Home /News /lifestyle /

உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும் 3 தாரக மந்திரங்கள்!

உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறும் 3 தாரக மந்திரங்கள்!

ஸ்மிருதி இரானி

ஸ்மிருதி இரானி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பன்முக திறன் கொண்டவர். இவர் தொடக்கத்தில் ஒரு தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமானார்.

வாழ்க்கையில் முன்னேறுவதற்கு நாம் பல வகையான முயற்சிகளை செய்து வருவோம். நாம் செய்ய கூடிய முயற்சிகள் நமக்கு சில நேரங்களில் தோல்வியை தர கூடும். அதே போல சில நேரங்களில் வெற்றியை தேடி தரும். சரியாக வெற்றி பெறுவதற்கு நாம் செலுத்த கூடிய எல்லா வகையான வெளி காரணிகளும் மிக முக்கியமானதாகும். பல நேரங்களில் நாம் எப்படி வெற்றி பெறுவது என்பதை குறித்த பல சந்தேகங்கள் இருக்கும். இதை புரிந்து கொள்ள வெற்றி பெற்றவர்களின் வழிகாட்டுதல் மிக அவசியமானதாகும்.

நம்மில் பலர் வெற்றியாளர்கள் எழுதிய புத்தகங்களை படித்து வெற்றிக்கான வழியை தேடி செல்வோம். அல்லது வாழ்வில் வெற்றி பெற்றவர்களின் படங்களை பார்த்து அதை நமது வாழ்விலும் செய்து பார்க்க முயற்சி செய்வோம். அந்த வகையில் சமகாலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிற சில தலைவர்களின் பேச்சுகளை கேட்டு அதை வாழ்க்கையில் செயல்படுத்த முயற்சிப்போம். இது போன்ற ஒரு முக்கியமான் தகவலை தான் மத்திய அமைச்சரான ஸ்மிருதி இரானி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பன்முக திறன் கொண்டவர். இவர் தொடக்கத்தில் ஒரு தொலைக்காட்சி நடிகையாக அறிமுகமானார். தனது நடிப்பின் மூலம் சிறந்த நடிகையாக பிரபலமான நிலையில் பாஜக கட்சியில் சேர்ந்து தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தார். பின்னர் மத்திய அரசின், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் அமைச்சராக பொறுப்பேற்றார். அவ்வப்போது பெண்களுக்கான வளர்ச்சி குறித்த பேச்சுக்கள் வைரலாவது வழக்கம். அதே போன்று இவர் அடிக்கடி வாழ்க்கையை சிறப்பாக வாழ்வதற்கு சில அடிப்படை கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்.



 




View this post on Instagram





 

A post shared by Smriti Irani (@smritiiraniofficial)






இந்நிலையில் சில நாட்களுக்கு முன்னர் வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மிக முக்கியமான 3 விஷயங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அதாவது வாழ்க்கையில் வெற்றி பெற 'விருப்பம்' என்கிற நிலை நமக்கு மிக முக்கியமாகும் என்று குறிப்பிட்டிருந்தார். அடுத்தாக நான் விருப்பப்படுகிற ஒன்றை அடைவதற்கு அதற்கான'உழைப்பை' செலுத்த வேண்டும் என்பதை சுட்டி காட்டியுள்ளார். இறுதியாக வாழ்க்கை பயணத்தில் வெற்றி பெற சிலவற்றை விளையாட்டாக கடந்து சேலை வேண்டும் என்பதை குறித்து கூறியுள்ளார். இதை ஆங்கிலத்தில் “a wishbone” “a backbone" "And a funny bone" என்று குறிப்பிட்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

உங்களுக்கு பிடித்தவர் உங்களை மிஸ் பண்ணும்படி உணர வைப்பதற்கான 6 உளவியல் டிப்ஸ்!

இந்த பதிவை புதன் கிழமை அன்று பதிவிட்டதால் #wednesdaywisdom என்கிற ஹேஷ்டேக்கை குறிப்பிட்டுள்ளார். அதே போன்று இந்த பதிவின் கேப்ஷனாக இந்த 3 எலும்புகளையும் நீங்கள் அவசியம் பெற்றால் தான் வெற்றி கனியை எட்ட முடியும் என்பதை சுருக்கமாக கூறியுள்ளார். இந்த பதிவை பலர் லைக் செய்து வருகின்றனர். அதே போன்று இது குறித்து தங்களது கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Life Tips, Smriti Irani, Successful Life

அடுத்த செய்தி