உதயமாகும் நாளை உற்சாகமாக்குவது எப்படி?

news18
Updated: February 8, 2018, 8:29 PM IST
உதயமாகும் நாளை உற்சாகமாக்குவது எப்படி?
புத்தம் புது காலை: எப்படி தொடங்கலாம்?
news18
Updated: February 8, 2018, 8:29 PM IST
உங்களது காலை எப்படி விடிகிறதோ, அதேபோல்தான் அந்த நாள் முழுவதும் இருக்கும். காலை பொழுதே கவலைகளோடும், புலம்பல்களோடும் தொடங்கினால் பின் இரவும் அப்படியே இருக்கும். எனவே, உங்கள் காலை பொழுதை இனிமையாகவும், ஆரோக்கியமானதாகவும் தொடங்க கற்றுக் கொள்ளுங்கள்.

உங்கள் நாளை அற்புதமாகத் தொடங்க..

இன்று நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முன்பே திட்டமிட வேண்டும். எந்த முன்னேற்பாடும் இன்றி நாளை துவக்குவதுதான் பெரும்பாலான பிரச்னைகளை உண்டாக்குகிறது. இதனால் உடல்நல கோளாறுகளும் ஏற்படுகின்றன. காலை தொடங்குவதை பொறுத்துதான் நாள் முழுவதும் தீர்மானிக்கப்படும். காலையில் தாமதமாக எழுந்தால் மன அழுத்தம் ஏற்படும். காலையில் சீக்கிரம் எழுந்திருப்பது போன்ற எளிய நடைமுறைகள், நாள் முழுவதும் ஏற்படும் பதற்றத்தை தடுக்கும். இந்த நடைமுறை காலையை வழக்கமாக செயல்படுத்த உதவும். இதுபோன்ற எளிய நடைமுறையை பழக்கமாக்கி கொண்டால், நாள் முழுவதும் அமைதியாகவும், அதிக வேலை செய்யும் உத்வேகத்தையும் கொடுக்கும். காலை எவ்வளவு நேரம் உங்களுக்கு கிளம்ப தேவை என்பதை பொறுத்து, அதற்கேற்ப நேரத்திற்கு எழுந்திருக்க வேண்டும். வெளியே கிளம்ப தேவைப்படும் நேரத்தை விட கொஞ்சம் கூடுதலான நேரத்தை உங்களுக்கு ஒதுக்கி கொள்ளுங்கள். அப்போதுதான் தேவையில்லாத பதற்றத்தை தவிர்க்க முடியும். உங்கள் அலாரம் அடிக்கும் போதே, அணைத்து விட்டு படுக்கையை வி்ட்டு எழுந்து இன்றைய நாளை தொடங்குங்கள்.

காலையில் மொபைல் போனை பார்க்காதீர்கள்!

காலை எழுந்த உடன் மொபைலை தேடாதீர்கள். காலை அலாரம் அடிக்கும்போது, எழுந்து அடுத்த வேளையை பாருங்கள். மொபைல் ஃபோன் உங்களுக்கான நேரத்தை எடுத்துக்கொள்ளும். மொபைலை அலாரம் வைக்க பயன்படுத்தினால், அலாரத்தை ஆஃப் செய்து விட்டு, அங்கிருந்து எழுந்து விடுங்கள். மொபைல் அல்லது கணிணியிலோ வருகின்ற எஸ்எம்எஸ் மற்றும் மெயில் பார்பதை தவிர்ப்பது நல்லது. காலை பொழுதில் நமது சிந்தனைகளை மிக முக்கிய வேலைகளிலே செய்வது நல்ல பலனை தரும்.

காலையில் தண்ணீர் குடிப்பது நல்லது

காலையில் எழுந்த உடன் சிறிது தண்ணீர் குடிப்பது உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். உடலிலுள்ள நச்சுகளை அவை வெளியேற்றிவிடும். காபி, டீ போன்ற தேனீர் குடிப்பது உடலுக்கு தீங்கு விளைவிக்கும். மேலும் இந்த வகையான அசிட்டிக் வகைகளை தவிர்ப்பது நல்லது. தண்ணீரில் எலுமிச்சை கலந்து குடிப்பதால், உடல் வலி, இரத்த அழுத்தம், புற்றுநோய், நீரிழிவு, ஆஸ்துமா போன்ற பலவற்றுக்கும் தீர்வு கிடைக்கும்.
Loading...
அதிகாலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதால், உடலில் புது இரத்தம் உற்பத்தியாகும். இப்படி புது இரத்தம் உடலில் உற்பத்தியானால், நோய்களின் தாக்கம் குறைந்து, உடல் பிரச்னையில்லாமல் இருக்கும். அதிகாலையில் தண்ணீர் குடிப்பதால், இரத்தத்தில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தும் வெளியேற்றப்பட்டு, சருமம் பொலிவோடும் ஆரோக்கியமாகவும் காணப்படும். காலையில் எழுந்ததும் முதல் வேளையாக தண்ணீர் குடிப்பதால், இரத்த வெள்ளை அணுக்கள் நோய்த்தொற்றுக்களை எதிர்த்து போராடி, உடலை பாதுகாக்கும். தண்ணீர் குடிப்பதால் உடலின் மெட்டபாலிசம் அதிகரிக்கப்பட்டு, உடலின் எடை குறையும். தண்ணீர் மிகவும் சிறப்பான மற்றும் உடலை சுத்தப்படுத்தும் பொருள். அத்தகைய தண்ணீரை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கும்போது, அது வாந்தி, புற்றுநோய், தொண்டை பிரச்னைகள், கண் பிரச்னைகள், சிறுநீரக பிரச்னைகள், டிபி, வயிற்றுப்போக்கு, தலைவலி மற்றும் நாள்பட்ட மூட்டு வலி போன்ற நோய்கள் குணமாகும். க்ரீன் டீயில் இருக்கும் ஃப்ளேவினாய்ட், ஆன்டி ஆக்ஸிடென்ட் உடலிற்கு எதிர்ப்பு திறன் அதிகரிக்கச் செய்து, நச்சுக்களை வெளியேற்றுகிறது. குடல்களில் தங்கும் கழிவுகளை சுத்தமாக வெளியேற்றுகிறது. ஆகவே காலை நேரத்தை பசுமையான க்ரீன் டீ உடன் தொடங்கலாம்.

நாளிதழ் படிக்கும் பழக்கம்

காலை வேளைகளில் புத்தகம் அல்லது நாளிதழ்களை படிப்பது நல்ல பழக்கம். குறைந்தது 1 முதல் 3 பக்கங்களையாவது நாளிதழில் படியுங்கள். இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக இருக்க உதவும்.

காட்சிப்படுத்தி பாருங்கள்

கண்ணை மூடி சில நிமிடம் காட்சிப்படுத்தி பாருங்கள். இது நாள் முழுவதும் நம்பிக்கையுடனும், புது உத்வேகத்துடனும் செயல்பட உதவும். மற்றவர்களிடம் திறம்பட தொடர்பு கொள்ளவும் உதவுகிறது. ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்யவும் இது பெரிதும் உதவும்.

உடற்பயிற்சி

தசைப்பிடிப்புகளை எடுத்து விடுவது உடலுக்கு நல்லது. மெதுவான முதுகு தசைப்பிடிப்புகளை 4 முதல் 5 சுற்று சுற்றி எடுத்து விட வேண்டும். மேலும் நீண்ட மூச்சுப் பயிற்சியின் மூலம் அந்த நாளை நீட்சி அடைய செய்யலாம். தினமும் காலை இப்படி செய்து வந்தால் உடலில் சீராக ரத்தம் பாய உதவும். உடலை ஒரு கட்டுப்பட்டிற்குள் வைத்திருக்க உதவுகிறது. காலை உடற்பயிற்சிக்கு ஏற்றவாறு நமது உடல் சரியாகிக் கொள்ளும். இதை தினமும் பழக்கப்படுத்திக் கொண்டால், நீங்கள் எதாவது ஒருநாள் பயிற்சி செய்யாமல் விட்டாலும், நீங்கள் எப்பொழுதும் எழும் காலை நேரத்தில் உங்களுக்கு விழிப்பு ஏற்பட்டுவிடும். காலையில் செய்யும் உடற்பயிற்சியும் இரவில் நல்ல தூக்கத்திற்கு உதவுகிறது.

உடற்பயிற்சி நம்மை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கிறது. இந்த உடற்பயிற்சியை நடை, நடனம், யோகா, உடற்பயிற்சியகம் அனைத்தின் மூலமும் செய்யலாம். இது தேவையான உடல் வளர்ச்சியை ஏற்படுத்தி, நமது உடலை நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் வைத்திருகிறது. காலை பயிற்சி என்பது உங்கள் ஹார்மோன்களை தூண்டி, உங்களை விழிப்பாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க உதவுகிறது. உங்களுக்கு அலுப்பு மற்றும் தூக்க உணர்ச்சியை போக்கி புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது. காலை பயிற்சி உங்கள் தோலையும், முகத்தையும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்க உதவுகிறது. காலை உடற்பயிற்சி செரிமான கோளாறை சரி செய்ய உதவுகிறது.

உங்கள் நாளை அட்டவணைப்படுத்துங்கள்

இன்று நாள் முழுவதும் என்ன செய்ய போகிறீர்கள் என்பதை 5 நிமிடம் செலவு செய்து முடிவு செய்யுங்கள். இது இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க உதவும். இது உங்கள் முக்கியமான பணிகளை உடனுக்குடன் முடிக்க உதவும்.

உற்சாகமாய் இருங்கள்

மெல்லிய இசையுடன் கூடிய நடனம் உங்கள் காலை பதற்றத்தை தடுக்கும். மெல்லிய இசை காலையில் செய்ய வேண்டிய வேலைகளை சீராய் செய்ய உதவும். இன்னும் உங்கள் காலை பொழுதை அமைதியாக இருக்க விரும்பினால், மனதை அமைதிப்படுத்தும் மந்திரங்களை சொல்லலாம்.

சுத்தமாக வைத்துக்கொள்ளுங்கள்

படுக்கை அறைகளை சுத்தப்படுத்த கூடுதல் நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள். ஆர்வம் இல்லாமல் சுத்தப்படுத்தும் வேலையை செய்யும்போது நாள் முழுவதும் சோர்வான உணர்வு ஏற்படும்.

வாய் விட்டு சிரியுங்கள்

வாய்விட்டு சிரிக்கும்போது, உடலிலுள்ள, முக்கியமாக முகத்திலுள்ள நாடி நரம்புகள் அனைத்தும் உயிர் பெறுகின்றன. இதனால் ரத்த ஓட்டம் உடலின் எல்லா பாகங்களுக்கும் பாய்கிறது. உடலில் ஏற்படும் சிறு சிறு பாதிப்பை தானே சீர் செய்கிறது.

காலை நேர உணவு

காலை நேரத்தில் உணவை தவிர்ப்பது ஆரோக்கிய கேட்டிற்கு வழிவகுக்கும். காலை வேளையில் உணவை தவிர்க்காமல் சாப்பிடுவதால், இதயம், ஜீரண மண்டலம் மற்றும் எலும்பு ஆகியவையும் ஆரோக்கியமாக இருக்கும். காலை உணவில் நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது, அது ஜீரண சக்தியை அதிகரிக்கும். காலை உணவை முறையாக உட்கொள்பவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு இயல்பாக இருப்பதால், இடையில், பசி தோன்றாது. காலையில் சாப்பிடும்போது அதிக கொழுப்பு நிறைந்த உணவுப் பொருளாக சாப்பிடாமல், சத்தான சரிவிகித உணவாக சாப்பிடுதல் நலம். அதிக கொழுப்பு நிறைந்த உணவாக சாப்பிடும்போது, அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதற்கு பதிலாக, மந்த நிலையை உருவாக்கி விடும். ஆரோக்கியமான வாழ்வு, சுறுசுறுப்பான செயல்பாடு, உடல்நலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காலை உணவை தவிர்க்காமல், சத்தான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

8 மணி நேர தூக்கம் அவசியம்

ஒருவருக்கும் தினமும் எட்டுமணி நேர தூக்கம் அவசியம். ஒருவர் அமைதியாக நிம்மதியாக தூங்க வேண்டும். அப்படி தூங்கினால் அவர்களுக்கு அடுத்த நாளே ஆரோக்கியமாக இருக்கிறோம் என்பதை உணர முடியும். நாள் முழுக்க கடுமையாக உழைப்பவர்கள் இரவில் எட்டு மணி நேர தூக்கத்தை மேற்கொண்டால் உடலுக்கு போதிய ஓய்வு கிடைக்கிறது. இதனால் உடல் புத்துணர்ச்சி மற்றும் சுறுசுறுப்பு பெறுகிறது. அதிக நேரம் மூளைக்கு வேலை கொடுப்பவர்கள் எட்டு மணி நேரம் தூங்கினால் மூளையின் செல்கள் சீரான இடைவெளியில் ஓய்வு பெறுகிறது. இது உடல் புத்துணர்ச்சி பெறுவதோடு மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவி செய்கிறது. தினந்தோறும் எட்டு மணி நேரம் தூங்கினால் வாழ்நாளின் அளவு நீடிக்கிறது. நமது உடலில் லெப்டின் என்னும் ஹார்மோன் உள்ளது. இந்த ஹார்மோன்தான் நாம் பசியுடன் இருக்கிறோமா, இல்லையா என்பதை நமக்கு உணர்த்துகிறது. ஒருவர் சரியாக தூங்காவிட்டால் இந்த ஹார்மோனின் அளவு குறைந்துவிடும் மற்றும் அதிகப்படியான பசியையும் தூண்டும். இதனால் நிறைய உணவை சாப்பிட வைக்கும் மற்றும் உடலை பருமனாக்கிவிடும். இதுவே நல்ல தூக்கத்தை மேற்கொண்டால் லெப்டின் அளவு சீராக இருக்கும். ஒருவர் தினந்தோறும் எட்டு மணி நேரம் தூங்கினால் அவர் மன அழுத்தத்திலிருந்து விடுபடலாம். தூக்கமின்மையால் ஒருவர் துன்பப்பட்டால் அவரால் எந்த ஒரு காரியத்தையும் ஆர்வத்துடனும் கவனத்துடனும் செய்ய முடியாது.

ஒருவரின் செக்ஸ் வாழ்க்கையை தூக்கமின்மை பாதிப்படையச் செய்கிறது. எப்படியென்றால் சரியான அளவில் தூக்கத்தை மேற்கொள்ளாமல் இருக்கும் ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் அளவு பாதிப்படைகிறது. இதனால் செக்ஸ் வாழ்க்கை தடைபடுகிறது. எனவே தினந்தோறும் எட்டு மணி நேர தூக்கத்தை மேற்கொண்டு, மனைவியுடன் சந்தோஷமாகவும், ஆரோக்கியமாகவும் இருங்கள். தூக்கம் குறைவாக மேற்கொள்பவர்களைவிட எட்டுமணி நேரம் தூங்குபவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி வலிமையாக உள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் எட்டு மணி நேரத் தூக்கத்தை தவறாமல் கண்டிப்பாக மேற்கொண்டு வாருங்கள். நோய்களின் தாக்கத்திலிருந்து விடுபடுங்கள்.

15 நிமிடங்களுக்கு முன் அலாரம் வையுங்கள்

காலை உங்கள் நேரத்தை திட்டமிட்டு, அதற்கேற்ப 15 நிமிடங்களுக்கு முன் அலாரம் வையுங்கள். மெதுவாக படுக்கையை விட்டு எழுந்திருந்து, செய்திகளை பாருங்கள். பின் காலை உணவு என்ன செய்ய வேண்டும் என முடிவெடுங்கள். இது உங்களை மனதளவிலும், உடலளவிலும் சுறுசுறுப்பாக செயல்பட உதவும்.

குழந்தைகளை நேரத்திற்கு பள்ளிக்கு தயார் செய்யுங்கள்

காலை நேரத்திற்கு எழுந்து, குழந்தைக்கு தேவையானதை செய்யுங்கள். குழந்தைகளை பள்ளிக்கு தயார்படுத்துவது தனிக்கலை. அதனால் முதல் நாளே அவர்களுடைய பேக் எடுத்து வையுங்கள். மதிய உணவு என்ன என்பதை முன்பே முடிவெடுங்கள். இதனால் காலை நேர பதற்றத்தை தவிர்க்கலாம்.

காலை நேர ரொமான்ஸ்

உங்களின் தேவையை உங்கள் செயல்பாடுகளே உணர்த்துமே. காலை நேர ரொமான்ஸ் மனைவிக்கு மிகவும் பிடித்தமானது. அன்பாய் ஒரு அணைப்பு, ஆசையாய் ஒரு முத்தம் என தொடங்குங்கள். அன்று உங்கள் நாள் இனிமையாய் தொடங்கும்.

ஜெனிபர் டேனியல், செய்தியாளர் - நியூஸ்18 தமிழ்நாடு
First published: February 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்