிறார் என்பதன் ஒட்டுமொத்த ஆரோக்கியமாகும். குழந்தைகளில் காணப்படும் மனநல கோளாறுகள் பொதுவாக வயதுக்கு மீறிய எதிர்மறை சிந்தனை மற்றும் நடத்தை, உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் சிரமம் உள்ளிட்ட பலவற்றால் வரையறுக்கப்படுகின்றன.

  பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் நடத்தையை உன்னிப்பாக கண்காணிப்பது முக்கியம். ஆரம்பகால குழந்தை பருவத்தில் உள்ள குழந்தைகளுக்கு தகுந்த கவனிப்பும், ஆதரவும் இருப்பது அவசியம். குழந்தைகளிடையே காணப்படும் மிகவும் பொதுவான மனநல கோளாறுகளாக டிப்ரஷன், அட்டென்ஷன் டிஃபிக்ட் ஹைப்பர் ஆக்டிவிட்டி டிஸார்டர், போஸ்ட் - ட்ரோமேட்டிக் ஸ்ட்ரெஸ் டிஸார்டர், ஆட்டிசம் உள்ளிட்டவை இருக்கின்றன.

  குழந்தைகளிடம் கவனிக்க வேண்டிய நடத்தை மாற்றங்கள் :

  கட்டுப்பாடற்ற நடத்தை, அடிக்கடி தலைவலி, நீண்ட நாட்களாக சோகமாக இருப்பது, திடீர் எடை இழப்பு, சீரற்ற தூக்கம், மூட் ஸ்விங்ஸ், அடிக்கடி எரிச்சலடைவது, இயல்பாக இருந்த உடல் செயல்பாடுகள் அடியோடு குறைந்து போவது மற்றும் கல்வி செயல்திறன் வழக்கத்தை விட மோசமடைவது உள்ளிட்ட நடத்தை மாற்றங்கள் குழந்தைகளிடம் தென்பட்டால் அவர்கள் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பது அவசியமாகிறது.

  உங்கள் பார்ட்னர் மரியாதை குறைவாக நடத்துவதாக உணர்கிறீர்களா..? நீங்கள் செய்ய வேண்டியவை..!

  அதேபோல் சில குழந்தைகள் வயதுக்கு மீறி வாழ்க்கையில் எதிர்மறை விஷயங்கள், மரணம் மற்றும் தற்கொலை உள்ளிட்ட விஷயங்களை பற்றி பேசினால் அது சில அடிப்படை மனநோய்களின் அறிகுறியாகவும் இருக்கலாம். அப்படியே விட்டால் பெரும் ஆபத்தில் முடியும் என்பதால் குழந்தை உளவியலாளர் அல்லது உரிய மருத்து நிபுணரை அணுக வேண்டும்.

  உங்கள் குழந்தையின் நடத்தையில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கண்காணிப்பதோடு சேர்த்து உங்கள் குழந்தைகளின் ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களிடமும் அவ்வப்போது கேட்டு தெரிந்து கொள்வது அவசியம். பிறரிடம் பழகாமல் எப்போதும் தனிமையை விரும்புவது அல்லது தன்னை தானே காயப்படுத்தி கொள்வது உள்ளிட்டவை கூட குழந்தைகளில் மனநோய் இருப்பதற்கான எச்சரிக்கை அறிகுறிகளாகும்.

  யோகா மேட் பயன்படுத்துறீங்களா..? அதை பூஞ்சை பிடிக்காமல் பராமரிக்க டிப்ஸ்..!

  அதேபோல் குழந்தைகளிடம் காணப்படும் மனநல கோளாறுகளை கண்டறிவது மருத்துவ பரிசோதனை, உணர்ச்சி அதிர்ச்சி மதிப்பீடு, மன ஆரோக்கியத்தின் குடும்ப வரலாறு குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கான கேள்விதாள் செஷன்கள் உள்ளிட்ட பல படிகளை உள்ளடக்கியது.

  Published by:Srilekha A
  First published:

  Tags: Children, Mental Health