ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

Selfishness | “சுயநல பூமிடா…” இந்த குணாதிசயங்கள் இருந்தால் நீங்களும் சுயநலவாதிகளே..!

Selfishness | “சுயநல பூமிடா…” இந்த குணாதிசயங்கள் இருந்தால் நீங்களும் சுயநலவாதிகளே..!

ஆரோக்கியமான உறவு முறையில் பரஸ்பர உதவிகள் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான உறவு முறையில் பரஸ்பர உதவிகள் இருக்க வேண்டும்.

ஆரோக்கியமான உறவு முறையில் பரஸ்பர உதவிகள் இருக்க வேண்டும்.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

நம் அன்றாட வாழ்க்கையில் நேர்மையான, காமெடியான, தைரியமான மற்றும் சுயநலமான நபர்களை பார்த்துக்கொண்டிருக்கிறோம். அதில், சுயநலவாதிகளை மட்டும் கையாள்வது என்பது மிகவும் கடினமானது. கூடவே இருந்தாலும் அவர்கள் உண்மையாக நமக்கு இருக்கிறார்களா? அல்லது அவர்களின் தேவைக்காக நம்மை பயன்படுத்திக்கொள்கிறார்களா? என்ற கேள்வி எழும். நல்ல விஷயம் என்னவென்றால் சுயநலவாதிகளை எளிதாக அடையாளம் காண முடியும்.

நீங்களும் சுயநலவாதியாக இருந்தால்? என்றாவது ஒருநாள் உங்களை சுய பகுப்பாய்வுக்கு செய்திருக்கிறீர்களா?. இல்லையென்றால் இப்போது முயற்சி செய்து நீங்கள் சுயநலவாதியா? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பரஸ்பர உதவி :

ஆரோக்கியமான உறவு முறையில் பரஸ்பர உதவிகள் இருக்க வேண்டும். ஆனால், நீங்கள் நெருக்கமாக பழகும் ஒருவரிடம் இருந்து வாங்கிக் கொண்டு மட்டுமே இருக்கிறீர்கள் என்றால் நீங்கள் சுயநலவாதியே. வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு தெரிந்த ஒன்றை பிறருக்கு கற்றுத் தருவது அல்லது ஆலோசனை வழங்க தயங்குவது, நீங்கள் சுயநலவாதி என்பதற்கான அறிகுறிகளே.

பொருத்தமில்லாத பெயர்கள் :

சில பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு பெயர் வைக்கும்போது, பொருத்தமில்லாத வகையில் அவர்களுடைய பெயர் முன்வருமாறு வைத்துவிடுவார்கள். அதாவது, தந்தைபெயர் முன்பும், லேட்டஸ்ட் பெயரை பின்பும் வைத்துவிடுவார்கள். பள்ளிகளில் அல்லது பொது இடங்களில் உங்களின் குழந்தைகளை பெயரைக் கூப்பிடும்போது மற்றவர்கள் சிரிப்பார்கள். பிறரின் எள்ளல் குழந்தைகளுக்கு ஒருவிதமான வெறுப்பை கொடுக்கும். பெற்றோரின் இந்த செயலும் ஒருவிதமான சுயநலமே.

எதிர்மறை விமர்சனம் :

மனதிற்கு பட்டதை வெளிப்படையாக கூறும்போது நண்பர் அல்லது மனைவி அல்லது உறவினர்கள் என யாராக இருந்தாலும் தவறை திருத்திக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். விமர்சனங்கள் கடினமான வார்த்தைகளில் கூற வேண்டும் என்றில்லை. தங்களுடைய இயல்புக்கு ஏற்ப நல்ல மொழியாள்கையுடன் தவறை சுட்டிக்காட்டலாம். ஆனால், அவர்களின் மனம் வருத்தப்படும் என தெரிந்தே தவறுகளை சுட்டிக்காட்டுவதும் சுயநலமே.

வேலை :

வீடு அல்லது அலுவலகங்களில் ஏதாவதொரு செயல்களை தன்னால் மட்டுமே செய்ய முடியும் என்ற எண்ணம், அந்த செயலை செய்வதற்கு தான் பின்பற்றும் வழிமுறை மட்டுமே சரி என்ற கண்ணோட்டத்தில் இருப்பது சுயநலத்தின் உச்சம். புதுமையான விஷயங்களை ஏற்றுக்கொள்ள மறுப்பது, கிரியேட்டிவிட்டிக்கு இடம் கொடுக்காதது, புதிய முயற்சியை செய்து பார்க்க அஞ்சுவதன் பின்புலமே உங்களின் எண்ண ஓட்டத்துக்கான காரணமாகும். மேலும், குழுவாக இணைந்து பணியாற்றுவதற்கு உங்களுக்கு விருப்பம் இருக்காது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அகங்காரம் :

‘தான்’ என்ற அங்காரம் இருக்கும். பிறரின் செயல்களுக்கு தொந்தரவாக இருக்கும் என்ற எண்ணம் துளியும் இல்லாமல் பணியாற்றுவது. சத்தமாக தொலைபேசியில் பேசுவது உள்ளிட்ட பல செயல்களை சுட்டிக்காட்டலாம். உங்களுக்குள் இருக்கும் சுயநல எண்ணம் ஒவ்வொரு இடத்திலும் இடத்திற்கு ஏற்றார்போல் உங்களில் பரிணமிக்கும். உங்களை பகுப்பாய்வு செய்யும்போது சுயநலத்தை அறிந்து கொள்வீர்கள்.

First published:

Tags: Healthy Life, Mental Health, Mental Stress