HOME»NEWS»LIFESTYLE»social media fomo is real and it is hurting job performance finds new study esr ghta

சோஷியல் மீடியாவில் மற்றவர்களின் பதிவுகளைப் பார்த்து பொறாமை.. வேலைத்திறனை இழக்கும் இளைஞர்கள் - ஆய்வு

சமூக ஊடக பதிவுகளை பார்க்கும் போது, அவர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அந்த நபர் நினைப்பார். இது தான் வாய்ப்புகளை தவற விடுகிறோமோ என்ற பய உணர்வை உருவாக்குகிறது.

சோஷியல் மீடியாவில் மற்றவர்களின் பதிவுகளைப் பார்த்து பொறாமை.. வேலைத்திறனை இழக்கும் இளைஞர்கள் - ஆய்வு
கோப்புப்படம்
  • Share this:

சமூக ஊடக (Social Media) செயல்பாடு உண்மையில் ஒருவரின் வேலை செயல்திறனை மோசமாக்கும் என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. வேடிக்கையாக இருக்கும் நபர்களின் சமூக ஊடக பதிவுகளை பார்ப்பது, கணக்காய்வாளர்கள் (accountants) ஆடிட்டின் ஒரு பகுதியாகச் செய்யும் வேலையை எவ்வாறு மோசமாக பாதிக்கிறது என்பதை இந்த ஆய்வு மதிப்பீடு செய்தது. பொதுவாக, ஒரு நபர் பெரும்பாலான மக்களின் சமூக ஊடக பதிவுகளை பார்க்கும் போது, அவர்கள் சிறந்த வாழ்க்கையை வாழ்கிறார்கள் என்று அந்த நபர் நினைப்பார்.

இது தான் ஒருவரிடம் " வாய்ப்புகளைத் தவற விடுகிறோமோ என்ற பய (FOMO -Fear Of Missing Out)" உணர்வை உருவாக்குகிறது. அந்த உணர்வே ஒருவரின் வேலை செயல்திறன் பாதிப்படைவதற்கும் காரணமாக இருக்கிறது என ஆய்வு விளக்கியுள்ளது. இது குறித்து, ஆய்வின் இணை ஆசிரியரும் வெஸ்ட்ஃபீல்ட் மாநில பல்கலைக்கழகத்தின் உளவியல் இணை பேராசிரியருமான சம்மர் வில்லியம்ஸ் கூறியதாவது, " மக்கள் தங்களைப் பற்றி எப்படி நினைக்கிறார்கள் என்பதிலும், அவை பணியிட செயல்திறனுக்கு எவ்வாறு சம்பந்தப்பட்டுள்ளது என்பதிலும் சமூக ஊடகங்களின் தாக்கம் குறித்து நாங்கள் கவலை கொண்டிருந்தோம்" என குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல ஆய்வின் தொடர்புடைய ஆசிரியரும், பிராவிடன்ஸ் கல்லூரியில் கணக்கியல் உதவி பேராசிரியருமான ஸ்டீபன் குசெலியாஸ் கூறியதாவது, " எடுத்துக்காட்டாக, சமூக ஊடகங்களில், மற்றவர்கள் தங்கள் வாழ்க்கையின் சிறந்த பகுதிகளைப் பகிர்வதைக் நாம் காண்கிறோம். இது மற்றவர்களின் வாழ்க்கையுடன் ஒப்பிடும்போது நம் வாழ்வின் தரம் குறித்த நமது கருத்துக்களைத் தவிர்க்கலாம். ஆனால், இது வேலை செயல்திறனின் தரத்தில் எவ்வாறு தலையிடக்கூடும் என்பதை நாங்கள் அறிய விரும்பினோம்" என தெரிவித்தார்.





இது குறித்த ஆய்வுக்காக நான்கு சர்வதேச கணக்கியல் நிறுவனங்களைச் (international accounting firms) சேர்ந்த 56 தணிக்கையாளர்கள் (auditors) மீது சோதனை நடத்தப்பட்டது. ஆய்வில் பங்கேற்பாளர்கள் ஒரு தணிக்கைக்கு (auditing) ஆதாரமாக பணியாற்ற எண்ணற்ற பொருட்களின் பொருத்தத்தை மதிப்பிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர். மேலும் அவர்கள் மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர். ஒவ்வொரு குழுவும் வெவ்வேறு சமூக ஊடக உள்ளடக்கங்களுடன் தொடர்பு கொண்டன.

அதில் குழு A-வுக்கு பொது இடங்களில் வேடிக்கையாக இருக்கும் நபர்களின் படங்கள் காட்டப்பட்டன. குழு Bக்கு அதே இடங்களின் படங்கள் காட்டப்பட்டன. ஆனால் மக்கள் வேடிக்கையாக இல்லாமல் இருந்தனர். இதையடுத்து குழுC-க்கு, குழு Aக்கு காட்டப்பட்ட அதே படங்கள் கொடுக்கப்பட்டன. அதேசமயம் வேலை தொடர்பான இடுகைகளும் காட்டப்பட்டன. அதில் சில சமூக ஊடக தொடர்புகள் ஆய்வில் பங்கேற்றவர்களின் மீதும் பிரதிபலிக்கும் விளைவைக் கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

சோசியல் மீடியாவில் தினசரி 2 மணி நேரம் செலவழிப்பது மனசோர்வுக்கு வழிவகுக்கும்: எச்சரிக்கும் விஞ்ஞானிகள்!

இது பற்றி ஆசிரியர் குசெலியாஸ் பேசுகையில், " சமூக நடவடிக்கைகளில் ஈடுபடும் நபர்களின் படங்களை பார்ப்பது ஒரு தணிக்கைக்கு பொருத்தமான ஆதாரங்களை சேகரிப்பதில் பங்கேற்பாளர்களை மோசமாக்கியது என்பதை நாங்கள் கண்டறிந்தோம்" என கூறியுள்ளார். உளவியல் மற்றும் இணையம் பற்றிய பேச்சுகளில் பிரபலமான ஒரு வார்த்தையான FOMO என்ற அச்சத்தின் காரணமாக இவை இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், தங்கள் சமூக ஊடக பதிவுகளில் வேலை தொடர்பான உள்ளடக்கத்தைப் பார்ப்பது வேடிக்கையான படங்களைப் பார்ப்பதன் விளைவைக் குறைப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.



இந்த கண்டுபிடிப்புகள் கணக்கியலுக்கு மட்டுமல்ல, பொதுவாக வணிகங்களுக்கும் குறிப்பிடத்தக்கவை. சமூக ஊடகங்களில் நேரத்தை செலவிடும் மக்கள் தங்கள் வேலைகளை எவ்வாறு செய்கிறார்கள் என்பதை சோதனை ரீதியாக நிரூபிக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் என்னவென்றால், தொழிலாளர்கள் தங்கள் உண்மையான சமூக ஊடகக் கணக்குகளைப் பார்த்தால், வேலை செயல்திறனில் அவர்கள் கண்ட விளைவு பெரிதாகிவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் சமூக ஊடகங்களுக்கான பணியாளர்களின் அணுகலைக் கட்டுப்படுத்த நிறுவனங்களுக்கு யதார்த்தமான வழிகள் எதுவும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், நம் வேலைகளைச் செய்வதற்கான திறனை சமூக ஊடகங்கள் எவ்வாறு பாதிக்கலாம் என்பது குறித்த விழிப்புணர்வை இந்த ஆய்வு ஏற்படுத்தியுள்ளதாக அவர்கள் நம்புகிறார்கள். மேலும் இது குறித்து வில்லியம்ஸ் தெரிவித்தாவது, "சமூக ஊடகங்கள் மன அழுத்தத்தில் ஏற்படுத்தும் மோசமான தாக்கம், உணர்ச்சிகள் மற்றும் பணியிடத்தில் நம்மை பாதிக்கக்கூடிய நம் வாழ்க்கையின் பிற அம்சங்கள் பற்றி மற்ற ஆய்வுகளும் கண்டறிந்துள்ளன" என தெரிவித்தார். இதையடுத்து, ஆய்வின் இணை ஆசிரியரும் லூசியானா தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் கணக்கியல் உதவி பேராசிரியருமான ஜான் லாக் கூறியதாவது, "சமூக ஊடகங்களுடனான மக்கள் தொடர்பு அவர்கள் எப்படி நினைக்கிறார்கள் மற்றும் எவ்வாறு உணர்கிறார்கள் என்பதையும், அவர்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி அவர்கள் எப்படி உணர்கிறார்கள் என்பதையும் முந்தைய ஆராய்ச்சியிலிருந்து நாங்கள் அறிவோம்.

உங்களை சுற்றி இருப்பவர்களே நம்பிக்கை துரோகம் செய்கிறார்களா..? அதை கடந்து செல்லும் பாதை இதோ...

அந்த உணர்வுகள் தொழில் வல்லுநர்களின் வேலை செயல்திறனில் பணியின் தரத்திற்கான தாக்கங்களுடன் தொடர்பு உடையதாக இருக்கிறது என்று எங்கள் ஆய்வு தெரிவிக்கிறது, "என்று கூறினார். இந்தஆய்வறிக்கை "சமூக ஊடக உள்ளடக்கம் மற்றும் சமூக ஒப்பீடுகள்: தணிக்கைத் தரத்தில் அவற்றின் விளைவைப் பற்றிய ஒரு பரிசோதனை (Social Media Content and Social Comparisons: An Experimental Examination of their Effect on Audit Quality)" என்ற தலைப்பில் தணிக்கை: ஒரு ஜர்னல் ஆஃப் பிராக்டிஸ் அண்ட் தியரி (Auditing: A Journal of Practice and Theory) என்ற அமெரிக்க கணக்கியல் சங்கத்தால் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Sivaranjani E
First published: