முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / மூளையில் படுகாயம் ஏற்பட்டால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்தால், பிழைக்கமுடியுமா என கணிக்க முடியும்

மூளையில் படுகாயம் ஏற்பட்டால் உடனடியாக ரத்தப் பரிசோதனை செய்தால், பிழைக்கமுடியுமா என கணிக்க முடியும்

மூளை காயம் அடைந்தாள் உடனடியாக இறப்பைக் கணிக்க முடியும்

மூளை காயம் அடைந்தாள் உடனடியாக இறப்பைக் கணிக்க முடியும்

Traumatic Brain Injury நடந்த அன்றே ரத்த பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் ஒரு நோயாளி பிழைக்க முடியுமா அல்லது என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை கண்டறிய முடியும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

நீண்ட நாள் உடல் நலப் பாதிப்பு, விபத்து அல்லது காயத்தால் ஒரு சிலருக்கு மூளையில் தீவிரமான காயங்கள் ஏற்படும். இது ட்ரமாட்டிக் பிரைன் இன்ஜூரி என்று கூறப்படுகிறது. மூளை சுற்றியிருக்கும் பகுதிகளில் மற்றும் மூளையில் அதிர்ச்சி உண்டாகி மூளையின் செயல்பாடுகள் பாதிப்பு அடைந்து செயலிழக்கத் துவங்கும். விபத்து அல்லது காயத்தால் ஏற்பட்ட உடல் பாதிப்புகளைச் சரி செய்ய முடிந்தாலும் கூட மூளை பாதிப்பு அடையும் பொழுது மூளைச் சாவு ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அவர்களால் இயங்க முடியாது. எனவே ஏதேனும் ஒரு காரணத்தால் தீவிரமான பிரைன் இன்ஜூரி நடந்த அன்றே மூளை எந்த பகுதிகள் எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கின்றது, எவ்வளவு செயல்படுகிறது என்ற அடிப்படையில் தான் மருத்துவர்கள் என்ன சிகிச்சைகளை வழங்கலாம் என்று முடிவு செய்வார்கள்.

TBI நடந்த அன்றே ரத்த பரிசோதனை மேற்கொள்வதன் மூலம் ஒரு நோயாளி பிழைக்க முடியுமா அல்லது என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைக் கண்டறிய முடியும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவர்கள் எந்த மாதிரியான சிகிச்சை முறைகளைத் திட்டமிடலாம் அல்லது நோயாளி பிழைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றிய அனைத்து விவரங்களையும் முன்கூட்டியே தெரிந்து கொள்ளலாம். இந்த ஆய்வு பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

மிச்சிகன் யூனிவர்சிட்டியின் ஆய்வாளரான ஃபிரெடிரிக் கோர்லே இதைப் பற்றிக் கூறுகையில் “தீவிரமான மூளை பாதிப்பின் ஆரம்பக் கட்ட மற்றும் துல்லியமான கணிப்பு, மூளை எந்த அளவுக்குப் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றி மருத்துவர்கள் தெரிந்துகொள்வதற்கு உதவும். அதுமட்டுமில்லாமல் நோயாளிகளின் குடும்பத்தினருக்கு உரிய விவரங்களை முன்கூட்டியே சொல்லி அவர்களைத் தயார் செய்வதற்கும் உதவியாக இருக்கும். மூளை பாதிப்பு அடைந்தவரை எவ்வாறு கவனித்துக் கொள்ள வேண்டும், அவர்கள் எவ்வாறு தயாராக வேண்டும், நோயாளி மீண்டு வர எத்தனை நாட்கள் ஆகும் அல்லது பாதிப்பிலிருந்து மீள முடியாது என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் கூறுவதற்கு உதவும்” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு (FDA) 2018 ஆம் ஆண்டு GFAPமற்றும் UCH-L1 பயன்படுத்த அனுமதி வழங்கியுள்ளது. இதன்மூலம் டிரமாட்டிக் பிரைன் இன்ஜூரியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு CT ஸ்கேன் ஆர்டர் செய்ய வேண்டுமா இல்லையா என்பது பற்றி மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் முடிவுசெய்யலாம்.

Also Read : ஓணம் 2022 ஸ்பெஷல்: 10 நாள் ஓணம் கொண்டாட்டங்களில் என்னென்ன நடக்கும்?

ரத்தப் பரிசோதனை மேற்கொள்வதன் மூலம், ட்ராமாட்டிக் பிரைன் இன்ஜூரியால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் உயிர்பிழைக்க முடியுமா அல்லது எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதை இரண்டு ப்ரோட்டீன் பயோமார்க்கர்கள் மூலம் கண்டறிய முடியலாம்.

GFAP என்ற பயோமார்க்கர் இறப்புடன் தொடர்புடையது மற்றும் UCH-L1 என்ற பயோமார்க்கர் தீவிரமான காயம் /உடல் நலப் பாதிப்புடன் தொடர்புடையது. இந்த ஆய்வின் விவரங்கள், லான்செட் நியூரலாஜியில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வுக்கு, TBI ஆல் பாதிக்கப்பட்ட 1700 நோயாளிகள், பாதிப்பு அடைந்த அதே நாளில் இரண்டு சாதனங்கள் பயன்படுத்தி புரதத்தைக் கணிக்க, ரத்தப் பரிசோதனைக்கு உட்பட்டனர்.

Also Read : உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டிய சத்தான சட்னி ரெசிபிகள்

பாதிப்பு நடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு, முடிவுகள் பரிசீலனை செய்யப்பட்டன. GFAP மதிப்புகள் கீழிருந்து 20 சதவிகிதத்தில் இருப்பதும், மேலிருந்து 20 சதவிகிதத்தில் இருப்பதும் கண்டறியப்பட்டது. இதில், முதல் 20 சதவிகிதத்திலிருந்தவர்கள், பாதிப்பு ஏற்பட்ட ஆறு மாதங்களில் இறந்து போகும் அபாயம் அதிகம் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

அதே போல, முதல் 20 சதவிகிதம் UCH-L1 மதிப்பு கொண்டுள்ளவர்கள், பாதிப்பு ஏற்பட்ட ஆறு மாதங்களில் இறந்து போகும் அபாயம் அதிகம் இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது.

First published:

Tags: Blood test, Brain death, Brain Health