ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

சரியாக தூங்காதவர்களுக்கு உடலுறவில் இவ்வளவு பிரச்னை வருமா... என்ன சொல்கிறது ஆய்வு?

சரியாக தூங்காதவர்களுக்கு உடலுறவில் இவ்வளவு பிரச்னை வருமா... என்ன சொல்கிறது ஆய்வு?

உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே ஒன்றுசேரக் கிடைக்கப் பெறுவது உடலுறவில்தான். இதை முறையான நேரத்தில் முழு கவனத்துடன் செய்தால்தான் அதன் உச்சகட்ட இன்பத்தை முழுமையாகப் பெற முடியும்.

உடல் மற்றும் மன ஆரோக்கியம் இரண்டுமே ஒன்றுசேரக் கிடைக்கப் பெறுவது உடலுறவில்தான். இதை முறையான நேரத்தில் முழு கவனத்துடன் செய்தால்தான் அதன் உச்சகட்ட இன்பத்தை முழுமையாகப் பெற முடியும்.

 • News18
 • 2 minute read
 • Last Updated :

  அதிதீவிர உடலுறவுக்கு தூக்கமின்மையும் ஒரு காரணம் என்று அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.

  ஜர்னல் ஹெல்த் சைக்காலஜி இதழில் வெளியான, உளவியல் ஆய்வாளர் டாக்செல்-ன் கட்டுரையில், தூக்கமின்மை மற்றும் அதனால் ஏற்படும் உடலுறவு தொடர்பான ஆய்வு ஒன்றை 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை செய்து வந்துள்ளார்.

  இந்த ஆய்வு அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பகுதியில் பல்வேறு நாடுகளிலிருந்து வந்து படித்துக்கொண்டு இருக்கும் 1,850 இளைஞர்களிடம் நடத்தப்பட்டது. 2013 முதல் 2017 வரை, 4 முறை ஆய்வு நடத்தி, புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்பட்டன. 16 வயது முதல் 19 வயது வரை இருந்த இளைஞர்கள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.

  ஆய்வின் போது இளைஞர்களிடம் வார நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில் எப்படித் தூங்குவார்கள். ஆய்வுக்காகக் கொடுக்கப்பட்ட படிவத்தை நிரப்பும் முன்பு, 4 வாரங்களாக அவர்களது தூக்கம் எப்படி இருந்தது. உடலுறவு வைத்துக்கொள்ளும் முன்பு மது, கஞ்சா அல்லது பிற போதை மருந்துகள் எடுத்துக்கொண்டார்களா, ஆணுறை அணிந்தார்களா இல்லையா என்ற கேள்விகள் கேட்கப்பட்டு இருந்தன.

  அதில், சராசரியாக 8 முதல் 10 மணிநேரம் சரியாக தூங்காதவர்கள் தான், பாதுகாப்பற்ற முறையிலும், மது அல்லது பிற போதை மருந்துகளின் ஊந்தலின் காரணமாக, ஆபத்தான பாலியல் நடத்தைகளில் ஈடுபடுவதாக தெரியவந்தது.

  சராசரியாக ஒருவர் தினமும் 8 முதல் 10 மணிநேரம் வரை தூங்க வேண்டும். ஆனால் இவ்வாறு அவர்கள் தூங்காததற்கு உடலின் உயிரியல் கடிகாரம் என்று அழைக்கப்படும் circadian rhythm-ல் நிகழும் மாற்றங்கள், காலையில் சீக்கிரம் தொடங்கும் பள்ளி, பள்ளி நேரத்தை சமநிலை செய்வதில் உள்ள சிக்கல், படிப்பு அல்லாத மற்ற சில பழக்கவழக்கங்கள் (extra curricular activities) மற்றும் எதிர்மறையான சமூக அழுத்தங்கள் போன்றவையே காரணம் என்று கூறப்படுகிறது.

  தேவையான அளவு தூங்காமல், போதை பொருட்கள் பயன்படுத்தும் இளைஞர்கள், திடீர் உணர்ச்சி காரணமாக, பாதுகாப்பில்லாத, அதிதீவிர உடலுறவில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  வார நாள் மற்றும் வார இறுதி நாட்களில் குறைவாகத் தூங்கும் நபர்களுக்கு, பள்ளி நேரங்களிலும் தூக்கம் வருவதில்லை. அது அப்படியே தொடர் கதையாகி காலப்போக்கில் அவர்களுக்கு அது பழகிப்போய்விடும் என்று டாக்செல் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.

  மேலும் பார்க்க:

  Published by:Tamilarasu J
  First published:

  Tags: Health, Health tips, Sexual life