ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

கோவிட் காலத்திற்கு பிறகு அதிகரிக்கும் சுற்றுலா பயணங்கள்...!

கோவிட் காலத்திற்கு பிறகு அதிகரிக்கும் சுற்றுலா பயணங்கள்...!

மாதிரி படம்

மாதிரி படம்

பெருந்தொற்று காரணமாக போடப்பட்ட லாக்டவுன்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பயணம்

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Chennai, India

  கோவிட் பெருந்தொற்று பல மாதங்களாக வீட்டிலேயே நம்மை அடைத்து வைத்திருந்த நிலையில், தற்போது படிப்படியாக தொற்று கணிசமாக குறைந்து காணப்படுகிறது. மேலும் உலகம் முழுவதும் பல நாடுகள் தங்கள் எல்லைகளை பழையபடி திறந்து வைத்துள்ளன.

  மேலும் கட்டுப்பாடுகளை தளர்த்தி சுற்றுலாப்பயணிகளை வரவேற்கின்றன. எனவே உலக மக்களிடையே பயணம் செய்யும் பழக்கம் முன் எப்போதும் இல்லாத வகையில் தற்போது அதிகரித்து வருகிறது. இதனிடையே Global Wellness Institute சமீபத்தில் நடத்திய ஆய்வு ஒன்றில் எதிர்காலத்தில் பயணம் என்பது நோக்கம் சார்ந்ததாக இருக்கும் என்பது தெரிய வந்துள்ளது. எனவே "பயணத்தின் எதிர்காலம் நோக்கம்" (future of travel is intention) என்று ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  ஆனால் திட்டமிட்ட அல்லது நோக்கத்துடன் கூடிய பயணம் என்றால் என்ன என்பதே பலரது மனதில் எழும் கேள்வி. ஒரு நோக்கத்துடன் பயணம் மேற்கொள்ளும் போது, குடும்பங்கள் மற்றும் பெரிய சமூகங்களுடன் இணைவதற்கு ஏற்ற சிறந்த மற்றும் வித்தியாசமான அனுபவத்தை ஒருவர் பெறலாம். International wellness resort-ன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு இயக்குனர் டாக்டர் ஜேசன் கல்ப் கூறுகையில், வலுவான உறவுகளை வளர்க்க மற்றும் பாசிட்டிவ் நினைவுகளை உருவாக்க குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து வெளியிடங்களுக்கு சுற்றுபயணம் செய்வது என்பது சமீப காலமாக ஒரு ட்ரெண்டாகி வருகிறது.

  நேர்மறையான குடும்ப தொடர்புகளை வலுவாக்கும் இந்த போக்கு உண்மையில் வயதானவர்களுக்கும் இளைஞர்களுக்கும் பல ஆரோக்கிய நன்மைகளை அளிப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. மேலும் இது ஒரு குடும்பத்தின் மன, உணர்ச்சி மற்றும் சமூக நல்வாழ்வை ஊக்குவிக்கிறது என்றார்.

  - Regenerative tourism (புனரமைப்பு சுற்றுலா) என்பது விசிட்டர்கள் தாங்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்வதற்கு முன் அந்த இடம் இருந்ததை விட சிறப்பாக அந்த இடத்தை விட்டுச் செல்ல வேண்டும் என்ற மனநிலையுடன் ஓரிடத்திற்கு பயணிப்பது ஆகும். இந்த சுற்றுலாவில் பயணிகள் தாங்கள் பார்வையிட்ட சுற்றுச்சூழலுக்கும் சமூகத்திற்கும் சாதகமான நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துகிறார்கள்.

  உதாரணமாக Forest walks (அதாவது இயற்கை சூழலில் தனியாகவோ அல்லது சிறு குழுக்களாகவோ நடப்பது). நம்மை கீழே இழுக்கும் எதிர்மறை எண்ணங்களிலிருந்து விடுபட இயற்கை நமக்கு உதவுகிறது. மன அமைதிக்கும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது. தவிர மண்ணின் நுண்ணுயிர் நமது உள் நுண்ணுயிர் சுற்றுச்சூழல் அமைப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி ஆரோக்கியமான நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஊக்குவிக்கிறது.

  - பெருந்தொற்று காரணமாக போடப்பட்ட லாக்டவுன்கள் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பயணம் என்பதே கடந்த இரண்டரை வருடங்களில் சவாலான ஒரு விஷயமாக மாறி விட்டது. இதனால் இதுநாள் வரை பயணத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதவர்கள் கூட தங்கள் இலகுக்குள் என்பதை விட்டு வெளியே வந்து வாழ்வதற்கான அர்த்தம், ஆன்மாவின் தேடல், பயணங்கள் மூலம் புதிய அனுபவங்களை பெற வேண்டும் என்ற நோக்கத்தை மனதில் கொண்டுள்ளனர். wellness industry-யும் மக்கள் தங்கள் நோக்கத்தை மறுவரையறை செய்து கொண்டதற்கு ஏற்ப செயல்பட துவங்கி இருக்கிறது.

  Read More: ஹிமாச்சலம் முதல் தமிழ்நாடு வரை.. யோகா டூரிசம் செய்ய ஏற்ற 5 இடங்கள்

  நீங்கள் டிராவல் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள் கீழே:

  - புதிய சூழலை உங்கள் உடல் பழக சிறிது நேரம் ஆகும். வெயிலில் உலவுவதன் மூலம் உங்கள் பாடி கிளாக்-ஐ புதிய சூழலுக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்யலாம். இதன் மூலம் புதிய இடத்தில கூட உங்களால் நிம்மதியாக தூங்க முடியும்.

  - புதிய இடமாக இருந்தாலும் கூட சில நிமிடங்கள் நீங்கள் மேற்கொள்ளும் வொர்கவுட் உங்கள் மனநிலையையும், உடலையும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.

  - நீண்ட பயணம் தரும் களைப்பை போக்க வைட்டமின் நிறைந்த உணவுகளை எடுக்க வேண்டும்

  - எப்போதுமே உடலில் நீர்சத்து இருப்பது அவசியம் என்றாலும் டிராவலின் போது உடலை ஹைட்ரேட்டாக வைத்திருப்பது இன்னும் முக்கியமானதாகிறது

  Published by:Srilekha A
  First published:

  Tags: Health, Immunity, Lifestyle, Travel