இந்தியாவில் மட்டுமே இருக்கக்கூடிய மிகவும் அரிய வகை 6 விலங்குகள்!

மாதிரி படம்

1970ம் ஆண்டுக்குப் பிறகு காட்டுயிரிகளின் எண்ணிக்கை 60 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

  • News18
  • Last Updated :
  • Share this:
உணவு மற்றும் சுற்றுச் சூழல் சமநிலைக்கு காடுகள் மற்றும் அங்கு வாழும் உயிரினங்களின் பங்கு அளப்பரியது என்றாலும், அவற்றின் நிலை இன்று கவலைக்குரியதாக உள்ளது. 1970ம் ஆண்டுக்குப் பிறகு காட்டுயிரிகளின் எண்ணிக்கை 60 விழுக்காடு அளவுக்கு குறைந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்தவகையில் அழிவின் விளிம்பு மற்றும் அரிய வகைவிலங்கினங்களாக குறிப்பிடப்படும் 6 விலங்கினங்கள் இந்தியாவில் மட்டுமே இருக்கின்றன.

சிங்கவால் மகாக், செந்தூருணி வனவிலங்கு சரணாலயம், கேரளா

ஆங்கிலத்தில் சிங்கவால் குரங்கு என்றும் தமிழில் சோலை மந்தி அல்லது கருங்குரங்கு என்றும் மகாக் அழைக்கப்படுகிறது. இந்த சிங்கவால் குரங்குகள் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் வாழ்கின்றன என்றாலும், அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்கினங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது. வெள்ளை நிறத்திலான பிடரிப் பகுதியின் ரோமங்கள், கருப்பு நிற முகம் இந்த குரங்குகளின் சிறப்பம்சமாகும். சுமார் 3 முதல் 10 கிலோ எடை கொண்டதாக இருக்கும் இதன் வால் பகுதி மட்டும் சுமார் 25 செ.மீ. நீளம் இருக்கும். 20 முதல் 30 ஆண்டுகள் வரை வாழும். மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் சிங்க வால் குரங்குகள் உள்ளன. கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் உள்ள செந்தூருணி வனவிலங்குகள் சரணாலயத்தில் இந்த குரங்குகள் உள்ளன. சுற்றுலா செல்லும்போது இந்த சரணாலயத்தில் தங்கினால், இந்த குரங்குளை காணலாம். தமிழகத்தில் மேட்டுப்பாளையம் பகுதிகளிலும் காணப்படுகின்றன.

நீலகிரி மார்டன், ஆனைமலை புலிகள் காப்பகம், தமிழ்நாடு

நீலகிரி மார்டன் என ஆங்கிலத்திலும், தமிழில் கொம்பு புலி என்றும் அழைக்கப்படுகிறது. நீலகிரி மார்டென் மரநாய், கீரி, நீர்நாய் முதலிய சிறு ஊனுண்ணி வகையைச் சேர்ந்தது. மரநாயைப் போன்ற உடலும், நீண்ட அடர்ந்த வாலும், அழகான வெளிர் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிற கழுத்தும் கொண்ட ஒரு அழகான உயிரினமாகும். நீலகிரி மார்டென் வால் தவிர உடல் 55 முதல் 65 செ.மீ நீளமும் வால் 40 முதல் 45 செ.மீ நீளமும் இருக்கும். எடை ஏறத்தாழ 2.1 கிலோ கொண்டது. நீலகிரி மார்டென் பகலில் வேட்டையாடும். மரத்தை வாழிடமாகக் கொண்டிருந்தாலும் அவ்வப்போது தரைக்கு வரும். இந்த உயிரினம் சிறு பாலூட்டிகள், பறவைகள், பூச்சி முதலானவற்றை உணவாகக் கொள்கிறது. அழிந்து வரும் விலங்கினங்களுள் ஒன்றாக உள்ள நீலகிரி மார்டன், ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை உள்ளிட்ட இடங்களில் காணலாம்.

Also read... திருமணத்தை மீறிய உறவில் அதிக கவனம் செலுத்தும் பெண்கள்..இது கெட்ட செய்தியா..? கருத்துக் கணிப்பு கூறுவதென்ன?

காஷ்மீர் ஸ்டேக், டச்சிகாம் தேசிய பூங்கா, ஜம்மு காஷ்மீர்

காஷ்மீர் ஸ்டேக் அல்லது ஹங்குல் என அழைக்கப்படும் அரிய வகை சிவப்பு மான் இனங்கள் டச்சிகாம் தேசிய பூங்காக்களில் மட்டுமே உள்ளன. ஸ்ரீகரில் இருந்து 22 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த பூங்காவில் அரியவகை உயிரினங்கள் வாழும் பகுதியாகவும் குறிப்பிடப்படுகிறது. ஹங்குல், ஜம்மு காஷ்மீரின் தேசிய விலங்காகும். 20 ஆம் நூற்றாண்டில் ஜம்மு காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசங்களில் 3 ஆயிரம் முதல் 5 ஆயிரம் ஹங்குல் காணப்பட்ட நிலையில், தற்போது 150 ஹம்முல் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. டச்சிகாம் பூங்காவில் சிறுத்தை, மலைநரி மற்றும் இமயமலை செரோ ஆகியவற்றையும் கண்டுகளிக்கலாம்.

சங்காய் மான் - கெய்புல் லாம்ஜோ தேசிய பூங்கா, மணிப்பூர்

மணிப்பூரில் அமைந்துள்ள கெய்புல் லாம்ஜோ தேசிய பூங்காவில் அழிவின் விளிம்பில் இருக்கும் ஏராளமான உயிரினங்கள் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றில் முக்கியமானது சாங்காய் மான் இனமாகும். நான்கு கொம்புகளைக் கொண்ட இந்த மான் இனத்தைக் காப்பாற்றும் பொருட்டு அந்த மாநிலத்தில் ஆண்டுதோறும், சங்காய் திருவிழா 2010 ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

பிக்மி ஹாக், மனஸ் தேசிய பூங்கா (அசாம்)

பிக்மி ஹாக் என்பது பன்றியினங்களில் குள்ளமாக காணப்படும் பன்றி இனமாகும். தனக்கான வாழிடத்தை தானே அமைத்துக்கொள்ளும் இந்த பன்றியினங்கள், இமயமலை அடிவாரத்தில் அதிகம் காணப்பட்டன. காலப்போக்கில் இவை அழிந்து 200க்கும் குறைவான குட்டை பன்றிகளே உள்ளதாக கூறப்படுகிறது. அசாம் மாநிலத்தின், மனஸ் தேசிய பூங்காவில் இந்த பன்றிகளைக் காண முடியும். அதிகபட்சமாக 8 ஆண்டுகள் வரை வாழக்கூடியது.

நீலகிரி தஹ்ர், இறைவிகுளம் தேசிய பூங்கா, கேரளா
காட்டு ஆடு வகையைச் சேர்ந்த நீலகிரி தஹ்ர் மேற்கு தொடர்ச்சி மலையின் வெப்பமண்டல மழைக்காடுகளில் மட்டுமே காணப்படுகிறது. வளைந்த கொம்புகள், கரடுமுரடான மற்றும் குறுகிய ரோமங்களுடன், நீலகிரி தஹ்ர் உள்ளன. சுமார் 700 முதல் 800 ஆடுகள் மட்டுமே இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆட்டு இனங்களை கேரள மாநிலம், இறைவிக்குளம் தேசிய பூங்காவில் அதிகம் பார்க்க முடியும். இங்கு, நீல குறிஞ்சி பூக்கள் பெருமளவு பூப்பதையும் கண்டு ரசிக்கலாம்.
உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: