உடல் வலிக்கு வெது வெதுப்பான நீரில் ஒரு குளியல் போட்டால் நீங்கள் உணரும் ரிலாக்ஸ் மனநிலையை, சவுண்ட் தெரபி உங்கள் மனதுக்கு கொடுக்கிறது. பறவையின் கீச்சொலி, அருவியின் ஆர்ப்பறிக்கும் சத்தம் இதை எல்லாம் உற்று கவனிக்கும் போது நமது மனம் ஒருவித அமைதியான நிலைக்கு செல்வதை உணர முடிகிறது அல்லவா?. இதையே தான் சவுண்ட் தெரபியும் உங்களுக்கு செய்கிறது.
கொரோனா காலக்கட்டத்தில் பொருளாதார ரீதியான பிரச்சனைகள், வொர்க் ப்ரம் ஹோம் டென்ஷன், சம்பள குறைப்பு, வீட்டிற்குள்ளேயே அடைந்து கிடந்தது, நமக்கு கொரோனா வந்துவிடுமோ? என்ற அச்சம் இவை அனைத்துமே மன அழுத்தத்தை அதிகரித்து. இப்படி மன அழுத்ததிற்கு ஆளான பலரும் யோகா, தியானத்திற்கு அடுத்த படியாக சவுண்ட் தெரபி நல்ல தீர்வாக அமையும்.
இசைக்கருவிகள், இசை ஊடகங்களை பயன்படுத்தி உடலுக்கும், மனதுக்கும் முழுமையான நிம்மதி கொடுக்க ‘சவுண்ட் தெரபி’ உதவுகிறது. சவுண்ட் பாத் தெரபி எனப்படும் இசை தெரபி குளியலும் நல்ல பலனைக் கொடுக்கிறது. இது ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்த உதவதோடு, மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற மனநல கோளாறுகளை குணப்படுத்த உதவதாக என அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : கத்திரிக்காயில் சட்னி செஞ்சு சாப்பிட்டுருக்கீங்களா? மிஸ் பண்ணிடாதீங்க...
உடலில் ஏற்படும் பெரும்பாலான நோய்களுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ மன அழுத்தம் காரணமாக அமைகிறது. இரத்த அழுத்தம், உயர் இரத்த அழுத்தம், நீரழிவு நோய், பதட்டம் மற்றும் பல நோய்கள் உடல் அல்லது மன அழுத்தத்தால் உருவாகிறது. இதுபோன்ற பிரச்சனைகளை தவிர்த்து மனதையும், உடலையும் ஆரோக்கியமாக வைக்க சவுண்ட் தெரபி எவ்வாறு உதவுகிறது என பார்க்கலாம்..
மன அழுத்தத்தில் இருந்து விடுதலை:
சவுண்ட் தெரபி மன அழுத்தத்தில் இருந்து விடுபடவும், மனதை லேசாக வைத்திருக்கவும் உதவுகிறது. மனம் மற்றும் எண்ணங்களில் படிந்துள்ள அழுக்குகளை நீக்கி, உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் நீங்கள் தளர்வாக இருக்க உதவுகிறது.
தலைவலி குறையும்:
அதிக பணிச்சுமை அல்லது குடும்ப பிரச்சனை போன்ற பல விஷயங்களை நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் போது தலை வலி ஏற்படும். அதிக மன அழுத்தம், மன உளைச்சலால் உருவாகும் தலைவலியை போக்க சவுண்ட் தெரபி நல்ல சிகிச்சை முறையாகும்.
கவனத்தை ஒரு நிலைபடுத்துதல்:
எந்த வேலையை செய்வதாக இருந்தாலும் அதில் நம் முழுகவனத்தையும் செலுத்தினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். அதைத் தான் ‘பதறாத காரியம் சிதறாது’ என்பார்கள். சவுண்ட் தெரபியின் போது உங்கள் கவனம் முழுவதும் இசை மீது குவிக்கப்படுகிறது. இது கவனம் மற்றும் செறிவை மேம்படுத்த உதவுகிறது.
ஆற்றலை ஒருங்கிணைத்தல்:
நீங்கள் மல்டி டாஸ்கிங் செய்த பிறகு, உங்கள் ஆற்றல் பல்வேறு இடங்களில் திசை திருப்பப்படுகிறது. சவுண்ட் தெரபி மூலமாக உங்கள் உள் ஆற்றலை பாசிட்டிவாக மாற்றப்பட்டு, சோர்வை விடுவிக்க உதவுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.