வீட்டிலிருந்து வேலை செய்யும் போது நீங்கள் சாப்பிடவேண்டிய சத்தான ஸ்னாக் வகைகள்!

ஒர்க் ஃபிரம் ஹோம் ஸ்னாக்ஸ்

பலர் உடலுக்கு எந்த ஒரு இயக்கத்தையும் தராமல் உட்கார்ந்த நிலையிலேயே காலத்தை கழித்து வருகின்றனர்

  • Share this:
கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரும்பாலான துறை சார்ந்த ஊழியர்கள் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வீட்டில் இருந்தபடியே வேலை செய்து வருகின்றனர். மேலும் மக்கள் தங்கள் மடிக்கணினிகள் மற்றும் ஸ்மார்ட்போன்களில் நீண்ட நேரம் செலவிடுவதால், வீட்டிலிருந்து செய்யும் வேலை ஒருவரின் வழக்கமான இயக்கத்தை மாற்றிவிட்டது. பலர் உடலுக்கு எந்த ஒரு இயக்கத்தையும் தராமல் உட்கார்ந்த நிலையிலேயே காலத்தை கழித்து வருகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு இப்போது எந்தவொரு உடல் செயல்பாடுகளிலும் ஈடுபடுவது கடினமாக உள்ளது.

இந்த சூழலில், நாம் என்னமாதிரியான உணவு சாப்பிடுகிறோம் என்பதைக் கண்காணிப்பது மிகவும் முக்கியம். நீங்கள் நீண்ட நேரம் வேலை செய்கிறபோது, சமோசா, பீஸ்ஸா, பிரஞ்சு பிரைஸ் அல்லது ஆலு டிக்கி ஆகியவற்றை ஆர்டர் செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அல்லது நீங்கள் பசியுடன் இருக்கும்போது உருளைக்கிழங்கு சிப்ஸ் மற்றும் பிஸ்கட் பாக்கெட்டைப் சாப்பிட்டு வருகிறீர்களா?. இவற்றை சாப்பிடுவதால் உங்கள் உடலுக்கு நன்மைகள் எதுவும் கிடைக்க போவதில்லை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

அதிக சர்க்கரை, டிரான்ஸ் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்ட இந்த வகையான உணவுகளில் ஊட்டச்சத்து மிகவும் குறைவாக உள்ளது. எனவே நீங்கள் சாப்பிடும் உணவை, குறிப்பாக தின்பண்டங்களை கண்காணிக்க வேண்டியது அவசியம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அப்படியானால் ஒருவர் பசியுடன் இருக்கும்போது என்ன மாதிரியான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும்?



முதலில் ஜுங்க் புட்களுக்கு நோ சொல்வது அவசியம். ஒரு கிண்ணம் முளை கட்டிய பயிர்களை சாப்பிடுவது உங்கள் பசி வேதனையை கட்டுப்படுத்தும். இதனால் உங்கள் டயட்டை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இது குறித்து நிபுணர் பிரியங்கா சர்மா என்பவர் கூறுகையில், "மாலை நேரங்களில், நான் உண்மையில் பசியுடன் உணர்கிறேன். நான் வீட்டிலிருந்து வேலை செய்யத் தொடங்கிய போது, ஒரு பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸ், பிஸ்கட் அல்லது நூடுல்ஸ் ஆகியவற்றை சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தேன். இந்த வகையான ஆரோக்கியமற்ற உணவுகளை எடுத்துக்கொண்டதாலும், எந்த உடற்பயிற்சியும் இல்லாமல் இருந்ததாலும் எனது உடல் எடை அதிகரித்தது ”என்று கூறினார்.

மேலும் பேசுகையில், “ பிறகு எனது ஊட்டச்சத்து நிபுணரின் ஆலோசனையின் பேரில், நான் ஆரோக்கியமான தின்பண்டங்களை சாப்பிட ஆரம்பித்தேன். இப்போது, நான் பசியுடன் இருக்கும் போது பழம் அல்லது சாலட் ஆகியவற்றை சாப்பிடுகிறேன். வெள்ளரிகள் மற்றும் கேரட் துண்டுகளை தின்பண்டங்களாக சாப்பிட்டு மகிழ ஆரம்பித்தேன். என்னால் எனது உடல் எடையையும் நிர்வகிக்க முடிந்தது. ஆரோக்கியமான தின்பண்டங்களுக்கு நான் நன்றி செலுத்துகிறேன். " என்று கூறியுள்ளார்.



இருப்பினும், ஒருவர் பழங்களைக் எடுத்துக்கொள்ளும்போது, அது குறைந்த அளவில் இருக்க வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஒரேடியாக பழங்களை சாப்பிடுவதும் நல்லதல்ல. இதேபோல் ஒருவர் டயட்டில் சாலட்களை சேர்க்கலாம். ஆனால் அவர்கள் உணவை தவிர்த்துவிடக்கூடாது. பலர் டயட்டில் இருப்பதாக கூறி உணவுகளுக்கு பதிலாக சாலட்டுகளை சாப்பிடுகிறார்கள். அது நல்ல தீர்வாக இருக்காது. சாலட்களை ஸ்னாக் மற்றும் சிற்றுண்டியாக சாப்பிடலாம்.

Turmeric : மஞ்சளை பயன்படுத்துவதால் ஏற்படும் அறிவியல் நன்மைகள்!

மேலும் பாதாம், பைன் கொட்டைகள், பூசணி விதைகள், சூரியகாந்தி விதைகளை கொஞ்சமாக சாப்பிடுவது இன்னும் நல்லது. ஆரோக்கியமான சிற்றுண்டிக்கு ஒரு சமநிலை இருப்பது எப்போதும் முக்கியம். எனவே, ஜங்க் உணவுகளை சாப்பிடுவதை விட்டு, பழங்கள், காய்கறிகள் சாலட், நட்ஸ், பயிறு வகைகள் ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது நன்மை தரும்.

 
Published by:Sivaranjani E
First published: