இயற்கை பொருட்களை பயன்படுத்தி உங்கள் வீட்டிலிருக்கும் கொசுக்களை விரட்ட எளிய வழி.!

இயற்கை பொருட்களை பயன்படுத்தி உங்கள் வீட்டிலிருக்கும் கொசுக்களை விரட்ட எளிய வழி.!

மாதிரி படம்

கொசுக்கள் வெறுக்கும் வாசனையை உங்கள் வீடு முழுவதும் பரப்புவது அவற்றை எதிர்க்க நல்ல வழி.

  • News18
  • Last Updated :
  • Share this:
எல்லா பருவகால மாற்றங்களிலும் நம் வீட்டிற்கு அழையா விருந்தாளியாக வரும் கொசுக்கள் சுட்டெரிக்கும் கோடை காலத்திலும் வந்து இம்சிக்க தவறுவதில்லை. காலை முதல் மாலை வரை கடும் வெயிலில் அலைந்து, திரிந்து இரவு வீடு நுழையும் போது, சாவி இல்லாமலே நமக்கு முன் வீட்டினுள் நுழைந்து வீடு முழுவதையும் ஆக்கிரமித்து அலைந்து திரியும் கொசுக்களின் ரீங்காரம் நம்மை எரிச்சல் அடையை செய்யும்.

மலேரியா, டெங்கு உள்ளிட்ட பல அபாயகரமான நோய்களை நமக்கு பரப்பும் கொசுக்களை ஒழிக்க காயில், கொசுவர்த்தி, கொசு ஊதுவத்தி உள்ளிட்ட பலவற்றை நாம் பயன்படுத்தினாலும் அதன் பலன் சிலமணி நேரங்களே. பின்னர் மயக்கம் தெளிந்து எழுந்து நம்மை உண்டு இல்லை என்றாகக்கிவிடும் கொசுக்கள். எனவே கொசுக்களை அண்டவிடாமல் எடுக்கும் நடவடிக்கைகளை நீங்கள் எச்சரிக்கையாக எடுக்க வேண்டும், அவற்றை சரியான வழியில் எதிர்த்துப் போராட வேண்டும். கொசுக்கள் வெறுக்கும் வாசனையை உங்கள் வீடு முழுவதும் பரப்புவதும் அவற்றை எதிர்க்க நல்ல வழி. பின்வரும் இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி கொசுக்களை உங்கள் வீட்டிலிருந்து விரட்டுங்கள்.

துளசி இலைகள்:

துளிசி இலைகளை சாப்பிட்டால் நன்மை தர கூடியது என்பது நாம் அறிந்ததே. கொசுக்களை விரட்டவும் இதனை நாம் பயன்படுத்தலாம். துளசி செடியின் வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது. உங்கள் வீட்டில் துளசி வாசனை இருக்கும் போது நிச்சயம் கொசுக்களின் தொல்லை இருக்காது. துளசியிலிருந்து தயாரிக்கப்பட்ட எண்ணெயை உங்கள் உடலில் தடவி கொண்டால் கொசு கடியிலிருந்து தப்பிக்கலாம்.துளசி இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து பின் குளிர வைத்து ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் அதை நிரப்பி, உங்கள் வீடு முழுவதும் ஸ்பிரே செய்தால் கொசுக்கள் வீட்டிற்குள் வராது.

Also read... பொலிவான சருமத்தை பெற உங்கள் டயட்டில் சேர்க்க வேண்டிய பழங்கள்!

பெப்பர்மின்ட்(மிளகுக்கீரை):

ரத்தம் உறிஞ்சும் கொசுக்களால் தாங்கி கொள்ள முடியாத மற்றொரு வாசனை பெப்பர்மின்ட் எனப்படும் மிளகுக்கீரையின் வாசனை. மிளகுக்கீரையியிலிருந்து வெளிப்படும் ஸ்ட்ராங் வாசனை உங்கள் வீட்டிலிருந்து கொசுக்களை விரட்டும். இந்த வாசனையை உங்கள் வீடு முழுவதும் பரப்ப, எண்ணெய் பர்னரில் சிறிது தண்ணீர் மற்றும் மிளகுக்கீரை எண்ணெயைச் சேர்த்து, ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி, உங்கள் வீட்டின் கதவுகளுக்கு அருகில் எண்ணெய் பர்னர்களை வைக்கலாம்.

பூண்டு:

கொசுக்களால் தாங்கிக் கொள்ள முடியாத மற்றொன்று பூண்டின் வாசனை . எனவே சமைக்கும் போது உங்கள் உணவுகளில் அதிக அளவில் பூண்டை சேர்த்து சமைக்கும் போது, சூடான பூண்டின் வாசனை வீடு முழுவதும் பரவி கொசுக்களை விரட்டும்.

வேப்பிலை(வேம்பு):

கொசுக்களை விரட்டுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று வேப்பிலைகளை பயன்படுத்துவது. இதில் இருக்கும் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகள் கொசுக்களை விரட்ட மிகவும் பயன்படுகின்றன. கொசு தொல்லையை போக்க வீட்டு வாசலில் வேப்பமரத்தை வைக்கலாம். மாலை நேரத்தில் சில வேப்ப இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அதை ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பி திரைச்சீலைகள், சோஃபாக்கள் மற்றும் கதவுகளுக்கு அருகில் என வீடு முழுவதும் தெளிக்கலாம்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: