முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / 50% புற்றுநோய் தொடர்பான இறப்புகளைத் தவிர்க்க முடியும் - ஆய்வில் வெளியான தகவல்!

50% புற்றுநோய் தொடர்பான இறப்புகளைத் தவிர்க்க முடியும் - ஆய்வில் வெளியான தகவல்!

 50% புற்றுநோய் இறப்புகளை தவிர்க்க முடியும்

50% புற்றுநோய் இறப்புகளை தவிர்க்க முடியும்

புற்றுநோயால் இறந்தவர்களில் 44.4 சதவீதம் பேர் சில ஆபத்தான பழக்க வழக்கங்களைக் கட்டுப்படுத்தாததினால் தான் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. எனவே இந்த பழக்கங்களை விட்டுவிட்டு ஆரோக்கியமான வழக்கங்களை பின்பற்ற அறியுறுத்தப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • Tamil Nadu, India

உலக சுகாதார நிறுவனம், இதய நோய்க்கு அடுத்தபடியாக, புற்றுநோய் தான் உலகளவில் அதிக மரணங்களை உண்டாக்கக் கூடிய இரண்டாவது பெரிய நோய் எனத் தெரிவித்துள்ளது. ஆனால் சமீபத்திய ஆய்வின்படி, நம்பமுடியாத அளவிற்கு ஒரு தகவல் வெளியாகியுள்ளது. உலகளவில் புற்றுநோய் தொடர்பான இறப்புகளில் கிட்டத்தட்டப் பாதி தவிர்க்கக்கூடிய ஆபத்து காரணிகளால் ஏற்படுகின்றன என்றும், மறுபுறம், அந்த தவிர்க்கக் கூடிய ஆபத்துக் காரணிகளைக் கட்டுப்படுத்துதல் அல்லது நிர்வகித்தல் மூலமாகப் புற்றுநோய்க்கான அதிகபட்ச அபாயம் மற்றும் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்பது தெரியவந்துள்ளது.

ஆய்வின் முடிவுகள் சொல்வது என்ன?

ஆய்வின்படி, 2019ம் ஆண்டு புற்றுநோயால் இறந்தவர்களில் 44.4 சதவீதம் பேர், மனிதர்கள் கைவிட வேண்டிய சில ஆபத்தான பழக்க வழக்கங்களைக் கட்டுப்படுத்தாததினால் தான் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மேலும் உலகளவில் 2010 முதல் 2019ம் ஆண்டு வரை புற்றுநோயால் நிகழ்ந்த 20.4 சதவீத மரணங்களும் இதே காரணங்களால் தான் நிகழ்ந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு மூலம் மனிதர்கள் என்ன மாதிரியான பழக்கங்களைக் கைவிட வேண்டும், எப்படிப்பட்ட வாழ்க்கை முறைக்கு மாற வேண்டும் என்பது தெளிவாகியுள்ளது.

50% புற்றுநோய் தொடர்பான இறப்புகளைத் தவிர்க்க முடியும்

உலகம் முழுவதும் புற்றுநோய் இறப்புக்கான முதல் மூன்று ஆபத்து காரணிகள் பின்வருமாறு:

புகைப்பிடித்தல்:

‘புகைப்பிடித்தல் புற்றுநோயை உருவாக்கும், உயிரைக் கொல்லும்’ என்ற வாசம் நம்மில் அனைவருக்குமே மிகவும் பிரபலமானது. இந்த வாசத்தில் குறிப்பிட்டுள்ளது போலவே புத்தகத்தைப்பிடிப்பதால் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மரணத்திற்கான வாய்ப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சிகரெட் புகையில் டிஎன்ஏவுக்கு தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் உள்ளன. அவை புற்றுநோய்க்கு எதிரான உண்மையான பாதுகாப்பாகச் செயல்படும் டிஎன்ஏ பகுதிகளைத் தாக்கி அழிக்கின்றன. இதனால் காலப்போக்கில் நமது செல்களில் உள்ள டிஎன்ஏ சேதம் அடைந்து புற்றுநோய் உருவாகிறது.

சிகரெட் புகைப்பது உடலின் எந்தப் பகுதியிலும் புற்றுநோயை உருவாக்கக் கூடும். வாய் மற்றும் தொண்டை, உணவுக்குழாய், வயிறு, பெருங்குடல், மலக்குடல், கல்லீரல், கணையம், குரல்வளை, மூச்சுக்குழாய், சிறுநீரகம் மற்றும் சிறுநீரக இடுப்பு, சிறுநீர்ப்பை மற்றும் கருப்பை வாய் ஆகிய உறுப்புகளில் புற்றுநோய் உருவாகும் அபாயம் அதிகமுள்ளது.

Also Read : ஆயில் ஸ்கின் முகத்தை எப்போதும் டல்லாவே காட்டுதா..? பிரைட்டாக்கும் 3 இயற்கை ஃபேஸ் பேக்குகள் இதோ...

அதிகமாக மது அருந்துதல்:

தினமும் அதிக அளவில் மது அருந்துவது, கல்லீரலைக் கடுமையாகப் பாதிக்கிறது. மதுவில் உள்ள ஆல்கஹால் கல்லீரலில் ஏற்படும் வீக்கம் மற்றும் காயங்கள் நாளடைவில் புற்றுநோய் கட்டிகள் உருவாகக் காரணமாக அமைகிறது. இதனால் கல்லீரல் புற்றுநோய் உருவாகலாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும் மது அருந்துவது மலக்குடல் மற்றும் பெருங்குடல் புற்றுநோயையும் உருவாக்கக் கூடியது. குடிப்பழக்கம் உள்ளவர்கள் ஆல்கஹால் பயன்பாட்டைக் குறைப்பது புற்றுநோயை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. ஆல்கஹால் உட்கொள்ளும் அளவை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கிறீர்களோ, அவ்வளவு அளவிற்குப் புற்றுநோய் உண்டாவதற்கான ஆபத்தும் குறையும். குறைந்த அளவில் மது அருந்துவதற்குக் கூடுதல் போனஸாக, விபத்துக்கள், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளையும் கணிசமாகக் குறைக்கலாம்.

Also Read : பார்ட் பார்டாக உடலில் கொழுப்பை கரைக்கும் உத்திகளை தெரிந்து கொள்ளுங்கள்!

உயர் உடல் நிறை குறியீட்டெண் (பிஎம்ஐ):

அதிக உடல் எடையுடன் இருப்பது சில வகை புற்றுநோய்களை உருவாக்குவதோடு, சிகிச்சையிலிருந்து மீண்ட பிறகு மறுபடியும் நோய் உண்டாகக் காரணமாக அமையலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கூடுதல் எடையைச் சுமப்பது இன்சுலின் மற்றும் இன்சுலின் வளர்ச்சி காரணி-1 என்ற ஹார்மோன்களின் அளவை உயர்த்துகிறது, இது பல்வேறு வீரியம் மிக்க நோய்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும்.

கூடுதலாக, கொழுப்பு திசு அதிக ஈஸ்ட்ரோஜனை உருவாக்குகிறது, இது மார்பக புற்றுநோயின் வளர்ச்சிக்குக் காரணமாக அமைகிறது. உடல் பருமன் நாள்பட்ட, குறைந்த அளவிலான வீக்கத்தைக் கொண்டிருப்பதற்கான அல்லது வளரும் வாய்ப்பை அதிகரிக்கிறது. குறிப்பாக வயிற்றைச் சுற்றி அதிக கொழுப்பு இருப்பது புற்றுநோய் குறித்து விடுக்கப்படும் அலர்ட் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

பிற ஆய்வு முடிவுகள்:

உலக அளவில் அதிக இறப்புகளை ஏற்படுத்தக்கூடிய புற்றுநோய் பாதிப்புகளைக் குறைக்க வேண்டும் என்றால், மக்கள் நன்கு அறியப்பட்ட குடிப்பழக்கம், புத்தகத்தைப்பிடித்தல், உடல் எடையைக் குறைத்தல் போன்ற பழக்க வழக்கங்களை மாற்ற வேண்டும் என்பதை ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி "புற்றுநோயின் அபாயத்தைக் குறைப்பதற்கான முயற்சிகள் விரிவான புற்றுநோய்க் கட்டுப்பாட்டுத் திட்டங்களுடன் இணைக்கப்பட வேண்டும், இது ஆரம்பக்கால நோயறிதல் மற்றும் திறமையான சிகிச்சைக்கு உதவும் முன்முயற்சிகளை உள்ளடக்கியது" என தெரிவிக்கின்றனர்.

top videos

    தி லான்செட் இதழில் வியாழன் அன்று வெளியிடப்பட்ட கட்டுரைக்கு பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை நிதியளித்துள்ள, இன்ஸ்டிடியூட் ஃபார் ஹெல்த் மெட்ரிக்ஸ் அண்ட் ஏவல்யூஷனின் குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் திட்டம், ஆபத்து காரணிகளுக்கும் புற்றுநோய்க்கும் இடையிலான தொடர்பைப் பகுப்பாய்வு செய்வதற்கான தரவை வெளியிட்டுள்ளது. 204 நாடுகளில் 2010 முதல் 2019 வரை புற்றுநோய் தொடர்பான இறப்புகள் மற்றும் குறைபாடுகள் குறித்து ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். 34 ஆபத்து காரணிகள் மற்றும் 23 வெவ்வேறு புற்றுநோய் வகைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Cancer, Cancer Facts, Healthy Lifestyle