முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இயர்பட்ஸ்களால் அதிகரிக்கும் காது கேளாமை பிரச்னை... ஆபத்தில் இளைஞர்கள்- திடுக்கிடும் ஆய்வு முடிவுகள்!

இயர்பட்ஸ்களால் அதிகரிக்கும் காது கேளாமை பிரச்னை... ஆபத்தில் இளைஞர்கள்- திடுக்கிடும் ஆய்வு முடிவுகள்!

காது கேளாமை

காது கேளாமை

இந்தியா வயர்லெஸ் இயர்போன்கள் (TWS) முன்னணி சந்தைகளில் ஒன்றாக திகழ்கிறது. ஆண்டுக்கு சுமார் 74.7 சதவீத வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

இப்போதெல்லாம், இயர்போன்கள் மற்றும் ஹெட்ஃபோன்கள் ஆடம்பரம் என்ற நிலை மாறி அவசியமாகிவிட்டன. இயர்போன்கள் இல்லாத காதுகளை பார்ப்பதே அதிசயம் என்றாகிவிட்டது. இப்படி வளரும் ஆடியோ கேஜெட்கள் பயன்பாடு உலகளவில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான இளைஞர்கள் செவித்திறன் இழப்பின் சாத்தியமான அபாயத்தைத் தூண்டுகிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது.

மக்கள் தங்கள் பயணங்களின் போதும் மனதின் நிலைகளை மாற்றவும் பெரும்பாலும் பயன்படுத்தும் ஆயுதம் இந்த இயர்போன்கள் தான். இசை, ஸ்ட்ரீம் தொடர்கள், திரைப்படங்கள் என்று எந்த நேரத்திலும் இளம் தலைமுறையினர் தங்கள் இயர்போன்களுடனே இருக்கின்றனர்.

குறிப்பாக இந்தியா வயர்லெஸ் இயர்போன்கள் (TWS) முன்னணி சந்தைகளில் ஒன்றாக திகழ்கிறது. ஆண்டுக்கு சுமார் 74.7 சதவீத வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

இதையும் படிங்க: கர்ப்ப காலத்தில் சத்து மாத்திரைகள் கட்டாயம் எடுக்கனுமா..? உணவின் மூலம் ஊட்டச்சத்து கிடைக்காதா..?

BMJ குளோபல் ஹெல்த் இதழில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஆய்வின்படி, ஹெட்ஃபோன்கள் மற்றும் இயர்பட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் சத்தமாக இசையை கேட்பதால் சுமார் ஒரு பில்லியன் இளைஞர்கள் மற்றும் இளைஞர்கள் காது கேளாமைக்கு ஆளாகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் தென் கரோலினாவின் மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கூட்டாக சமர்ப்பிக்கப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரை, செவிவழி ஆரோக்கியத்தைப் பாதுகாக்க "பாதுகாப்பான கேட்கும்" கொள்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க அரசாங்கங்களின் கொள்கைகளின் அவசரத் தேவை இருப்பதாகக் குறிப்பிடுகிறது.

CDC (நோய் கட்டுப்பாட்டு மையம்) இன் மற்றொரு ஆய்வு, சத்தத்தின் அதிகப்படியான வெளிப்பாடு காரணமாக 6-19 வயதுடைய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரில் 12.5 சதவிகிதம் (தோராயமாக 5.2 மில்லியன்) மற்றும் 20-69 வயதுடைய பெரியவர்களில் 17 சதவிகிதம் (தோராயமாக 26 மில்லியன்) நிரந்தர காது கேளாமையால் பாதிக்கப்படுவதாக கூறியுள்ளது. அதே நேரத்தில், உலக சுகாதார அமைப்பின் (WHO) மேலும் ஒரு அறிக்கை, உலகளவில் 430 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காது கேளாமையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மதிப்பிடுகிறது.

இணையத்தில் கிடைக்கும் இன்னும் சில ஆய்வுகள் படி , ஒரு இளம் வயது குழந்தைகள் 80dB மற்றும் 75dB வரை மட்டுமே கேட்க வேண்டும் என்று கூறுகின்றன. ஆனால் மாறாக, மக்கள் தங்கள் இயர்போன்களில், பார்ட்டிகளில் 104 முதல் 112 dB வரை சத்தம் வைத்து கேட்கின்றனர். இது முடி செல்கள், சவ்வுகள், நரம்புகள், காதின் மற்ற பகுதிகளுக்கு சேதம் விளைவிக்கின்றன. நீண்ட நேரம் இது தொடர்ந்தால் தற்காலிக அல்லது நிரந்தர காது கேளாமையை ஏற்படுத்தும்.

இதையும் படிங்க : FIFA உலகக் கோப்பை இன்று தொடக்கம் : எங்கே, எப்படி நேரலையில் பார்க்கலாம்?

காதுகளை பாதுகாப்பது எப்படி:

டிவி அல்லது ஸ்பீக்கர்களைப் பார்க்கும்போது அல்லது ஹெட்ஃபோன்கள் அல்லது இயர்பட்களைப் பயன்படுத்தும் போதும் ஒலியளவைக் கட்டுப்படுத்தவும். நீங்கள் கேட்கக்கூடிய அளவு குறைந்த ஒலி அளவில் பயன்படுத்துங்கள். நீண்ட நேரம் அதிக ஒலி இருக்கும் இடங்களில் இருப்பதைத் தவிர்த்திடுங்கள். வீட்டில் ஒலிபெருக்கியை பயன்படுத்தும்போதும் ஓரளவு காதை பாதிக்காத அளவு சத்தம் வைத்துக்கொள்ளுங்கள்

நாய்ஸ் ரெடியூசிங் இயர்போன்கள்:

பின்னணி இரைச்சலைக் குறைக்க ஒலியளவை அதிகரிப்பதற்கு மாறாக ஒலி-ரத்துசெய்யும் இயர்போன்கள் மற்றும் ஹெட்ஃபோன்களை பயன்படுத்துங்கள். அதேபோல் இயர்பாட்களுக்கு பதிலாக ஹெட்ஃபோன்களை பயன்படுத்துங்கள். ஹெட்ஃபோன்கள் காது மடலை மறைக்கும் மற்றும் இசையின் அதிர்வை நேரடியாக காதுகளுக்கு அனுப்பாது. இதனால் காத்து பாதிக்கப்படுவது பெரிதளவில் குறையும்.

இடைவெளி:

ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கும் 5 நிமிட இடைவெளி அல்லது ஒவ்வொரு 60 நிமிடங்களுக்கும் ஒரு 10 நிமிட இடைவெளி எடுக்க முயற்சிக்கவும். இது உங்கள் காதுகளுக்கு ஓய்வு கொடுக்கும்.

First published:

Tags: Ear care