தொழில்நுட்ப வளர்ச்சியால் மனிதர்களின் இடையே உள்ள தூரம் குறையும் என்று நினைத்தனர். ஆனால் அது பல நேரங்களில் மனிதர்கள் இடையே தூரத்தை அதிகப்படுத்துகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. ஆனால் அதற்கான தீர்வாகவும் தொழிநுட்பமே மாறுகிறது.
மனிதர்கள் இடையே தனிமை, கவலை, என்பது எப்போதும் ஒட்டிக்கொள்கிறது. முக்கியமாக வயதானவர்களுக்கு தனிமை என்பது பெரிய சிரமமாக இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் அவர்களது வாழ்க்கையை மாற்றுவதாக ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
அலெக்சா, சிரி, கூகுள் அசிஸ்டன்ட் போன்ற ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் பயன்பாடு என்பது இன்றைய காலகட்டத்தில் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுநோய் காலத்தின் போது, இங்கிலாந்து குடும்பங்களில் ஸ்மார்ட் ஸ்பீக்கர் பயன்பாடு என்பது இரட்டித்துள்ளது. 2020 இல் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதம் ஸ்மார்ட் ஸ்பீக்கர்களை பயன்படுத்தி வந்தனர். அந்த எண்ணிக்கை 2022 இல் 39 சதவீதமாக உயர்ந்துள்ளது
இதனால் UK ஆஃபீஸ் ஆஃப் கம்யூனிகேஷன்ஸ் என்கிற ஆஃப்காம் நிறுவனம் 100 ஸ்மார்ட் ஸ்பீக்கர் உரிமையாளர்கள் மற்றும் 15 உரிமையாளர்கள் அல்லாதவர்களை உள்ளடக்கிய ஒரு ஆழமான கணக்கெடுப்பை நடத்தியது. கணக்கெடுப்பில், பயன்பாட்டாளர்கள் தங்களுடன் பேசக்கூடிய ஒரு "தோழராக" ஸ்மார்ட் ஸ்பீக்கர் செயல்பட்டதாக அதிக எண்ணிக்கையில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தம்பதியின் உறவைக் குலைக்கும் ஸ்மார்ட் போன்கள்..
Ofcom நிறுவனம் நடத்திய ஆய்வில், தனிமையாக இருப்பவர்களுக்கு ஒரு நண்பராகவும் உதவியாளராகவும் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் செயல்படுவதாக தெரிகிறது.ஒரு சிலர் தனிமையான வாழ்க்கையை வெறுத்து அதை எதிர்த்து போராடும் நேரத்தில் ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் தான் கை கொடுத்து தங்கள் வாழ்க்கையை சுவாரசியப்பாக மாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், ஊனமுற்றோர் மிகவும் சுதந்திரமாக உணரவும் அவர்களது செயல்பாடுகளை எளிதாக்க உதவுகிறது.இந்த சாதனம் அவர்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியதாக பயனர்கள் தெரிவித்தனர். அவர்களது இயலாமையை மறக்கச்செய்யவும் அந்த குறையில் இருந்து அவர்களை மனதளவில் மீட்கவும் உதவியுள்ளது. தலைப்பு செய்தி முதல் தாலாட்டு வரை அனைத்தையுமே இந்த ஸ்பீக்கர்கள் மூலம் கேட்கின்றனர்.
மனிதர்கள் கூட இல்லாத குறையை ஒரு தொழில்நுட்பத்தால் ஓரளவு தான் பூர்த்தி செய்ய இயலும் என்றாலும் மனதளவில் மனிதர்கள் மிகவும் பாதிக்கப்படாமல் இருக்க இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர்கள் உதவுவது ஒரு வரமாக தான் தெரிகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Alexa, Loneliness, Smart Phone