"டிகோடிங், பார்வையாளர் நடத்தை பெண்களுக்கு எதிரான வன்முறையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள்" என்ற தலைப்பில் நடந்த சமீபத்திய ஆய்வில் பங்கேற்ற சுமார் 78.4%-த்தினர் தாங்கள் பொது இடங்களில் வன்முறையை எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர். இதுதவிர சுமார் 38.5% பேர் பொது இடங்களில் வன்முறையின் போது தலையிடவில்லை என்றும் ஏனெனில் அவர்களுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றும் கூறியதாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உபெர் இந்தியா மற்றும் IKEA அறக்கட்டளையின் ஆதரவுடன் பிரேக்த்ரூ என்ற அமைப்பு மேற்கொண்ட இந்த ஆய்வில் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஹசாரிபாக் மாவட்டம், பீகாரின் கயா மாவட்டம், ஹரியானாவின் ஜஜ்ஜார் மாவட்டம், டெல்லி, மகாராஷ்டிராவின் மும்பை பகுதி, தெலுங்கானாவின் ஹைதராபாத் பகுதி மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட இடங்களில் இருந்து டிஜிட்டல் கணக்கெடுப்பு மற்றும் 91 இன்-டெப்த் நேர்காணல்கள் மூலம் 721-க்கும் மேற்பட்ட பங்கேற்பார்களிடம் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஆணாதிக்க நடைமுறைகள் எவ்வாறு கலாச்சார ரீதியாக சமூகத்தில் உட்பொதிந்தன என்பதையும், மோசமடைந்து வரும் மன ஆரோக்கியத்திற்கும் அன்றாட தவறான கருத்து மற்றும் ஆணாதிக்கத்திற்கும் இடையிலான தொடர்பையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டியுள்ளது. அதில், பெரும்பாலான பங்கேற்பாளர்கள், குறிப்பாக பெண்கள், உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், வாய்மொழி மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற பல வன்கொடுமைகளை சந்தித்தாக கூறியுள்ளனர். மேலும் இந்த கணக்கெடுப்பில், பொது இடத்தில் பெண்களுக்கு நேரும் வன்முறை சம்பவத்திற்கு எதிராக தலையிட்டதாக 54.6 சதவீதத்தினர் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில் 55.3 சதவீதம் பேர் வன்முறை எதிர்கொள்ளும் பெண்கள் மற்றும் சிறுமிகளிடம் அசவுகரியத்தை கவனித்ததாக தெரிவித்துள்ளனர். சுமார் 67.7 சதவீதம் பேர் தங்கள் தலையீட்டால் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவித்தனர். வன்முறை சம்பவங்களை தடுக்க முயற்சித்த நபர்கள் பலவழிகளை கையாண்டதாகவும் கூறியுள்ளனர். அதாவது பயணத்தின் போது வன்கொடுமைக்கு ஆளாகும் நபர்களுடன் இருக்கைகளை மாற்றிக்கொள்வது. பின்னர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களது மொபைல் எண்ணைக் கொடுப்பது. வன்முறையில் சிக்கியவரை காப்பாற்றி மருத்துவ உதவிக்கு அழைத்துச் செல்வது போன்ற நடவடிக்கைகள் அவற்றில் அடங்கும்.
International Women’s Day 2021: ”நான் விருது நிகழ்ச்சிகளில் நிராகரிக்கப்பட்டேன்” பெண்கள் தினத்தில் மனம் திறந்து பேசிய சன்னி லியோன்
மேலும் ஒருவர் துன்புறுத்தப்படுகையில் அவர்களை பாதுகாப்பாக வீட்டிற்கு அழைத்துச் செல்வதன் மூலம் அவர்கள் உதவியதாக கணக்கெடுப்பில் பதிலளித்தவர்கள் தெரிவித்தனர். இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 45.4 சதவீதத்தினர் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சம்பவத்தில் தலையிடவில்லை என்று கூறியுள்ளனர். அதில், 38 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் என்ன செய்வது என்று தெரியாததால் அவர்கள் தலையிடவில்லை, அதில், சுமார் 31 சதவீதம் பேர் தங்களது சொந்த பாதுகாப்பு குறித்து கவலைப்பட்டதால் தலையிடவில்லை என்றும், 11.5 சதவீதம் பேர் வன்முறை சம்பவங்களில் தலையிட்டால் அவர்கள் காவல்நிலையம் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு இழுத்துச் செல்லப்படுவார்கள் என்ற பயத்தில் தலையிடுவதில்லை என்றும் தெரிவித்ததாக ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து பிரேக்த்ரூ அமைப்பின் ப்ரெசிடெண்ட் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி சோஹினி பட்டாச்சார்யா கூறியதாவது, " எங்களைப் பொறுத்தவரை, பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கு தீர்வு காணும் நேர்மறையான மக்களின் நடவடிக்கையை ஊக்குவிப்பது மிகவும் அவசியம். மேலும் அதற்கான பிரச்சாரங்களை மேற்கொள்வதை பிரேக்த்ரூ நோக்கமாக கொண்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒரு தனிப்பட்ட பிரச்சினையாக அடையாளம் காண்பதில் இருந்து பொது மக்களை நகர்த்துவதே முக்கிய நோக்கமாக உள்ளது. இது பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையை ஒரு பகிரப்பட்ட சமூக பிரச்சினை, பகிரப்பட்ட பொறுப்பு, சமூக நடவடிக்கையாக பார்க்க வேண்டும் என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.