நீண்ட நாட்கள் இளமையாக தோன்ற வேண்டுமா? சில டிப்ஸ் உங்களுக்காக..

வெளிப்புறத்தில் பிரதிபலிக்குக்கும் இளமையான தோற்றமே உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும்

நீண்ட நாட்கள் இளமையாக தோன்ற வேண்டுமா?  சில டிப்ஸ் உங்களுக்காக..
வெளிப்புறத்தில் பிரதிபலிக்குக்கும் இளமையான தோற்றமே உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும்
  • News18
  • Last Updated: January 7, 2019, 10:29 AM IST
  • Share this:
எத்தனை வயதைக் கடந்தாலும் இளமையான தோற்றத்தைப் பெற யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதற்காக பலரும் இன்று கிளீனிக்குகளுக்குச் சென்று தங்கள் இயற்கை அழகைச் சிதைத்துக் கொள்கின்றனர். இப்படிக் கடுமையான வழிமுறைகளைப் பின்பற்றாமலேயே இளமைத் தோற்றத்தைப் பெறலாம். எவ்வாறு என்பதைக் ஆர்கானிக் ஹார்வஸ்ட் நிறுவனத்தின் தேசிய பயிற்சி முகாமையாளரான பிந்தியா எ.குப்தா விளக்கம் தருகிறார்.”வெளிப்புறத்தில் பிரதிபளிக்குக் இளமையானத் தோற்றமே உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபளிக்கும். அதற்குச் சரியான வாழ்க்கை முறையும், உணவும் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்கிறார் குப்தா. மேலும் அவர் உடனடியாக வயது முதிர்ந்த தோற்றத்தை அடைவதற்கு சபேசியஸ் கிளாண்ட்ஸ் என்று சொல்லப்படும் சுரப்பியே காரணம் என்கிறார்.


இது சருமத்தை எளிதில் வறட்சியடையச் செய்யும் சுரப்ப்பியாகும். அதேபோல் அதிகம் சுரக்கும் எபிடெர்மிஸ் மற்றும் டெர்மிஸ் என்கிற இரு சுரப்பியால் சருமம் தொய்வுற்று, தோள் சுருக்கும் ஏற்படுகிறது. அதுமட்டுமன்றி அதிக வயது காரணமாக ஏற்படும் இரத்த ஓட்டக் குறைவுக் காரணத்தினாலும்  வயது முதிர்ந்த தோற்றத்தை உடனடியாக அடைந்து விடுவதாகக் கூறுகிறார்.

இவற்றைச் சரிசெய்ய சில குறிப்புகளையும் குப்தா அளிக்கிறார்.

உணவு முறைகளில் மாற்றம் வேண்டும்

ஆரோக்கியமான வாழ்க்கை முறையே நீண்ட நாட்கள் இளமையாக வாழ வழிவகுக்கிறது. அதற்கு காய்கறிகள், பழங்கள் போன்றவை அதிகமாக உண்ண வேண்டும். பசி அறிந்து உண்ண வேண்டும். நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும். இரவு சீக்கிரம் தூங்கி அதிகாலை சீக்கிரம் எழ வேண்டும். இவ்வாறு செய்வதால் உடலின் ஆண்டி ஆக்ஸிடண்ட் அளவைச் சீராக வைத்துக் கொள்கிறது. மேலும் சருமத்தைல் உள்ள  கொலாஜின் என்கிற அடுக்கு சருமச் சிதைவிலிருந்து காத்து  ஆரோக்கியமான தோற்றத்தை அளிக்கிறது.

சூரிய ஒளியிலிருந்து சருமத்தைப் பாதுகாக்க வேண்டும்சூரிய ஒளியிலிருந்து கிடைக்கக் கூடிய புற ஊதாக் கதிர்கள் சருமத்தை எளிதில் பாதிப்படையச் செய்துவிடும். இதற்கு சரியானத் தீர்வு சன் ஸ்க்ரீன். உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்க்ரீன்களை வாங்கி அப்ளை செய்யுங்கள். இது சூரிய ஒளியை சருமத்தில் நேரடியாக பட விடாமல் பாதுகாக்கும். குறிப்பு, நீங்கள் வெளியே செல்வதற்கு 15 நிமிடங்களுக்கு முன்னதாக சன் ஸ்க்ரீன் அப்ளை செய்ய வேண்டும்.

உடலின் நீரேற்ற அளவைச் சீராக வைத்து கொள்ள வேண்டும்இது உடலுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். இதற்கு அதிகமாக நீர் அருந்த வேண்டும். பழங்கள் அதிகமாக உண்ண வேண்டும்.  ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் ஹைட்ரேட்டிங் ஜெல், மாய்ஸ்சரைஸர்களைப் பயன்படுத்த வேண்டும். இல்லையேல் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்ட வாசனை எண்ணெய் பயன்படுத்தலாம். ஜோஜோபா எண்ணெய் சருமத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்க வைத்துக் கொள்கிறது.

அதிக கெமிக்கல் தயாரிப்புகளைத் தவிர்க்க வேண்டும்அதிகமான கெமிக்கல் தயாரிப்புகளைக் கொண்ட காஸ்மெடிக்குகளால் சருமத்தில் உடனடியாக சுருக்கங்கள் வரும். இதைத் தடுக்க கெமிக்கல் கலப்படங்கள் அதிகம் இல்லாத ஆர்கானிக் தயாரிப்புகளைப் பயன்படுத்துங்கள். இது சருமத்திற்கு எந்தவிதப் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. குறிப்பாக மஞ்சள், கற்றாழை,அவகோடா, டீ ட்ரீ எண்ணெய், ஷீ பட்டர், சீ சால்ட் போன்றவை சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும்.
First published: January 7, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்