ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

நிச்சயதார்த்தம் மற்றும் திருமண மோதிரம் ஏன் இடது கையின் 4-வது விரலில் அணியப்படுகிறது?

நிச்சயதார்த்தம் மற்றும் திருமண மோதிரம் ஏன் இடது கையின் 4-வது விரலில் அணியப்படுகிறது?

பல மேற்கத்திய நாடுகளில் நிச்சயதார்த்த மோதிரம் (Engagement ring) மற்றும் திருமண மோதிரத்தை (Wedding ring) இடது கையின் நான்காவது விரலில் (இங்கே நாம் மோதிர விரல் என்று குறிப்பிடுகிறோம்) அணியும் பாரம்பரியம் இருந்து வருகிறது.

பல மேற்கத்திய நாடுகளில் நிச்சயதார்த்த மோதிரம் (Engagement ring) மற்றும் திருமண மோதிரத்தை (Wedding ring) இடது கையின் நான்காவது விரலில் (இங்கே நாம் மோதிர விரல் என்று குறிப்பிடுகிறோம்) அணியும் பாரம்பரியம் இருந்து வருகிறது.

பல மேற்கத்திய நாடுகளில் நிச்சயதார்த்த மோதிரம் (Engagement ring) மற்றும் திருமண மோதிரத்தை (Wedding ring) இடது கையின் நான்காவது விரலில் (இங்கே நாம் மோதிர விரல் என்று குறிப்பிடுகிறோம்) அணியும் பாரம்பரியம் இருந்து வருகிறது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

ஒவ்வொருவர் வாழ்விலும் முக்கியமான தருணமாக இருப்பது திருமணம். திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் இருவருக்கும் முதலில் நிச்சயம் செய்வது நம் நாட்டில் மட்டுமல்ல உலகின் பல பகுதிகளில் பாரம்பரிய வழக்கமாக இருந்து வருகிறது. பல மேற்கத்திய நாடுகளில் நிச்சயதார்த்த மோதிரம் (Engagement ring) மற்றும் திருமண மோதிரத்தை (Wedding ring) இடது கையின் நான்காவது விரலில் (இங்கே நாம் மோதிர விரல் என்று குறிப்பிடுகிறோம்) அணியும் பாரம்பரியம் இருந்து வருகிறது. இது மிகவும் பொதுவான ஒரு விஷயமாக தோன்றினாலும் மோதிரத்தை விரலில் அணிய இடது கையின் நான்காவது விரல் தவிர வேறு எந்த விரலுக்கும் ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்ற கேள்வி மனதில் எழுகிறது.

இந்த கேள்விக்கான பதில் கத்தோலிக்க திருச்சபையுடனான உறவை சர்ச் ஆஃப் இங்கிலாந்து துண்டித்ததன் பின்னணியில் உள்ளது. திருமண மோதிரங்களை இடது கையில் அணிய வேண்டும் என்ற விதி The Book of Common Prayer-ல் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது (The Book of Common Prayer) 1549 முதல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து பயன்படுத்தும் பிரார்த்தனை புத்தகங்களின் தொகுப்பாகும். கத்தோலிக்க திருச்சபையுடனான (சீர்திருத்தம் என்று அழைக்கப்படும்) உறவுகளை சர்ச் துண்டித்த பிறகு, ஆங்கிலிகன் தேவாலயத்திற்கு வெவ்வேறு சேவை மற்றும் வழிபாட்டு புத்தகங்கள் தேவைப்பட்டன.

இதனிடையே சீர்திருத்தம் காரணமாக கத்தோலிக்க திருச்சபையுடனான உறவுகளை சர்ச் ஆஃப் இங்கிலாந்து துண்டித்த பிறகு, இந்த சர்ச்சிற்கு வெவ்வேறு சேவை மற்றும் வழிபாட்டு புத்தகங்கள் தேவைப்பட்டன. ஒரு பெண்ணின் இடது கையின் நான்காவது விரலில் மோதிரத்தை அணிவிக்குமாறு The Book of Common Prayer சீர்திருத்தவாதிகளுக்கு கட்டளையிடுகிறது.

இந்த கட்டளை சர்ச் ஆஃப் இங்கிலாந்தை (Anglican Church) கத்தோலிக்க திருச்சபையிலிருந்து வேறுபடுத்தி காட்டுகிறது. மேலும் இந்த பாரம்பரிய அம்சமே ஐரோப்பாவில் உள்ள கிறிஸ்டியானிட்டி பிற வெர்ஷன்களிலிருந்தும், சர்ச் ஆஃப் இங்கிலாந்தை வேறுபடுத்துகிறது. முன்னதாக பெரும்பாலான ஐரோப்பிய மற்றும் கத்தோலிக்க திருச்சபைகள் திருமண மோதிரங்களை வலது கையில் அணிவிக்க பரிந்துரைத்தன.

Also See... பெண்கள் சாஷ்டாங்க நமஸ்காரம் செய்யக்கூடாது ஏன் தெரியுமா...?

வலது கையில் திருமண மோதிரம் அணிவது வலிமையின் அடையாளமாக குறிப்பிடப்பட்டது. இந்த காரணத்தை தவிர இடது கையின் நான்காவது விரலில் திருமண மோதிரத்தை அணியும் வழக்கம் அலெக்ஸாண்டிரியாவின் அபியனுடன் (Appian) தொடர்புடையது. Appian 2-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு கிரேக்க வரலாற்றாசிரியர் ஆவார்.

இவரின் கூற்றுப்படி, பண்டைய எகிப்தியர்கள் இதயத்திலிருந்து ஒரு நரம்பு விரல்களுக்கு செல்கிறது என்று நம்பினர். எகிப்தியர்கள் ரத்த நாளத்திற்கும், நரம்புக்கும் இடையிலான வித்தியாசம் தெரியாமல் தவறாகப் புரிந்து கொண்டு அதை காதலனின் நரம்பு என்று அழைத்து இடது கை விரலில் மோதிரத்தை அணிவித்ததாக கூறி இருக்கிறார் Appian. கிறிஸ்துவ மதத்தை தவிர மற்ற மதங்களில், இடது கையின் நான்காவது விரலில் திருமண மோதிரம் அணிய வேண்டும் என்பது அவசியமில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Marriage