Home /News /lifestyle /

வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் இதை மட்டும் தவறாம பண்ணுங்க!

வீட்டில் இருந்தே வேலை செய்பவர்கள் இதை மட்டும் தவறாம பண்ணுங்க!

மேற்கண்ட அபாயங்களை தவிர்க்க படுக்கையில் உட்காராமல் டேபிள், சேரில் அமர்ந்து வேலை பாருங்கள். நன்கு வெளிச்சமான அறையை இதற்காக பயன்படுத்துங்கள். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு பிறகு வழக்கமான இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது ஸ்கிரீனை சிறிது நேரம் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள. மனிதரில் பணிபுரியும் போது உங்கள் மணிகட்டு நேராக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

மேற்கண்ட அபாயங்களை தவிர்க்க படுக்கையில் உட்காராமல் டேபிள், சேரில் அமர்ந்து வேலை பாருங்கள். நன்கு வெளிச்சமான அறையை இதற்காக பயன்படுத்துங்கள். ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு பிறகு வழக்கமான இடைவெளிகளை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லது ஸ்கிரீனை சிறிது நேரம் பார்ப்பதை தவிர்த்து கொள்ளுங்கள. மனிதரில் பணிபுரியும் போது உங்கள் மணிகட்டு நேராக இருப்பதை உறுதி செய்யுங்கள்.

இரத்த அழுத்த செய்லபாடுகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் நமது சருமத்தை மிருதுவாக வைத்திருக்கிறது

வீட்டில் இருந்து வேலை செய்பர்கள் தங்களை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்வது அவசியம் என நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

நமது உடல் எடையில் 70% வரை நீர் உள்ளது. மேலும் இது நம்முடைய பல உடல் செயல்பாடுகளுக்கு இன்றியமையாத ஒரு அங்கமாக இருக்கின்றது. நீர் நாம் உண்ணும் உணவை திறம்பட செரிமானப்படுத்துவதற்கும், வியர்வையின் மூலம் நமது உடல் வெப்பநிலை கட்டுப்படுத்துவதற்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் இரத்த அழுத்த செய்லபாடுகளில் நீர் முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் நமது சருமத்தை மிருதுவாக வைத்திருக்கிறது. அதுவே உடலில் நீரிழப்பு பலவீனமான அறிவாற்றல் செயல்பாடு மற்றும் உடல் செயல்திறன் குறைவதற்கு கூட வழிவகுக்கும்.

எனவே நம் ஆரோக்கியத்தில் நீர் முக்கிய பங்கு வகிப்பதால், வீட்டிலிருந்து வேலை செய்யும் போது தேவையான அளவு நீர் பருகுவது அவசியம் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இது உங்கள் ஆற்றல் மட்டத்தை பராமரிக்கவும், சோர்வை வெல்லவும் உதவும். அதிக நீர் குடிப்பது அவசியம். உடலுக்கு அத்தியாவசிய தேவையாக இருக்கும் குடிநீருக்கு மாற்றாக இந்த உலகில் வேறு எதுவும் இல்லை. வீட்டில் நீங்கள் வேலை பார்க்கும் அறை ஏ.சி உதவியுடன் குளிரூட்டப்பட்டிருந்தாலும், நீங்கள் நீரேற்றத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.ஏனெனில் வீட்டில் ஏ.சியில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால் நீங்கள் தாகத்தை உணராமல் போகலாம். ஆனால் நீங்கள் தண்ணீர் குடித்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது குறித்து உடற்பயிற்சி மற்றும் உணவு ஆலோசகரான கரிமா குப்தா கூறியதாவது, ''வழக்கமான அளவில் தண்ணீர் குடிப்பது பசியின் அளவைக் குறைக்கவும், ஆற்றல் அளவுகள் அதிகமாக்கவும், செரிமான அளவை அப்படியே வைத்திருக்கவும் உதவுகிறது. எனவே எல்லோரும் வேலை செய்யும்போது தங்களது மேசையில் தண்ணீர் பாட்டிலை வைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

வீட்டிலிருந்து வேலை செய்யும் போது நீங்கள் சாப்பிடவேண்டிய சத்தான ஸ்னாக் வகைகள்!

ஒருவர் நாள் முழுவதும் தண்ணீர் பருகுவதை காட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதார நிபுணர்கள் கருதுகின்றனர். சர்க்கரை பானங்கள் மற்றும் காபி குடிப்பதை தவிர்க்கவும். வேலை செய்யும் போது, உங்கள் உழைக்கும் உற்பத்தித்திறனை அதிகரிக்க சர்க்கரை பானங்களை பருகி அதற்கு அடிமையாக வேண்டாம் என்றும் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதேபோல உங்கள் உடலில் அதிகமான காஃபின் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். எனவே அடிக்கடி காபி குடிப்பதும் சில விளைவுகளை ஏற்படுத்தலாம். எனவே இதற்கு கிரீன் டீ ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.கிரீன் டீ உங்கள் உடல் நச்சுகளை அகற்ற உதவுகிறது மற்றும் இது ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுகிறது. வெறும் நீர் குடிப்பதற்கு பதிலாக கூட புதிதாக தயாரித்த பழச்சாறுகள் மற்றும் காய்கறி சாறுகளையும் பகிரலாம். தர்பூசணி பழசாறு, எலுமிச்சை ஜூஸ், ஜல் ஜீரா, இளநீர் மற்றும் மாம்பழ ஜூஸ் ஆகியவற்றைக் குடிப்பதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். கோடை காலத்தில் இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். உடல் சோர்வு மற்றும் சலிப்பை குறைக்க காய்கறி சாற்றையும் பருகலாம்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Health Benefits, Water, Water bottle

அடுத்த செய்தி