சொந்த ஊரில் ஊறுகாய் போட்ட விஜய் டிவி சிவாங்கி.. அதுவும் அவருக்கு பிடித்த மாங்காய் ஊறுகாய்!

விஜய் டிவி சிவாங்கி

தனது பெரியம்மா வீட்டுக்கு போன சிவாங்கி அவர்களின் தோட்டத்தில் இருந்த மாங்காயை பறித்து மாங்காய் ஊறுகாய் செய்தார்.

 • Share this:
  குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி செய்த கேரளா ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் தான் இன்றைய ஸ்பெஷல்.

  விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பட்டி தொட்டி எங்கும் ஃபேமஸ் ஆனவர் சிவாங்கி. விஜய் டிவி சிவாங்கி என்றால் சின்ன குழந்தை கூட சொல்லும். அந்த அளவுக்கு சிவாங்கி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். ஏற்கெனவே சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் தனக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டார். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாடும் திறமையை வெளிப்படுத்தினார். அதற்கு அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தினார். 2 சீசனிலும் சிவாங்கி என்றாலே ஃபுல் ஃபனுக்கு கேரண்டி என்பது போல் சுற்றி திரிந்தார்.

  அதே போல் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிடைக்காத பேரும் புகழும், குத் வித் கோமாளி மூலம் சிவாங்கி வசமானது. முதல் சீசனை விட இரண்டாவது சீசனில் சிவாங்கி சமையலிலும் கைத்தேர்ந்தவர் ஆனார். இந்நிலையில் லாக்டவுன் காலத்தில் யூடியூப் சேனலை தொடங்கியவர் அதில் ஷாப்பிங், குக்கிங், ஷூட்டிங், மேக்கப் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் இன்று அவரின் ஊறுக்காய் வீடியோ ரெசிபியை தான் பார்க்க போகிறோம்.

  சிவாங்கியின் சொந்த ஊர் கேரளா என்பது அனைவருக்கும் தெரியும். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு தனது பெரியம்மா வீட்டுக்கு போன சிவாங்கி அவர்களின் தோட்டத்தில் இருந்த மாங்காயை பறித்து மாங்காய் ஊறுகாய் செய்தார். கேரளா ஸ்டலில் தனது பெரியம்மாவுடன் சிவாங்கி செய்த ஊறுகாய் ரெசிபியை நீங்களும் எளிமையாக வீட்டிலேயே செய்து பாருங்கள்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  தேவையான பொருட்கள்: மாங்காய், மிளகாய்ப் பொடி,உப்பு, கறிவேப்பில்லை, தேங்காய், நல்லெண்ணெய், வெல்லம், வினிகர். குறிப்பாக இதில் மிளகாய் பொடி என்பது வறுத்த மிளகாயை பொடியாக அரைத்தது என்பதை மறந்துடாதீர்கள். முதலில் மாங்காயை பொடியாக நறுக்கி அதை அதன் பச்சை வாசனை போகும் வரை கடாயில் வதக்க வேண்டும். பின்பு அந்த மாங்காயில் கல் உப்பு, வறுத்த மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை, சிறிதளவு தேங்காய் அல்லது நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து ஊற வைக்க வேண்டும்.  பிறகு, 2 டம்ளர் தண்ணீர், 1/2 கப் வினிகர், கொஞ்சம் வெல்லம் ஆகியவற்றைக் கலந்து அதை அடுப்பில் சூடு செய்து ஆற வைத்துக்கொள்ளவும். பின்பு ஏற்கெனவே இருக்கும் மாங்காய் கலவையோடு தயாரித்த வெல்லம் கலவையையும் சேர்த்து நன்கு கலந்துவிடவும். தேவைப்பட்டால் உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்துக்கொள்ளலாம். அவ்வளது தான் ஈஸியான கேரளா ஸ்டைல் மாங்காய் ஊறுகாய் தயார்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Sreeja Sreeja
  First published: