வீட்டில் கொசு வருவதைத் தடுக்க என்ன செய்கிறீர்கள்..?

டெங்கு

டெங்குவால் இறப்பின் விளிம்பு நிலைக்குச் சென்று திரும்பியோரை விட இறந்தோர்தான் அதிகம்.

 • News18
 • Last Updated :
 • Share this:
  எந்த பருவமாக இருந்தாலும் கொசுவின் தொல்லை எப்போதும் இருந்து கொண்டே தான் இருக்கும். இதற்கு பயந்துகொண்டே பலர் மாலை நேரம் தொடங்கிவிட்டாலே கதவைத் திறக்க மாட்டார்கள். அதேபோல் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் ஒரு பக்கம் பயத்தை ஏற்படுத்துகிறது. டெங்குவால் இறப்பின் விளிம்பு நிலைக்குச் சென்று திரும்பியோரை விட இறந்தோர்தான் அதிகம்.

  சமீபத்தில் உலக டெங்கு தினம் கடைபிடிக்கப்பட்ட மே 16 தேதி இந்தியாவின் தலைநகர் டெல்லியிலேயே 2, 798 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக முனிசிபல் கார்பரேஷன் அறிவித்துள்ளது.

  இப்படி உயிரை உறிஞ்சும் டெங்குவை ஒழிக்க கொசுக்களிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்வதே சிறந்த வழி. அதற்கு என்னென்ன வழிகள் என்று பார்க்கலாம்.

  உடல் சருமம் தெரியாதவாறு முழுக்கை சட்டை, முழுக்கால் பேண்ட் அணிந்துகொள்ளலாம்.

  கொசுவை அழிக்கப் பயன்படுத்தப்படும் கெமிக்கல் ஸ்பிரே மற்றும் உடலில் பூசப்படும் க்ரீம்களில் டைதில்டொலுவமைட் ( DEET ) 10 சதவீதம் குறைவாக இருக்கும் க்ரீம்களை வாங்குங்கள்.  கதவுகள் மற்றும் ஜன்னல்களில் வலைகளை அடித்துகொள்ளுங்கள். இதனால் ஜன்னல் மற்றும் கதவுகளைக் காற்றோட்டமாகத் திறந்துகொள்ளலாம். கொசு பயம் இருக்காது.

  கொசுக்களை ஈர்க்கக் கூடிய வாசனை திரவியங்கள் மற்றும் சோப்புகளை பத்திரமாக மூடி வையுங்கள்.

  மாலை தொடங்கும் வேலையில்தான் கொசுக்கள் வெளியே வரும். அந்த சமயத்தில் வெளியே அமர்வதைத் தவிர்ப்பது நல்லது.

  வீட்டின் முன்பு குப்பைகள், சாக்கடை நீர், தண்ணீர் என தேக்கி வைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

  ஈரமான கோனி, துணிப்பை என எதுவாக இருந்தாலும் அதை அப்படியே போட்டு வைக்காதீர்கள். அதை பகலில் நன்கு காய வைத்துக்கொள்வது நல்லது. அதன்மூலமாகவும் கொசுக்கள் மொய்க்கத் துவங்கும்.
  லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.  Published by:Sivaranjani E
  First published: