Home /News /lifestyle /

டயட் சோடா அதிகம் குடிப்பதால் பார்வை குறைபாடு : எச்சரிக்கும் புதிய ஆய்வு!

டயட் சோடா அதிகம் குடிப்பதால் பார்வை குறைபாடு : எச்சரிக்கும் புதிய ஆய்வு!

டயட் சோடா

டயட் சோடா

டயட் சோடா அதிகமாக குடிப்பதால் டயாபெடிக் ரெடினோபதி என்ற பார்வை குறைபாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    சோடா குடிப்பதன் மூலம் உடல் எடை அதிகரிக்காது, குறைவான கலோரி தான், பாதிப்பு இல்லை என்ற தவறான கண்ணோட்டம் நிலவி வருகிறது. ஆனால், டயட் சோடா குடிப்பதால் டயாபெடிக் ரெடினோபதி என்ற பார்வை குறைபாடு ஏற்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்து இருக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்று வெளியிட்டுள்ளது.

    ஆரோக்கிய உணவுகள் என்று குறிப்பிடப்பட்டிருக்கும் ஒரு சில உணவுகள் உண்மையில் உடல்நலத்திற்கு பெரிய பாதிப்பையும், உயிருக்கே ஆபத்தையும் ஏற்படுத்தும் அளவிற்கு மிகவும் ஆபத்தான உணவாக இருக்கின்றது. வழக்கமான குளிர் பானங்கள் அல்லது கேனில் வரும் பழச்சாறுகள் குடித்தால் அதிக கலோரி இருக்கும் என்ற காரணத்தால் பலரும் டயட் சோடாவைக் குடிக்கிறார்கள்.

    2018 ஆம் ஆண்டு, மருத்துவ மற்றும் ஆய்வு கண் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், மது அல்லாத குளிர்பானங்களுக்கும் கண் ஆரோக்கியத்திற்கும் இடையே வலுவான தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. ஆல்கஹால் அல்லாத குளிர் பானங்கள் அதிகமாகக் குடிப்பதால் பார்வை குறைபாடு மற்றும் கண் ஆரோக்கியம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டது.

    Also Read : எவ்வளவு முயற்சித்தும் பக்கோடா மொறுமொறுப்பாக வரவில்லையா..? அடுத்த முறை இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க

    ஒரு வாரத்தில் ஒன்றரை லிட்டருக்கும் அதிகமான குளிர் பானங்கள் அல்லது நான்கு கேன்களுக்கும் அதிகமான சோடா அல்லது குளிர்பானங்கள் குடித்தால் டயாபெடிக் ரெட்டினோபதியின் பாதிப்பு இரண்டு மடங்கு அதிகரிக்கும் என்று இந்த ஆய்வு தெரிவித்து. இந்த ஆய்வை பற்றிய முழு விவரமும் டயட் சோடா தொடர்ந்து குடிப்பதால் ஏற்படக்கூடிய ரெட்டினோபதி என்ற பார்வைக் குறைபாட்டின் பாதிப்பு பற்றியும் இங்கே பார்க்கலாம்.

    ஆய்வில் கலந்து கொண்டவர்கள் பற்றிய விவரங்கள்

    1. ஆய்வில் பங்கேற்றவர்களின் சராசரி வயது 65
    2. பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை 609 நபர்கள்
    3. டைப் 1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 73
    4. டைப் 2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 510
    5. 26 நபர்களின் விவரம் தெரியவில்லை

    46.8% பங்கேற்பாளர்கள் குளிர்பானங்கள் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். மிச்சம் உள்ளவர்கள், டயட் சோடாக்களை அதிகம் குடிக்கும் பழக்கம் கொண்டவர்கள். இந்த இரண்டு பிரிவில், டயட் சோடா குடித்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    டயாபெட்டிக் ரெட்டினோபதி என்றால் என்ன?

    டயாபெட்டிக் ரெட்டினோபதி என்பது அதன் பெயரில் இருப்பது போலவே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படக்கூடிய மற்றொரு பாதிப்பாகும். உடலில் இருக்கும் அதிக சர்க்கரை அளவு கண்களில் இருக்கும் ரெட்டினாவை பாதித்து பார்வை குறைபாட்டை ஏற்படுத்தும். சர்க்கரை அளவு கட்டுக்குள் இல்லாமல் அதிகரித்துக்கொண்டே இருப்பவர்களுக்கு முழுமையாகப் பார்வை பறிபோகும் அபாயமும் இருக்கிறது. இதனால் தான் நீரிழிவு நோயாளிகள் குறிப்பிட்ட இடைவெளியில் கண்பார்வை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படுகிறது.

    நீரிழிவு நோய்க்கும் பார்வை குறைபாட்டுக்கும் என்ன சம்பந்தம்

    நீரிழிவு என்பது உடலில் அதிக சர்க்கரையைக் குறைக்கிறது. உடலில் இருக்கும் அதிக குளுக்கோஸ் ரத்தத்தில் உள்ள ரத்த நாளங்களைப் பாதிக்கிறது. இந்த ரத்த நாளங்கள் தலை முதல் கால் வரை உடலில் இருக்கும் எல்லா உறுப்புகளுடன் இணைந்திருக்கிறது. சின்ன சின்ன ரத்த நாளங்கள் பாதிக்கப்படும் பொழுது அது உடலில் வெவ்வேறு பிரச்சனையாக வெளிப்படும். கண்களில் இருக்கும் ரெட்டினா ச்டுரியுள்ள ரத்த நாளங்கள் பிளாக் செய்யப்படும்போது பார்வையில் பாதிப்பு உண்டாகும். வெளிச்சத்தைக் கண்டறிய உதவும் ரெட்டினாவால், கண்களின் இருக்கும் ஆப்டிக் நரம்பு வழியாக மூளைக்கு அனுப்பப்படும் சமிக்ஞைகள் குறையும். இதனால் பார்வை குறைபாடு ஏற்படும்.

    Also Read : உடல் எடையை சீக்கிரமே குறைக்க இந்த 5 டிரிங்க்ஸ் குடிங்க... கொழுப்பை எளிதில் கரைச்சிடும்..

    டயபடிக் ரெட்டினோபதியின் அறிகுறிகள்

    * கண்களின் மேல் ஏதோ மிதப்பது போன்ற உணர்வு
    * மங்கலான பார்வை
    * ஒரு நேரத்தில் தெளிவாகவும் ஒரு நேரத்தில் மங்கலாகவும் இருக்கும் பார்வை
    * பார்வை முழுமையின்மை
    * கொஞ்சம் கொஞ்சமாகப் பார்வை திறன் குறைந்து வருவது

    நீரிழிவு நோய்ப் பாதிப்பு ஏற்படக்கூடிய அனைவருமே மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருமே டயபடிக் ரெட்டினோபதி பாதிப்பு ஏற்படக்கூடிய அபாயத்தில்தான் இருக்கிறார்கள். இவர்களைத் தவிர்த்து புகையிலை பழக்கம் கொண்டவர்கள், அதிக ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொழுப்பு இருப்பவர்களுக்கும் இந்த பாதிப்பு ஏற்படும் அபாயம் அதிகம். டயபடிக் ரெட்டினோபதியால் பார்வை இழப்பு என்பது மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தாலுமே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்குமே இத்தகைய பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் பார்வையிழப்பார்கள் என்பது அர்த்தம் இல்லை.

    குறிப்பிட்ட மருத்துவரின் ஆலோசனையின் பேரில் குறிப்பிட்ட இடைவெளியில் முறையான பரிசோதனை செய்து ரத்தத்தின் அளவை கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம், பார்வை குறைபாட்டைத் தவிர்க்கலாம்.
    Published by:Janvi
    First published:

    Tags: Diet, Eye Problems, Soda

    அடுத்த செய்தி